தினமொரு சுலோகம்
நாள் 220
ஆத்மவிசாரம் தரும் ஆத்ம ஒளி
அநாம்யஷ்டவிகல்பாமஶு ஶ்சிதாத்மா விகதாமய:
உதியாய ஹ்ருதாகாஶோ தஸ்ய வ்யோம்னீவ பாஸ்கர்: !
अनाम्यष्टविकल्पाम्शुशचिदात्मा विगतामय:
उदियाय ह्रिदाकाशो तस्य व्योम्नीव भास्कर: !8
வஸிஷ்டர் தொடர்ந்தார்:’ ஞான சாக்ஷாத்காரம் அடைந்த ஜனகர் மன நிறைவோடு தன்னுடைய ,
விதிக்கப்பட்ட கர்மமான அரசாட்சியை நன்றாக நடத்தி வந்தார்.இப்படிப்பட்ட லௌகீக கர்மங்களை
நிறைவேற்றுவதில் அவருக்கு எந்த விதமான மனக்குழப்பங்களும் உனவாகவில்லை.அது மட்டுமல்ல, அவரது
செயல்களுக்கு மனோ ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஒரு வலுவான அடித்தளமும், ஊக்கமும்
கைவரப்பெற்றிருந்தார்.அவரது மனம் அரச சுக போகங்களால் ஈர்ககப்படவில்லை.அவர் எப்பொழுதும்
ஸுஷுப்தியில் இருப்பது போலவே அனுபவப்பட்டார்.அவருக்கு நேடுவதற்கோ விடுவதற்கோ
ஒன்றுமில்லை.எந்த வித சஞ்சலமுமில்லாமல் ‘ இங்கே, இப்பொழுது’ என்ற வாழ்க்கை வாழ்ந்து
கொண்டிருந்தார்.அவரது லௌகீக வாழ்க்கையால், அவரது விவேக- விஞ்ஞான த்திற்கோ, மேதா சக்திக்கோ
எந்த குறைவும் ஏற்படவில்லை; ஒரு களங்கமில்லாமல் படியவில்லை.
” அவர் இதயத்திலே ஆத்ம ஞானத்தின் வெளிச்சம் உதயமாயிருந்தது.சிதாத்மா கீழ்வானத்தில் முளைத்தெழும்
சூரியனைப் போல், மாசு சற்றும் படியாமல்,துயரத்தின் நிழல் கூட படியாமல்,உதயமாயிருந்தது.”
இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே நிலைகொள்வது சித் சக்தியால்த்தான் என்று அவர்
உணர்ந்திருந்தார்.ஆத்மஞானத்தில் மூழ்கி நித்யானந்தம் அனுபவித்து வந்ததால் ஆத்மாவிலேயே
எல்லாவற்றையும் காணலானார்.எது நிகழ்நாலும் அது அதாதின் ஸஹஜ சுபாவத்தினால்த் தான் நிகழ்கின்றது
என்று தெரிந்து கொண்டதால் அவருக்கு எதிலும் அமிதமான மகிழ்ச்சியோ, துயரமோ ஏற்படவில்லை.
நிரந்தரமான ஒரு பக்குவமடைந்த நிலையை அவர் எட்டியிருந்தார்.அவர் ஜீவன்முக்தராயிருந்தார்.
எதிலும் ஒரு பற்றுமில்லாமல் , ஆனால்,அரசாட்சிக்கு வேண்டிய கடமைகளை எந்த தவறுமில்லாமல் ஆற்றி
டவந்ததால்,அவரைச் சுற்றியுள்ள நன்மைகளும் தீமைகளும் அவரது ஆத்மஞானத்தை அதிகப்படுத்தவோ,
தளர்சசியடையவோ செய்யவில்லை.அனந்தாவபோதத்தில் உறுதியாக நிலை கொண்டதால் அவரை அவரது
ராஜகர்மங்கள் பாதிகவேயில்லை. அவர் ஒரு கர்ம ரஹிதன்- கர்மமும் செய்யாதவர் போல் வாழ்ந்து
வந்தார்.நிஷ்காமிய கர்மியாக வாழ்ந்து வந்தார்.எல்லாவிதமான மனோ வாசனைகளும்,சங்கல்பங்களும்
அவரில் அழிந்துவிட்டிருந்தது.ஆகவே கர்மங்கள் அவைகளுக்கு தேவையான கவனத்துடன் ஆற்றி வந்த
பொழுதும், அவர் ஆழ்ந்த உறக்கத்தில்- ஸுஷுப்தியில்- என்பது போல் சாந்தமாயிருந்தார்.கடந்த கால
நினைவுகளோ, வருங்கால சங்கல்பங்களோ அவரை சிறிதும் அலட்டவில்லை.எப்பொழுதும் மாறாத
புன்னகையுடன் அவர் நிகழ்காலத்தில் நிலைகொண்டார்.
ஜனகர் பெற்ற வெற்றிகளெல்லாம் ஆத்மஞான விசாரணை மார்ககம் வழியாகத்தான்.ஜனகரை
முன்மாதிரியாகக் கொண்டு சத்தியத்தை தேடி ஞானத்தின் எல்லை வரை சென்றடைவதற்கு
முயற்சிக்கணும்.நல்லதோர் குரு கிடைத்து விட்டதாலும், எல்லா சத் கிரந்தங்களையும் படித்து விட்டதாலும்,
சத் கர்மங்கள் நிறைய செய்ததாலும் ஆத்மஞானம் பெற முடியாது.நல்லவர்களுடனான சத்சங்கம் தரும்
ஊக்கத்தால் சுயமாகவே செய்கின்ற ஆத்ம விசாரணையினால் மட்டுமே அதை பெறமுடியும்.அதற்கு
வழிகாட்டுதலும் ஒருவனின் உள்ளில் எழுப்புகின்றன ஒளியினால் மட்டுமே முடியும்.அந்த ஒளி
அணைந்துவிடாமல் பாதுகாத்தால் எந்த இருளும் நம் வழியில தடை உண்டு பண்ணமுடியாது.