யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 211

தினமொரு சுலோகம்

நாள் 211

இராமனின் வேண்டுகோள்
யத்யத் ராகவ ஸம்யாதி மஹாஜனஸபர்யயா

தினம் ததிஹ ஸாலோகம் ஶேஷாஸ்த்வந்தா தினாலயா !

यद्यद राघव संयाति महाजनसपर्यया

दिनम् तदिह सालोकम् शेषास्त्वनधा दिनालय:।

வால்மீகி முனிவர் தொடருகிறார்: ” பொழுது புலர்நதது.இராமனும் ஏனையோரும் உறக்கத்திலிருந்து எழுந்து 

தங்களது காலைப் கடன்களை முடித்துக் கொண்டு, வஸிஷ்டரின் ஆசிரமத்திற்கு சென்றார்கள்.முனிவர் 

ஆழ்ந்த தியானத்தில் அமர்நதிருந்தார். அவர் தியானத்திலிருந்து எழுந்ததும் அவரை வணங்கி விட்டு  தசரத 

மன்னர் அரண்மனையை நோக்கி முனிவருடன் சென்றார்கள்.மன்னர் மூன்றடி முன்னால் வந்து முனிவரை 

வரவேற்றார்.முனிவரும் மன்னரும் அமர்ந்த பிறகு, அவையில் ஒவ்வொருவராக தம் , தம் இருக்கையில் 

அமர்நதார்கள். அவையினரில், தேவர்களும், உப தேவதைகளும்,முனிவர்களும் இருந்தார்கள்.

அவை நடவடிக்கையை துவக்கி வைத்து தசரத மன்னர் இவ்வாறு கூறினார்.:’ பகவன், நேற்றைய இடைவிடாத 

உபதேச பிரபாஷணத்திற்கு பின், தகுந்த ஓய்வு கிடைத்ததா?தங்களின் அறிவு செறிந்த பேச்சைத் கேட்ட 

நாங்கள் அறிவின் உச்சிக்கு சென்றுவிட்டதாக  தோன்றுகிறது.மாமேதையான  முனிவரின் வார்த்தைகள் 

எல்லா உயிரினங்களின் துன்பங்களை நீக்கி, அவர்களுக்கு ஆனந்தம் பொழிய வல்லது என்பது 

திண்ணம்.அவை நம் கர்மா- அகர்மங்களை – செயல்கள், செய்யாமல் விடுபட்டவை- அவைகளினால் 

விளையக்கூடிய அனர்ததங்களை – கேடுகளை- அழித்து, மனதை மாசற்றதாகின்றது.  முனிவரின் 

உபதேசங்கள் லௌகீக ஆஸக்தி, அதிஆசைகள் முதலிய கெட்ட சிந்தனைகளை வலுவிழக்கச் செய்கிறது. 

.மோகத்தின்பால் ஈர்க்கப்பட்டு நாங்கள் இந்த புறக்கண்களால் காணும்  உலகை சத்தியம் என்று நம்பி 

மாயையில் அகப்பட்டு துன்பபட்டுக் கொண்டிருக்கிறோம்.அந்த நம்பிக்கையை உடைத்தெறிய வல்லது தங்கள் 

வார்த்தைகள்.

‘ இராமா, என்றெல்லாம் ஞானிகளான முனிவர்களை மதித்து மரியாதை செலுத்துகிறோமோ அந்த நாட்கள் 

மட்டும் தான் பயன் தரக்கூடிய நாட்கள்.மற்ற நாட்களெல்லாம் இருளடைந்த பாழ் நாட்கள்.’

இது உனக்கு கிடைத்திருக்கும் ஒரு பொன்னான சந்தர்ப்பம்.நீ முனிவரிடமிருந்து அறிய வேண்டிய ஞானத்தை 

கேட்டு தெரிந்து கொள்வாய்.எதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்.

வஸிஷ்டர் சொன்னார்: ‘ இராமா, நான் நேற்றுவரை உபதேசித்தவைகளைக் குறித்து நன்றாக சிந்தித்துப் 

பார்த்தாயா? அவை தெளிவாக உன் மனதில் பதிந்துள்ளனவா? உனக்கு ஞாபகம் இருக்கா, ‘ மனம் தான் 

மனிதன்’ என்று நான் கூறியது?தொடர்நது இந்த பிரபஞ்ச சிருஷ்டியைக் குறித்து நான் கூறியது 

நினைவிருக்கிறதா ? இவைகளை திரும்ப , திரும்ப ஞாபகப்படுத்திப் கொண்டால் மட்டுமே இவைகள் 

தெளிவாக புரியும்.’

இராமன் கூறினான்:’ பகவான்,இரவு முழுவதும் தாங்கள் கூறியவைகளைக் குறித்துத் தான் யோசித்துக் 

கொண்டிருந்தேன்.தங்களின் வார்த்தைகளின் வழியாக எனக்கு காண்பிக்க முற்பட்ட சத்தியத்தை, 

புரிந்துகொள்ள நான் முயன்று கொண்டு தான் இருந்தேன்.அந்த சத்தியம் என்மனதில் நிரந்தரமாக 

பதிந்திருக்கிறது. மிகவும் உன்னதமான ஆனந்தத்தைத்தரும் கொடுக்க வல்லது என்று தெரிந்த பிறகு யாராவது 

தங்கள் வார்த்தைகளை அலட்சியம் செய்வார்களா?அவைகளை தலை மேல வைத்து கொண்டாட 

மாட்டார்களா? அவை கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது!அவை நம்மில் எழுப்பும் ஒருவித தூய 

உணர்வு நம்மை நல்வழியில் இழுத்து செல்லும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.அவை நம்மை கொண்டு 

செல்வது ஈடு இணையில்லாத ஒரு அனுபவத்தின் நிலைக்குத்தாக தான்.ஆகவே தாங்கள் மேலும் தங்கள் 

பேச்சைத் தொடருங்கள்.’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s