யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 215

தினமொரு சுலோகம்

நாள் 215

ஆத்ம பூஜை

உபஶமஸுகமாஹரேத் பவித்ரம்

ஸுஶமவத: ஶமமேதி ஸாதுசேத:

ப்ரஶமிதமனஸ:ஸ்வகே ஸ்வரூபே

பவதி ஸுகே ஸ்திதிருத்தமா சிராய !

उपशमसुखमाहरेत् पवित्रम्

सुशमवत: शममेति साधुचेत:

प्रशमितमनस: स्वके  स्वरूपे

भवति सिखे स्थितिरुत्तमा चिराय ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, ஜனகன் என்ற பெயருடைய ஒரு சக்கரவர்ததி விதேஹ நாட்டை ஆண்டு 

வந்தார்.அனந்தமான அந்த திவ்ய தரிசனத்தில் ஆனந்தம் அனுபவித்து வந்தவர் அவர்.அவரை நம்பி 

வந்தோருக்கு அவர் ஒரு அக்‌ஷய பாத்திரம்.அவரது அருகாமையில் நண்பர்களது இதயக்கமலங்கள் பூத்து 

குலுங்கும்.அந்த இதய கமலங்களுக்கு ( தாமரை மலர்களுக்கு) சூரியனாக விளங்கினார் அவர்..எல்லா சத் 

கர்மங்கள் ஆற்றுபவர்களுக்கு  உற்ற துணையாகவும் இருந்தார்.

ஒரு நாள் தன்னுடைய அரண்மனை நந்தவனத்தில் நடந்துகொண்டிருந்த பொழுது ஒரு அசரீரியான குரல்

 கேட்டது.அது ஒரு பாடல் போல் இருந்தது.அதன்பொருள் இப்படியிருந்தது:

” அனுபவமாகின்ற சாதகன் சாதகத்திற்கான விஷயத்துடன் ஏற்படும தொடர்பினால் தானாகவே 

மனோவிருத்தியிலிருந்தோ, கற்பனையிலிருந்தோ உதிக்காத , எந்த விதமான பிரிவினைக்கும் ஆளாகாத 

ஆத்மாவை நாங்கள் தியானிக்கின்றோம்.

விஷயம், விஷயி என்கின்ற பேதமெதுவுமில்லாமலாகும் பொழுது ,மேதாசக்தியின் துணையில்லாமலே 

விஷயங்களை பிரதிபலிக்கின்ற ஆத்மாவை நாங்கள் தியானிக்கின்றோம்.

இரட்டை மனோ சங்கல்பங்களான அஸ்தித்வம், அனாஸ்தித்வம் (இருக்கிறது , இல்லை) என்பவைக்கு 

மத்தியில் நிலைகொள்கின்ற, ஆத்மாவெனும் அந்த ஒளி மயமான வஸ்துவை, நாங்கள் தியானிக்கின்றோம்.

எல்லாவற்றின். காரண-காரிய பொருளாயிருக்கின்ற, எல்லாவற்றின் சிருஷ்டி, ஸ்திதி , சம்ஹாரத்தின் 

காரணியாகவும் இருக்கின்ற ஆத்மாவை தியானிக்கின்றோம்.

முகதலெழுத்தாம் ‘அ’ காரத்திற்ககும் கடையெழுத்தான ‘க்ஷ’ விற்கும் இடையிலுள்ள எல்லா 

எழுத்துக்களாலும் விவரிக்கப்பட்ட, எல்லா எண்ணங்களுக்கும், சங்கல்பங்களுக்கும், மொழிகளுக்கும் 

அடிப்படையாகவுள்ள ஆத்மாவை நாங்கள் தியானிக்கின்றோம்.”

என்னே பரிதாபம் ! தன்னுள் இதயகுகையில் குடியிருக்கும் பகவனைத் தவிர எல்லாவற்றின் பின்னாலும் 

ஓடுகிறோம். 

லௌகீகம பொருள்களின் பொருளின்மையை புரிந்திருந்தும் அவைகளின் மீதுள்ள பிடிப்பை விடமுடியாமல் 

தவிக்கின்றோம்.இப்படிப் பட்டவர்கள் மனிதர்ககளே அல்ல.

இதயத்திலே எப்படியோ புகுந்துவிட்ட ஆசாபாசங்களை விவேகம் என்ற தண்டத்தால் அறுத்து எறிவதில்லை 

மனிதர்கள்..

”  நிரந்தர அமைதியிலிருந்து உதித்து வருகின்ற மகிழ்ச்சியை நாம்்அனுபவிக்க வேண்டும்.மனோ 

நிவுருத்தித்தியடைந்தவனுடைய  மனம் பரம சாந்தி நிலையிலிருக்கும்.அங்கு தூய ஆனந்தானுபவம் 

நிறைந்திருக்கும்”

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s