யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 213

தினமொரு சுலோகம்

நாள் 213

ஆத்மானந்தம்

யதா ரஜோபிர்ககனம் யதா கமலமம்புபி:

ந லிப்யதே ஹி ஸம்ஶ்லிஷ்டைர்தேஹைராத்மா ததைவ ச !

यथा रजोभिर्गगनम् यथा कमलमबुभि:

न लिप्यंतरण हि संश्लिष्टैर्देहैरात्मा तधैव च।

வஸிஷ்டர் தொடர்ந்தார்: ” உடலிற்கும் ஆத்மாவிற்கும் இடையிலுள்ள பந்தத்தைக் குறித்து உன் மனதிலுள்ள 

குழப்பத்தை ஒழித்துவிட்டால், பிறகு பூரண சாந்தி தான்.சேறில் இருந்தாலும்கூட தங்ககட்டிக்கு கேடு ஒன்றும் 

விளையாதல்லவா! அதே போல் ஆத்மாவை மாசுபடுத்த தேகத்தால் ஆகாது.நான் இதை மீண்டும்மீண்டும் 

உறுதியாகக் கூறுவேன்:’ தாமரை மலரும் நீரும் போல், ஆத்மாவும் சரீரமும் முற்றிலும் மாறுபட்டதாகும்.’

ஆனால் என்னே பரிதாபம்! இதை யாரும் செவிக்கொளவதில்லை.ஜடமான மனம் சுக போகங்களின் பின்னால் 

போவது வரை இந்த உலமாகின்ற மாயா பிரபஞ்சம் அழியுப் போவதில்லை.ஆனால் இந்த மயக்கத்திலிருந்து 

விழித்து எழுந்து விட்டால்,ஆத்ம விசாரம் துவங்கிய உடனேயே இந்த முகமூடி கிழிந்தும் விடும்.ஆகவே 

எல்லோரும் சரீரத்தில் நிலைகொள்கின்ற மனதை எழுப்பிவிட முயல வேண்டும்.அவ்வாறு தான் நாம் 

மாற்றங்களை உளவாக்குகின்ற கர்மங்களுக்கு  மேலாக செயலாற்ற இயலும்.மாறுதல்கள், ( பிறப்பு, வளர்சசி, 

இறப்பு முதலியவை ) தான் துன்பங்களுக்கெல்லாம் காரணம்.

‘ ஆகாயத்தில் நிறைந்துகிடக்கும் தூசிகள் ஆகாயத்தை பாதிக்காதது போல், சரீரம் ஆத்மாவை பாதிக்காது.’.

‘இன்ப- துன்பங்கள் ஆத்மாவின் அனுபவங்கள்  ‘ என்ற தவறானவை எண்ணம் , ஆகாயத்திலுள்ள 

மாசுக்களால் ஆகாயம் மாசுபடுகிறது என்ற எண்ணத்தை ஒத்ததாகும்.

உண்மையில் சுகங்களும் துக்கங்களும் சரீரத்தினுடையதோ, ஆத்மாவினுடையதோ அல்ல; அது வெறும் 

அஞ்ஞானத்திலிருந்து தோன்றுவது தான்.அவைகளினால் யாருக்கும் இலாபமும் நஷ்டமும் 

கிடையாது. அவைக்கு எதனுடனும்  பந்தமுமில்லை

எல்லாம் ஆத்மா மட்டுமே! அதுவே பரம சாந்தி, முதலும் முடிவுமில்லாதது.இராமா, இந்த சத்தியத்தை 

உணர்வாய்்! ஆத்மாவும் உலகமும் ஒன்றில்லை.ஆனால் அவை இரண்டுமே வேறு வேறு என்றும் கூற 

முடியாது.இவையெல்லாம் சத்தியத்தியத்தை தேடுவதற்கான ஏணிப்படிகள் மட்டுமே.ஒன்றேயான பிரம்மத்தைக் 

தவிர வேறொன்றில்லை.’நான் இதிலிருந்து மாறுபட்டுள்ளேன்’ என்பது ஒரு பிரமை தான்.இராமா, அந்த 

பிரமையைத் ஒழித்துக் கட்டு.ஒரேயொரு ஆத்மா, அதே ஆத்மாவிலேயே அனாத்மாவாக உணர்கிறது.

அப்படி அறிவதின் விளைவாக, பிறப்பு, இறப்பு, முதுமை, ஆசை, மோகம்,சிருஷ்டி, ஒன்றிற்கு மேற்பட்ட 

உயிரினங்கள் என்பன போன்ற மாயா பிரபஞ்சம் உன்னில் உளவாகிறது.ஆனால் அப்படி 

எதுவுமேயில்லை.இருப்பது ஒன்றே! அதுவே சத்தியம்! இராமா துன்பத்தை கைவெடிவாய்.இரட்டை 

மனோபாவத்தை விட்டொழி. தன் நலனில் கூட அக்கறையில்லாமல்- ஏனென்றால் நல்லது கெட்டது என்பதே 

கிடையாது-ஆத்மாவில், பிரம்மத்தில் மனதை திடமாக நிலைகொள்ளச்செய். நீயாகவே அமைதியை 

அடைவாய்.மனதை உறுதிப்படுத்திக்கொள்.

உன் மனதில் துயரத்திற்கு இடமேயில்லை.உள்ளேயிருக்கின்ற நிசப்தத்தில் ஆனந்தம் கொள். தனிமையில்  

அமர்ந்து மேலும் புதுப்புது சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளாதே.உறுதியோடு மனதையும் 

இந்திரியங்களையும்ம் கட்டுப் படுத்து.ஆசை எதுவும் இல்லாமல் கிடைப்பதில் ஆத்ம திருப்தி கொள்.எதையும் 

நேடாமலும்் எதையும் இழக்காமலும் எந்த விதமான சஞ்சலங்களுக்கும் இடமில்லாமல்,வாழ்வாய்.மன 

சஞ்சலங்களை அழித்து, மோகமாகின்ற கூரிருளை இல்லாமலாக்குவாய் ஆத்மாவில் மட்டும் ஆனந்தம் 

காண்பாய்.அவ்வாறு துயரங்களிலிருந்து விடுபடுவாயாக.நிறைகடல் போன்ற  ஆத்மசமுத்திரத்தில் எங்கும் 

நிறைந்திருக்கும் பரப்பிரம்மத்தில் மூழ்கிவிடு.நிலவின் குளுமையிலென்பது போல், ஆத்மாவிலேயே 

ஆத்மானந்தத்தை அனுபவிப்பாயாக..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s