யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 212

தினமொரு சுலோகம்

நாள் 212

வசிஷ்டரின் அறிவுரை

ஹே ஜனா அபரிஞாத ஆத்மா வோ அது:க்க ஸித்தயே

பரிஞாதஸ்த்வநதாய ஸுகாயோபஶமாய ச!

हे जना अपरिज्ञात आत्मा वो दुख सिदथये 

परिज्ञातस्त्वनन्ताय सुखायोपशमाय।

வஸிஷ்டர் சொன்னார்:” இராமா, விசுவ பிரளயத்தைக்  குறித்தும், அதன் பின் உண்டாகும் பரம சாந்தியைத் 

குறித்தும் நான் சொல்லப் போவதை கவனமாக கேள். இந்த திருசிய பிரபஞ்சத்தை தாங்கி நிற்பது 

ராஜஸீகதையும் – வாசனைகள் என்னும் மாசும்,தாமஸீகதையும்- அதாவது  மாந்தியம் அல்லது 

சுறுசுறுப்பினமையும் தான்.ஒரு வீட்டின் தூண்கள்போல் தான் அவை.மாசற்றவர்கள்- மனம் நிர்மலமானவர்கள், 

பாம்பு எப்படி சட்டையை உரித்துப் போடுகிறதோ அது போல் இந்த விசுவ பிரபஞ்சத்தை துறந்து 

விடுவார்கள்.சாத்விக சுபாவமுள்ளவர்களும் கர்மத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், யந்திரத்தனமாக வாழ்க்கையை 

வாழ்கிறார் கள் என்று அர்த்தமில்லை.அவர்கள் பிரபஞ்ச உற்பத்தியைக் குறித்தும், அது தோன்றி , தொடர்ந்து 

கொண்டிருப்பதைக் குறித்தும் கர்ம  மார்ககம் வழியாகவும் விசாரணை மார்ககம் வழியாகவும் 

தேடிக்கொண்டிருப்பவர்கள்.இந்த தேடல், வேதசாஸ்திரங்களை படிப்பதன் வழியாகவும், மகான்களான 

குருசிரேஷ்டர்களின் தொடர்பு மூலமும்  முன்னேறி அவர்கள் சத்திய சாக்‌ஷாத்காரம் சீக்கிரமே 

அடைவார்கள்.விளக்கு வழங்கும் ஒளியைப் போல் சத்தியம் அவர்கள் முன் தெளிவாக தோன்றும்.சுய 

ஆத்மாவின் சுய முயற்சியால் கண்டாலல்லாமல் இந்த சத்தியத்தைத் காண முடியாது.இராமா, ஆகவே நீ 

சத்தியானவேஷணத்தில் ஈடுபடுவாயாக.சத்தியமும் மித்யையும் பிரித்து பார்த்து சத்தியத்திற்கு உன்னையே 

அர்ப்பணம் செய்வாயாக.இராமா, நீ முற்றிலும் மாசற்றவன் தான். ஆகவே உனக்கு வெற்றி 

நிச்சயம்.துவக்கத்தில் இல்லாமலிருப்பதும் சிறிது காலத்திற்கு  பின் இல்லாமலாகி 

விடக்கூடியதையும் எப்படி சத்தியம் என்று சொல்ல முடியும்.என்றும் இருக்கக் கூடிய,அதை மட்டும் தான் 

சத்தியம் என்று கூற முடியும்.அதற்கு பிறப்பு, வளர்சசி, இறப்பு எதுவும் கிடையாது.பிறப்பு , இறப்பு 

என்பதெல்லாம் மனத்திற்கும் தான்.

இராமா, இந்த சத்தியம் மனதில் உறுதிப்பட்டுவிட்டால் தானே உண்டு பண்ணிக்கொண்ட 

கட்டுப்பாடுகளெல்லாம் இல்லாமலாகி அஞ்ஞானத்திலிருந்து சுதந்திரமாவதும் மனமே தான்.ஆகவே வேத 

சாஸ்திரங்களை படித்து,அவைகளின் உதவியோடு, மனதை தர்மத்தின் வழியில் நடத்திச் 

செல்.சத்சங்கம்,ஆஸக்தி விடுதல், இவையும் மோசனத்திற்கு உதவும் கரங்கள் தான்.இவ்வாறு தானாகவே 

பக்குவமடைந்த பிறகு, ஞானியான ஒரு குருவை சரண்டை.குரு அருளுகின்ற வேத சாஸ்திரஙகள் பாடங்களை 

பக்தி சிரத்தையுடன் பின்பற்றுவதினால் காலப்போக்கில் சீடன் பூரண தூய்மையை அடைகிறான்.

இராமா, இந்த மாசற்ற ஆத்மாவை, ஆத்மாவினால் உணருவாய்.சந்திரனின் குளிர்மையான ஒளி 

வெள்ளத்தினால் ஆகாயம் முழுவதும் ஒளிமயமாகிறதல்லவா.மாயையினால் உளவான சம்சாரம் எனும் கடலில 

மாட்டிக்கொண்டு வைக்கோல் போல் நமது பிரபஞ்ச வாழ்வு ஊசலாடிக்கொண்டிருக்கின்றது.அதற்கொரு 

முடிவு வர வேண்டுமென்றால் ஆத்மவிசாரம் என்கின்ற தோணியில் ஏறவேண்டியது மிகவும் முக்கியம்..அது 

தான் ஒரே வழி.ஒழுகிக் கொண்டிருக்கும் நதியில்அகப்பட்டுக் கொண்ட மணல் நதியின் ஒழுங்க்கின் 

வேகம் குறைந்து, சாந்தமாகும் பொழுது ஒரிடத்தில் நிலைக்கின்றது.ஆத்மவித்யை நாடுகின்றவனின் 

மனதில்,சத்தியம் சாந்தமான அறிவாக-ஞானமாக உறைக்கின்றது.ஒருமுறை உறைந்து விட்டால் அது 

அழியவே அழியாது.சாம்பலால் மூடிய தங்க த் தூளை கண்டு பிடிப்பது புத்தருக்கு 

கஷ்டமானதாகத் தோன்றுகிற விஷயமே அல்ல.சத்தியத்தை கண்டறியும் வரைத் தான் 

குழப்பங்களெல்லாம்.சத்தியம் – ஞானம் மனதில் பதிந்து விட்டால்,எல்லாமே  தெளிவாக தெரியும்.

ஆத்மாவைக் குறித்துள்ள அஞ்ஞானம் தான்,உன் துன்பங்களுக்கெல்லாம் காரணம்.ஆத்மாவைக் 

குறித்துள்ள ஞானம் உன் மனதில் சாந்தியையும் ஆனநத்தையும் உளவாக்கும்”

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s