யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 216

தினமொரு சுலோகம் 

நாள் 216

பொருளற்ற உலக வாழ்வு-ஜனகரின் புலம்பல்

அர்ஜ்ஜுரேவ பத்தோ! ஹமபங்கோஅஸ்மி களங்கித:

பதிதோஸ்ம்யுஉபரிஸ்தோபி ஹா மமாத்மனஹதா ஸ்திதி:!

अर्ज्जुरेव बध्धोअहमपन्कोअस्मि कलन्कित:

पतितोस्म्युपरिस्तोपि हाँ ममात्मन्हता स्तिति:।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” மாமுனிகளின் வார்த்தைகளைக் கேட்ட ஜனகர் மனக்குழப்பத்திற்கு 

ஆளானார்.தன்னுடைய நந்தவனத்து நடையை முடித்துக்கொண்டு, அரண்மனைக்கு 

போனார்.பணியாட்களையெல்லாம் போகச்சொல்லிவிட்டு சஞ்சலத்துடன் இவ்வாறு தனக்குத் தானே 

கூறிக்கொண்டார்:’ இந்த பிரபஞ்ச வாழ்விற்கு ஒரு ஆதாரமில்லை . ஒரு கல் போல் தான் 

உருண்டுகொண்டேயிருக்கிறேன்.இந்த வாழ்வில் இன்னும் எத்தனை நாட்கள் மீதமிருக்கின்றன.?இருந்தும் 

எனக்கு ஏன் இந்த வாழ்வின்மீது  இப்படியொரு பிடிப்பு? ச்சீ! இந்த மனதின் நிலை என்னே பரிதாபம்! வாழ்நாள் 

முழுவதும் இந்த நாட்டின் பரமாதிகாரியாக இருந்து என்ன பயன்?இந்த பிரபஞ்சத்தில் எந்த பயனுமில்லை 

இல்லை என்று தெரிந்தும் இதன் மேலுள்ள வாஞ்சையை விட முடியவில்லை.இந்தஅ உலகம் எனக்குத் தேவை 

என்று எண்ணுகிறேன் என்னே அறிவீனம்?என் ஆயுள் ஒரு சிறிய  காலையளவிற்குள் அடக்கம்.அழியாமை 

எனக்கு முன்னும், எனக்கு பின்னும் நீண்டு கிடக்கிறது.அதை நான் எப்படி இன்னும் வளர்த்துக்கொள்ள

முடியும். யார் இந்த மாயா பிரபஞ்சத்தை நம் கண் முன் தோற்றுவித்தது? இந்த உலகத்தை கண்டு நான் ஏன் 

ஆச்சரியப் பட வேண்டும்?அருகாமை, தொலைவு என்பதெல்லாம் என் மனதின் எண்ணங்களே அன்றி 

வேறில்லை என்பதை ஏன் உணர மாட்டேன் என்கிறேன்?இந்தஉண்மையை உணர்ந்து விட்டால் எல்லா 

ஆசைகளும் அழிந்து போகும்.இகலோகத்தின் வேகம் முடிவற்ற துன்பத்தைத் தான் உண்டு 

பண்ணுகிறது.அப்படியானால் மகிழ்ச்சிக்கு எதை நாடுவேன்?

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும்,கொண்டுவரும் 

சந்தோஷங்களும் தன்னுடனே துன்பத்தையும் சேர்ததுக்கொண்டுதான் வருகிறது.ஒரு துன்பம் வந்து விட்டால் 

அவை ஒரு தொடர் நிகழ்சசியாகிவிடுகிறது.இங்கு காண்கின்ற பொருள்களுக்கிடையே,அவைகளுக்கான 

அனுபவங்களும் அனுபவிப்பவர்களும் எல்லாம் மாற்றத்திற்குட்பட்டது; ஆகவே நாசமடையக்கூடியவை. 

விவேகமடைந்தவர்களுக்கு சார்ந்திருக்க இந்த உலகில் எதுவுமேயில்லை.இன்று பதவியுடன் பெயரும் புகழும் 

பெற்றவர்கள் நாளை இகழப்படுகிறார்கள்.கீழே தள்ளி மிதிக்கப் படுகிறார்கள்.ஏய், மூட மனமே இந்த உலகை  

றஏன் நம்புகிறாய்?

 என்னே , கஷ்டம்!  கயிறில்லாமலையே நான் கட்டப்  பட்டிருக்கிறேன் .மாசற்றவனாயிருந்தும் 

மாசுற்றவனான இருக்கிறேன். உயர்த்த பதவியிலிருந்தாலும் கடை நிலையிலிருக்கிறேன்.’நான்’ என்பதே ஒரு 

பெரிய புதிராக உள்ளது.”

எப்பொழுதும் ஒளிர்நது கொண்டிருக்கின்ற சூரியனை ஒரு துண்டு மேகம் மறைத்து விடுகிறது.என்னை ஒரு 

மாயா வலயம்  மறைந்திருக்கிறது.யார் இந்த உற்றார்-உறவினர்கள்? சுகம் என்பது தான் என்ன? இருட்டில் 

இல்லாத பேய்பிசாசுக்கள் குழந்தையை பயமுறுத்துவது  போல், இந்த சொந்த- பந்தங்கள் என்னை 

மிரட்டுகின்றன.அவர்கள் தானே என்னை முதியவனாகவும், மரணத்திற்குப் ஆட்பட்டவனாகவும்  

மாற்றுகிறது.இது தெரிந்திருந்தும் நான் அவர்களை விடாமல் பிடித்துக்கொண்டு கொண்டிருக்கிறேன். 

இவர்கள் இருந்தால் என்ன? அழித்தாலென்ன?

இந்த உலகில் எத்தனையோ மகான்கள் பிறந்து, மறைந்துள்ளார்கள்.எவ்வளவு பெரிய நிகழ்வுகள் 

அரங்கேற்றியுள்ளன?அவைகளெல்லாம் நமதுள்ளத்தில் ஒரு நினைவு மட்டுமாக தேங்கியுள்ளது.அவை நமக்கு 

ஊன்றுகோலாக இருக்கிறதா?இல்லையே! கோடிக்கணக்கான தேவதைகள், ஈசுவரர்கள் உள்ளார்கள் என்ன 

பயன்?எதுவுமே சாசுவதமாக இந்த உலகில் இருப்பதில்லை.இந்த பயமுளவாக்கக் கூடிய திருசிய 

பிரபஞ்சத்தில், எதிர்பார்ப்பு எனும் ஒரு நூல் மட்டும் தான் நம்மை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.

ச்சே! எவ்வளவு கேவலமானதாக நமது வாழ்வு!’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s