யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 218

தினமொரு சுலோகம்

நாள் 218

கர்மம் அகர்மமாகிறது.
ஸ்திதே மனஸி நிஷ்காமே ஸமே விகதரன்ஜனே

காயாவயவஜௌ கார்யௌ ஸ்பந்தாஸ்பந்தௌ பலன் ஸமௌ!

स्थिते मनसि निष्कामे समे विगत रन्जने

कायावयवजौ कार्यौ स्पन्दास्पन्दौ फले समौ ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” மன்னன் இவ்வாறு கண் மூடி திவீர சிந்தனையிலிருப்பதைக் கண்ட 

சேவகனொருவன் மெல்ல வரை அணுகி,’ மன்னா, அரச காரியங்களை கவனிப்பதற்கு நேரம் வந்து விட்டது. 

தங்களுக்கு சேவை செய்வதற்காக பரிசாரகர்கள் தயாராக நிற்கிறார்கள். தங்கள் நீராடலுக்காக 

நறுமணத்துடன்கூடிய நீரை எடுத்து வைத்துள்ளார்கள்.அந்த சந்தர்பபத்திற்கு தகுந்த 

மந்திரோச்சாடனம்செய்வதற்காக பண்டிதர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.எல்லோரும் ஸநான கிரகத்தில் 

காத்துக் கொண்டிருக்கிறார்கள்.தாங்கள் எழுந்தருள வேண்டும். அனுஷ்டிக்க வேண்டிய கர்மங்கள் நிறைய 

இருக்கின்றன.உத்தமர்களும், புண்ணியவான்களும் ஒருபொழுதும் நேரம் தவற மாட்டார்கள்;அலட்சியம் 

காட்டமாட்டார்கள்.’ என்றான்.

ஆனால் அரசன் சேவகனின் வார்த்தைகளை கேட்ட பிறகும் தன் சிந்தனையிலேயே ஆழ்நதிருந்தார்:” இந்த 

அரசவையாலும் அரச தர்மங்களாலும் என்ன பயன்? இதெல்லாம் நிரந்தரமல்லவே!தாற்காலிகமானது தானே! 

அவையால் எனக்கொரு பயனுமில்லை.நான் எல்லா கர்மம் தர்மங்களையும் விட்டு விட்டு ஆத்மானந்தத்தில் 

மூழ்க போகிறேன்.ஏய் மனமே, நீ இந்த லௌகீக வாசனைகளையெல்லாம் கைவிட்டு விடு.அவ்வாறு பிறப்பு-

இறப்பு எனும் சுழற்சியிலிருந்து தப்பிக்கலாமல்லவா! அதிலிருந்து உண்டாகும் துன்பங்களையும் 

தவிர்க்கலாம்.சந்தோஷம் தரக்கூடியவை என்று எதை எதை நினைக்கின்றானோ அவையெல்லாம் 

துன்பம்தான் பயக்கின்றன.இந்த ஆப்பத்தால் மாசுபட்டும் லௌகீக சுகங்களையெல்லாம் மட்டும் 

குறிக்கோளாகக் கொண்ட இந்த வாழ்கை இனி வேண்டவே வேண்டாம்.சுயமாக உன்னில் எது என்றும் 

உள்ளதோ அதை தேடுவதில் மகிழ்ச்சியை அடையவேன்’

மன்னன் ஒன்றும் பேசாததால் சேவகனும் மௌனமாக இருந்தான்.

மன்னன் மீண்டும் தன் உன்முகமான பேச்சை தொடர்ந்தார்:’ நான் இந்த உலகத்தில் என்ன நேட 

வேண்டியுள்ளது?இந்த பிரபஞ்சத்தில் எந்தவொரு சாசுவத சத்தியத்தை முழு நம்பிக்கையோடு சார்ந்திருக்க 

முடியும்? நான் தொடர்ந்து கர்மங்கள் ஆற்றினாலும் ஆற்றாவிட்டாலும் என்ன நிகழ்ந்து. விடப்போகிறது? இந்த 

உலகில் எதுவும் நிரந்தரமாக இருப்பதில்லை.கர்மங்கள் ஆற்றினாலும் இல்லாவிட்டாலும்,இந்த சரீரம் 

எப்பொழுதும் மாற்றத்திற்கு உட்பட்டது தான்.அது அழிவில்லாததல்ல.ஸமத பாவத்தில் புத்தியை நிலை 

நிறுத்தியிருக்கும்பொழுது என்ன, எப்படி இழப்பதற்கு? எனக்கு கிடைக்காததை குறித்து எனக்கு 

கவலையில்லை. தானாகவே என்னிடமே வந்து சேர்ந்தவைகளை இழப்பதற்கு நான் 

முயலப்போவதுமில்லை.நான் ஆத்ம நிஷ்டன்.எனக்குள்ளது எனக்கே தான்.யாரும்எடுத்துக்கொள்ள 

முடியாது.எதற்காகவும் நான் முயல வேண்டியதில்லை.ஆனால் கர்மங்களிலிருந்து பின்வாங்குவதால் எந்த 

பயனுமில்லை இல்லை.கர்மம்செய்வதாலோ, செய்யாமலிருப்பதாலோ,எந்த பயனும் கிடையாது.’

‘ மனம் ஆசையில்லாததும் சுகத்தை தேடாததும் ஆக இருந்து  சரீரத்தின் பாகங்களெல்லாம் அதனதன் 

கர்மங்களை செய்யும்பொழுது ,கர்மத்திற்கும் கர்மமின்மைக்கும் ஒரே பொருளும் ஒரே மதிப்பும் தான்’

ஆகவே சரீரம் அதன் கடமையை செய்யட்டும்.ஏனென்றால் அப்படி கர்மங்கள் ஆற்றவில்லை என்றால் 

சரீரமேயிராதே! மனதில் ‘ நான் இதை செய்கிறேன்’ ‘. இதை  ருசிக்கிறேன்’ என்ற எண்ணங்களை 

மனதிலிருந்து  நீக்கிவிட்டால் கர்மம் அகர்மமாகிறது.இது கர்மங்கள் செய்யாமலிருப்பதல்ல.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s