ஸர்வம் சக்திமயம் 

பாகம 1                                     தேவீமாஹாத்மியம்

அத்தியாயம் 7.                       பாராயண கிரமம் 

தேவியின் மாகாத்மியங்களை மார்க்கண்டேயர் விளக்கியதை தெரிந்து கொள்வதற்கு முன் தேவீ மாகாத்மிய  

பாராயண கிரமம் என்று ஒரு வழக்கம் பாரம்பரியமாக கடைபிடித்து வரப்படுகிறது. இந்த மின்னஞ்சல்கள் 

பரம்பரை தேவீ மாகாத்மிய பாராயணம் அல்ல; தேவீ மாஹாத்மியத்தியத்தை விளக்குவது தான் . இருந்தாலும் 

பாராயணக் கிராமத்தை பராமரிசிக்காமல் மேலே போனால் சரியாகாது என்பதால் அந்த முறையை சற்றே 

பார்ப்போம். பிறகு தேவீ மாஹாத்மியத்திறகுள் நுழையலாம்.

தேவீ மாஹாத்மியம் காவியத்தை சரத் மற்றும் வஸந்தகால நவராத்திரியின்பொழுது படிப்பது உத்தமமான 

என்று கருதப்படுகிறது.பாராயண கிரமத்தில்  இந்த காவியத்தில் ஒவ்வொரு ஈரடிகளும்   தேவியின் 

ஒவ்வொரு கதையை சொல்கின்ற சுலோகமாக காணப்படுகிறது என்றாலும் அவை ஒவ்வொன்றும் ஒரு 

மந்திரமாகக் கருதப் படுகிறது.

தேவீ மாஹாத்மியம் பாராயணம்  செய்வதற்கு இரண்டு முறைகள் பரிந்துரைக்கப் படுகின்றன.முதல் கிரமம்

 ‘ த்ரயங்கம்’  எனப் படுகிறது.இந்த முறையில் மூன்று தியான சுலோகம் சொல்லிவிட்டு நவாக்‌ஷரி மந்திரத்தை 

பஜித்து விட்டு ஆரம்பிப்பது முறை.த்ரயாங்கத்தில் முதலில் தேவீ கவசம்  ,தேவீ அர்களம், மற்றும் தேவீ கீலகம் 

படித்து விட்டு நவாக்‌ஷரி மந்திரத்தை ஜபிக்கவேண்டும்.நவாக்‌ஷரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக 

கருதப்படுகிறது. ஆகவே முறையாக குருவிடமிருந்து கற்றுக் கொண்டு தான் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம் 

என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு கட்டுப்பாடு.

 இரண்டாவது முறை ‘ நவாங்கம்’ எனப்படுகின்றன.இந்த முறையின் கீழ் ஒன்பது பிரார்த்தனை சுலோகம்
உள்ளன.அவை முறையே . நியாஸ் 2.ஆவாஹனா 3.நமானி 4. அர்களம் 5. கீலகம் 6. ஹிருன்யா 7. தாளா 

8.தியானா 9. கவசம்

பொதுவாக தேவீ மாஹாத்மியம் இடைவெளி விடாமல் படிக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது.படித்து 

முடித்த பிறகு தேவீ ஸூக்தம் ஜபிக்க வேண்டும். தேவீ ஸூக்தம் என்பது எட்டாவது அத்தியாயத்தில் ஏழாவது 

சுலோகத்திலிருந்து முப்பத்தியாறாவது சுலோகம் வரை ஜபிக்கலாம் வேண்டும்.குரு நவாக்‌ஷரி மந்திரம் 

சொல்லிக் கொடுத்திருந்தால் அதையும் ஜபிக்க வேண்டும்.

இப்படி விரிவான கிரமம் அனுசரிக்க முடியாதவர்கள் பிரதம சரிதத்தை முதல் நாளும் மத்திம சரிதத்திலுள்ள 

மூன்று அத்தியாயங்களை அல்லது காண்டங்களை இரண்டாவது நாளும், உத்தம சரிதத்திலுள்ள ஒன்பது 

காண்டங்களை மூன்றாவது நாளும் படிக்க வேண்டும்.

இதுவும் முடியாதவர்கள் ஏழு நாட்களாக பாராயணத்தை வைத்துக் கொள்ளலாம்.ஆனால் மூன்று நாட்கள் 

பாராயணமானாலும் ஏழுநாட்கள் பாராயணமானாலும் தினமும். த்ரயங்கம் தியானம் செய்து விட்டு ஆரம்பிக்க 

வேண்டும். முடிக்கும் முன் தேவீஸூக்தத்தை பாராயணம் செய்து முடிக்க  வேண்டும்.மேலும் ஒரு காண்டத்தை 

படிக்க ஆரம்பித்து விட்டால், அந்த காண்டம் முடியும் வரை இடைவேளை எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி 

தடை ஏற்பட்டால் மீண்டும் அந்த காண்டத்தை முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.சுலோக்கங்களின் 

பொருள் தெரியாமலே படிப்பதும் பலன் தராது என்கிறார்கள், நம் முன்னோர்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s