யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217

தினமொரு சுலோகம்

நாள் 217

ஜனகரின் தீருமானம் 

காகதலீயயோகேன ஸம்பன்னாயம் ஜகதஸ்திதௌ

தூர்த்தேன கல்பிதோ வ்யர்ததம் ஹேயோபாதேயபாவனா !

काकतलीययोगेन सम्पन्नायम् जगत्सथितौ

धूर्तेन कल्पितो व्यर्थम् हेयोपादेयभावना ।

ஜனகர் புலம்புவதை தொடர்ந்தார் :’ அஹம்பாவம் என்ற பேய் பிடித்துள்ள ஒரு முட்டாள் நான்.இந்த

 ‘ அஹம்பாவம்’ தான் ‘ நான் இவன்’ என்ற எண்ணத்தை என்னுள் தோற்றுவிக்கின்றது.அனேகம் 

தேவதைகளும் , மும்மூர்த்திகளும் கூட காலப்போக்கில் காணாமலே போய்விடுகிறார்கள் என்று 

தெரிந்திருந்தும்,நான் பிரபஞ்ச வாழ்வை விரும்புகிறேன். அனந்தாவபோதத்தின் ஆனந்தத்தை 

அனுபவிப்பதற்கு பதிலாக, நான் பொருளற்ற விவகாரங்களிலும் ஆஸக்திகளிலும்  ஈடுபட்டு இராப்பகலுகளை 

வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்.துயரங்களிலிருந்து பெரும் துயரங்களுக்குக் போயும் என்னில் நிர்மமதை

 ( எனதல்ல) என்ற எண்ணம் உதயமாவதில்லை.இந்த உலகில் எதை விரும்பத்தக்கதாகவும் 

‘உத்தமமானதாகவும் நினைப்பது? ஏனென்றால, எதை போற்றி பாது காத்தாலும் காலப்போக்கில் 

அவையெல்லாமே அழிந்து போகின்றன.கடைசியில் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தவனுக்கு 

மிஞ்சுவதெல்லாம் துயரம்மட்டும் தான்

ஒவ்வொரு நாளும் இந்த உலகில் பாபகாரியங்களும் அநியாயங்களும் தான் நிகழ்ந்து 

கொண்டிருக்கின்றன.அவைகள் இன்னும் அதிகமான துயரங்களையும் கஷடங்களையும் தான் 

தருகின்றன.குழந்தை பருவம் அறியாமையால் கழிந்து போகின்றது. இளமைக்காலம் காலம் காமம் 

கேளிக்கை,  ஏனைய சுகங்களையெல்லாம் தேடுவதில் கடந்து போகின்றது.மீதமுள்ள காலம குடும்பத்திற்கு 

வேண்டியதையெல்லாம் நேடுவதற்கான ஓட்டமாக கழிந்து போகின்றது.முட்டாளான அவனுக்கு வாழ்க்கையில் 

தனது என்று சொல்லிக் கொள்வதற்கு அழிவற்றதும் சாசுவதுமுமான ஏதுமில்லை.

பெரிய யாகங்கள்-யக்ஞங்கள் செய்தாலும் என்ன கிடைத்துவிடப் போகிறது? சொர்க்க லோகம? அது 

எவ்வளவு நாட்களுக்கு? சொர்ககம் என்பது தான் என்ன? அது எங்கேயிருக்கிறது? பூமியிலாஇல்லை வேறு 

எங்கோ இருக்கிறதா? துயரம் என்பதே இல்லாத இடமா அது? துயரம் இன்பத்தையும் இன்பம் துன்பத்தையும் 

கை பிடித்து அழைத்துக் கொண்டு தானே நடக்கிறது? ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க இயலுமா? 

பூமியிலுள்ள குழிகளெல்லாம் பிணங்களால் நிரம்பி வழிகிறது.அதனால்த் தானோ பூமி இவ்வளவு உறுதி 

படைத்ததாக தோன்றுகிறது? இந்த பிரபஞ்சத்திலுள்ள சில உயிரினங்களின் கண் இமைக்கும் நேரம்  என்பது 

யுகங்களுக்கு ஈடாக உள்ளது. அப்படியிருக்கையில் எனது இந்த சிறு வாழ்வு எவ்வளவு துச்சம்? உலகில் 

மகிழ்ச்சியும் உல்லாசங்களையும் தரக் கூடிய பொருள்கள் உள்ளன. ஆனால் அவையும் துன்பங்களையும் 

கூடவே நல்குகின்றது. ஐசுவரியங்கள் உண்மையில் ஆபத்தானவை.இந்த ஆபத்துக்கள் சில நேரங்களில் நமது 

மனோ நிலையில் பொறுத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தென்படலாம்.மனம் மட்டும் தான் இந்த 

திருசிய பிரபஞ்சத்திற்கு-இந்த மாயா லோகத்திற்கு ஒரே ஒரு காரணம்.

‘நான்’ ‘ எனது ‘ என்ற எண்ணங்களுக்கெல்லாம் விளை நிலம் மனம் தான்.காகதலீய நியாயப்படி- காக்கை 

உட்கார பனம்பழம் விழுந்தது போல் என்ற நியாயப்படி-இந்த உலகம் சிருஷ்டிக்கப்பட்டது என்பது  

யதேச்சையானது தான். அதே போல்த்தான் அஞ்ஞானம் காரணமாக, ‘ தென்பகுதியில்  வேணும்’ ‘ இது 

எனக்கு உகந்ததல்ல’ என்பன போன்ற எண்ணங்களும் நம்மில் உண்டாவது.”

” தனிமையில் இருப்பதோ, நரகத்தில் இருப்பதோ, இந்த உலகில் வாழ்வதைவிட மேலானது. ஆசைகளும், 

மனோ விகாரங்களும் தான் உலகமென்கின்ற இந்த தோற்றத்திற்கே காரணம்.இம்மாதிரி எண்ணங்களைக் 

தாற்காலிகமானவை அழித்து விடலாம்.ஆனால் அதனால் பயனில்லை.ஆகவே  நான் இவைகளை  இன்றே 

முற்றிலும் அழித்து விடுகிறேன்.நான் இது வரை எவ்வளவோ அனுபவித்து விட்டேன். எவ்வளவோ சகிப்புத் 

தன்மையுடன் இருந்து விட்டேன். இனிமேல் ஓய்வு எடுத்துக் கொள்ளப்போகிறேன்.இனிமேல் நான் 

துன்பப்படப்போவதில்லை.நான் போதவானாகிவிட்டேன்.என்னுடைய ஞானத்தை அபகரித்த அந்த 

திருடனை இன்று நான் கொன்று விடுகிறேன்.எனக்கு முனிவர்களின உபதேசங்கள். நிறையவே 

கிடைத்துள்ளது.இனிமேல் தான் தேடப்போவதெல்லாம் ஆத்மஞானம் தான்”
.’ 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s