யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 214

தினமொரு சுலோகம்

நாள் 214

முக்திக்கான இரண்டு வழிகள்

கேசித்வகர்மணி ரதா விரதா அபி கர்மண:

நரகாந்நரகம் யாந்தி து:க்காது:க்கம் பயாத்பயம் !

केचित्वकरमणि रता वीरता अपि कर्मण:

नरकान्नरकम् यान्ति दु:खादु:खम् भयाद्भयम् ।
வஸிஷ்டர் தொடர்ந்தார்:” ஸ்படிகத்தின் அருகில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள் அதில் பிரதிபலித்து நிழல் 

போல் தெரிகிறதல்லவா? அது போல் போதத்தின் இருப்பு காரணமாகத்தான் எல்லா செயல்களும் இந்த 

பிரபஞ்சத்தில் நிகழ்கிறது.அந்த உண்மையை அறிந்தவன் முக்தன்.மனிதப் பிறவியெடுத்த பிறகும் இந்த 

உண்மையை அறிய முற்படாதவர்கள் சுவர்ககத்திலிருந்து நரகத்திர்கு திரும்பத் திரும்ப போய் வந்து 

கொண்டிருக்கிறார்கள்.

 கர்மத்தில் அக்கறையில்லாதவர்களும் சிலர் உண்டு.அவர்கள் கர்மங்களை நிர்பந்திக்கப்பட்டது போல் 

கட்டுப்படுத்தி அல்லது அவைகளிலிருந்து பின்வாங்கி நரகங்களிலிருந்து  நரகங்களுக்கு செல்கிறார்கள்’.

மற்று சிலரோ, தன் கர்ம பலன்களில் அக்கறை கொண்டும்,அதனாலுண்டாகின்ற வாசனைகளால் கட்டுப்பட்டும் 

வாழ்நதுகொண்டிருக்கிறார்கள்.அவர்கள் புழு பூச்சிகளாகவும் செடிகொடிகளாகவும் மரங்களாகவும் மீண்டும் 

புழுபூச்சிகளாகவும்  பிறந்து இறந்து கொண்டிருக்கிறார்கள்.

வேறு சிலர் ஆத்ம ஞானம் நேடியவர்கள்.அவர்கள் கடவுளின் ஆசிக்கு பாத்திரமானவர்கள்.அவர்கள் மனதின் 

குண நலன்களை ஆராய்நதறிந்து, ஆஸக்திகளையும் ஆசைகளையும் துறந்தவர்கள்.அவர்கள் போத 

மண்டலத்தின்உன்னதமான இடத்தை நோக்கித் போய்க்கொண்டேயிருப்பார்கள்.

பிறப்பு-இறப்பு எனும் சக்கர சுழற்சியின் கடைசி நிலையை அடைந்துள்ள இவர்களின் வாழ்வு பெரும்பாலும் 

சத்திய ஒளியால் பிராகாசித்துக் கொண்டும், ஒரு சிறு அளவு ரஜோ குண பிரதானமான வாசனைகளால் 

மாசுபட்டும் இருக்கும்.பிறப்பு முதல் அவர்கள் தூய்மையை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.ஞானமும் 

விஞ்ஞானமும் அவர்களுக்கு எளிதாக கற்றுக் கொள்ள முடிகிறது.நட்பு, கருணை,விவேகம், நல்ல எண்ணங்கள்,பெருந்தன்மை முதலிய குணங்கள் அஅவர்களைக் தேடி வரும்.அவர்கள் தங்களது கர்மங்களை 

செவ்வனே நிறைவேற்றுகிறார்கள்; ஆனால் அவைகளின் பலன்களைக் குறித்து சிந்திப்பதில்லை. 

அவைகளினால் ஏற்படும் இலாபங்களும் நஷ்டங்களும் அவர்களை மகிழ்விப்பதும் இல்லை; 

துயரத்திற்குள்ளாக்குவதுமில்லை.அவர்களது இதயமும் மாசற்றதாக உள்ளது.அவர்களை எல்லோரும் 

மதிக்கிறார்கள்.அப்படிப்பட்ட சத்சுபாவமுடையோர் தங்களுக்கு உகந்த குருவை தானாகவே 

கண்டடைகிறார்கள்.அந்த குருவிலிருந்து ஆத்ம ஞானத்திற்கான வழியை கண்டடைகிறார்கள்.அவ்வாறு 

அவர்கள் ஆத்மசாக்‌ஷாத்காரம் அடைகிறார்கள்.அனந்தாவபோதமும் ,அதாவது, பரப்பிரம்மமும் ஜீவாத்மாவும் 

ஒன்று தான் என்ற உண்மையை உணருகிறார்கள்.ஒன்றே ஒன்றான, அதற்கு ஈடு இணையற்ற விசுவ 

பிரபஞ்சத்தை உணருகிறார்கள்.அதுவரை அவர்களில் உறங்கிகிடந்திருந்த மேதா சக்தி உணர்ந்து 

எழுந்திருகிறது.எல்லாமே பிரம்மம் தான் .உள்ளார்நத ஒளிமயமாயமான அனந்தாவபோதத்துடன் 

இடைவிடாத தொடர்பிலிருப்பதால்,அவர்கள் புனிதமான ஒரு உயரிய நிலையில் செயல்படுகிறார்கள்.

இது தான் சாதாரணமாக கண்டுவரும் உலக நிலைமை. இதற்கு விதி விலக்குகளும் இல்லாமலில்லை.

இந்த உலகில் பிறந்தவர்களுக்கு முக்தியை அடைய இரண்டு வழிகளில் உள்ளன.ஒன்று: குருவின் வழியை 

கவனமாக பின் தொடருதல்.சீடன் காலப்போக்கில் முகதிபதத்தை அடைவான்.

இரண்டு:ஆத்ம ஞான மார்ககம்.யாரோ தன் மடியில் அமர வைத்து எடுத்துக் கொடுத்தது போல் ஆத்மஞானம் 

அவனுக்குள் முளை விடும்.அவன் மோட்சத்தை நோக்கி தானே பயணமாகிறான்.இரண்டாவதற்கு 

உதாரணமாக ஒரு கதை சொல்கிறேன் கவனமாகக் கேள்.
 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s