ஸர்வம் சக்திமயம்

பாகம் 1.                                    தேவீ மாஹாத்மியம்

அத்தியாயம்                                 தேவீ கவசம் 1

தேவீ கவசம் மனித சரீரத்திற்கு தேவி ஒரு கவசமாக – பாது காவலாக இருக்கிறாள் என்ற கருத்தை 

மிகவும் வலுவாக கூறுகிறது. தேவியின் ஒவ்வொரு பெயரும் உனக்கு பாதுகாப்பு தான் .ஒவ்வொரு பெயரிற்கும் 

ஒவ்வொருவிதமான குணமுண்டு;ஒவ்வொரு சக்தியுண்டு.பெயரும் உருவமும் ஒன்றுக்கொன்று 

தொடர்புடையது என்பது இதை பாராயணம் செய்பவர்களுக்குப் புரியும்.

கவசம் என்றாலே பாதுகாப்பு பெட்டகம் என்று பொருள்.போருக்கு செல்பவர்கள் தன் உடலை 

பாதுகாத்துக்கொள்ள – எதிரியின் ஆயுதங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள .இரும்பாலான 

சட்டையை போட்டு கொண்டு போகிறான்.. உலக மாதா ஆதி பராசக்தியின் ஒவ்வொரு பெயரும் கண்ணிற்குத் 

தெரிந்த தெரியாத எதிரிகளிடமிருந்து  நமக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடிய கவசம் தான். இதை  பாராயணம் 

செய்தாலோ, பாராயணம் செய்வதைக் கேட்டாலோ பாதுகாப்பு கிடைத்துவிடும்.

யார் நமது எதிரிகள்? எதிரிகள் நமக்கு வெளியிலிருந்து வர வேண்டியதில்லை.; நம்முள்ளேயே 

இருக்கிறார்கள். அந்த எதிரிகளை தேவீ கடாட்சம் இன்றி நம்மால் அழிக்க முடியாது.

தேவீ கவச பாராயணம் நம்மை ஊக்குவித்து, நமக்கு புத்துணர்வை ஊட்டி, நம்மை கர்மங்கள் ஆற்ற 

வைக்கின்றது. அந்த கர்மங்கள் நம்மை காப்பாற்றும்.

இந்த கவசம் ஒரு மந்திர கவசம்.மந்திரம் என்பது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.சிலரை காணும் 

பொழுதே ஒரு வித எதிர்மறையான உணர்வுகள் உண்டாகும்.சிலரைக் காணும் பொழுது நல்ல உணர்வுகள் 

உணரும்

அது போல் மந்திரோச்சாடனம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் நல்ல எண்ணங்கள் உதயமாகும். 

நமது நல்ல எண்ணங்களே ஒரு பாதுகாப்பு கவசமாக செயலாற்றும்.

தேவீ கவசம் 61 சுலோகங்களைக் கொண்டது.ஒவ்வொரு சுலோகமும் தேகத்திலுள்ள ஒவ்வொரு 

அவையவத்தையும் எல்லாவிதமான இக்கட்டான நிலைகளிலும் பாதுகாக்கின்றது.

நியாஸ்:

அஸ்யஶ்ரீதேவீ கவசஸ்தோத்ரமஹாமந்த்ரஸ்ய ப்ரஹ்மா ருஷி

அனுஷ்டிப் சந்த:!

ஶ்ரீ மஹாலக்‌ஷ்மீர் தேவதா:

ஹ்ராம் பீஜம்,ஹ்ராம் சக்தி: ஹ்ராம் கீலகம்!

ஶ்ரீ மஹாலக்‌ஷ்மீர்-ப்ராதரஸ்தன்மே ஸித்யர்ஏ ஜபல் வினியோக:!

எல்லா மந்திரங்களுக்கும் பீஜம், சக்தி, கீலகம் என்ன என்று சொல்லி மந்திரத்தை வாசிக்க வேண்டும். அது 

போல் தேவீ மாஹாத்மியத்தை படிக்கும் முன் அதற்கு பீஜமாகவிருக்கும் தேவீ கவசத்தையும், அதற்கு 

சக்தியாகவிருக்கும் சக்தி அர்களத்தையும் கீலகமாக இருக்கும் கீலகத்தையும் சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
தேவீ கவசம் மார்கண்டேயர் பிரம்மனை நோக்கி, யாரும் இதுவரை அறியாத  பிரபஞ்ச இரகசியத்தை ,எது 

முழு பாதுகாப்பை அளிக்குமோ அதை தனக்கு செல்லுமாறு கேட்கும் கேள்வியுடன் ஆரம்பிக்கிறது.

                யத்குஹ்யாம் பரமம் லோகே ஸர்வ ரகஷாகரம் ந்ருணம்,

                யன்ன கஸ்ய சிதாக்யாதம், தனமே ப்ருஹி பிதாமஹ:

அதற்கு பிரம்மன் பதிலளிக்கும் முறையாக சொன்னான் : ‘ தேவீ கவசம் என்று ஒன்று உண்டு. அது மட்டும்தான் 

பஞ்சபூதங்களாகின்ற எல்லா உயிரினங்களுக்கும் பாது காப்பை அளிக்க முடியும்’என்று ஆரம்பிக்கிறார்.

                   அஸ்தி குஹ்ய தமாம் விப்ரா,ஸர்வபூதோபகாரகம்,

                    தேவ்யாஸ்து கவசம் புண்யம் தச்ச்ருண்ஷ்வா மஹாமுனே!

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s