யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 221

தினமொரு சுலோகம்

நாள் 221

ஆத்மஞானம் எனும் உள்ளொளி

ப்ரஞ்யேஹ ஜகத்ஸர்வம் ஸம்யகேவாங்க த்ருஶ்யதே

ஸம்யகேவாங்க தர்சனமாயாந்தி நாபதோ நச ஸம்பத: !

प्रज्ञयेह जगत्सर्वम् संमंयगेवा्ग द्रुश्यते

सम्यकेवान्ग दर्शनमायान्ति ना पतो नश सम्पत:।

வஸிஷ்டர். தொடர்ந்தார்:” தீர்ககமுடியாத என்ன துன்பங்கள் வந்தாலும், உள்ளொளியாகின்ற, ஆத்மஞானம் 

எனும் தோணியில் ஏறி தப்பித்து விடலாம்.ஆனால் இந்த ஞானம் இல்லாதவன்,சின்ன பிரச்சினைகளைக் கூட 

தீர்ககமுடியாமல் அவதிப்படுவான்.இந்த உள்ளொளியாகின்ற உள்ளவனுக்குத்தான், அவன் தனியாளாக 

இருந்தாலும்,கல்வியறிவு இல்லாதவனான இருந்தாலும்கூட துன்பக்கடலின் அக்கரை மிகவும் எளிதாக கண்டு 

விட முடியும். வேறு ஒருவரின் உதவியும் அவனுக்கு தேவையில்லை.ஆனால் ஆத்ம ஞானம் பெறாதவர்கள், தன் 

மூலதனத்துடன் கூட எல்லாவற்றையும் இழந்து திண்டாட வேண்டிவரும்.

ஆகவே இதய ஒளிக்காக எல்லோரும் பாடு பட வேண்டும். பழச்செடிகள் பயிர் செய்யும் விவசாயி எப்படி 

கண்ணுமாக கருத்தும் தன் தோட்டத்தை காபந்து பண்ணுவானோ அது போல் அக்கறையோடு முயற்சி செய்ய 

வேண்டும்.இந்த வெளிச்சத்தை சரியாக எண்ணிவிட்டேன் பாதுகாத்தால் ஆத்மஞானத்தை அது 

நல்கும்.லௌகீக விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாகவும் ஆத்மஞானம் பெறுவதற்குத் தான் நாம் 

முயல வேண்டும்.முதலில, துன்பங்களின் விளைநிலமான மன மந்ததையோ அழிக்கவேண்டாம்.அந்த மனோ 

விசாரங்கள் தான் உலகம் என்ற மரத்தின் விதை.சுவர்கக நரகங்களில் என்ன கிடைக்குமோ, அவையெல்லாம் 

ஆத்மஞானிகள், ‘ இங்கே, இப்பொழுதே’ பெறுவார்கள்.ஆத்ம ஞானத்தால் மட்டும் தான்  சம்சஈரம் எனும் 

கடலை தாண்டி போக முடியும்.தான தர்மங்களாலோ, தல யாத்திரைகளாலோ, சன்னியாசத்தாலோ சம்சாரக் 

கடலை கடக்க முடியாது.எல்லா மகா புருஷர்களும் ஆத்ம ஞானத்தின் உதவியுடன் தான் அவர்களது 

சக்தியையெல்லாம் அடைந்தார்கள்.அரசர்கள் தங்கள் அரியணையை அடைந்ததும் அப்படித்தான்.

ஞானம் சுவர்ககத்திற்கான வழியை இன்பமயமாக்குகிறது.ஆத்ம ஞானம் பரமமான நன்மையை- முக்தியை 

நல்குகின்றது.ஆத்மஞானம் ஒரு சாமானியனைக் கூட பலசாலியாக்குகிறது. பலசாலியான எதிரியைக் வெல்ல 

வழிகாண்பிக்கின்றது.நாம் விரும்புவதையெல்லாம் தருகின்ற அதிசய சிந்தாமணி தான் இந்த 

ஆத்மஞானம்.இந்த உள்ஒளியில் சம்சாரக் கடலினுள் எதிர் கரையை அடைய முடியும்.இந்த வெளிச்சம் மட்டும் 

இல்லையென்றால் இந்த சம்சாரத்தில் கடந்து உழல வேண்டியது தான்.சில நேரம மூழ்கியும் 

போய்விடுவோம்.ஞான ஒளி ஒருவனை நேர் வழியில் போவதற்கு அவனது புத்தியையும் அறிவையும் 

தூண்டுகிறது.ஆகவே அவனது பாதையில் தடை ஏதும் வராது; வந்தாலும் அவனால் அவைகளை விலக்கிச் 

செல்ல முடியும்.சஞ்சலங்கள் ஏதுமில்லாத அவன் மனதை, ஆசைகளோ, கெட்ட வாசனைகளோ 

வலுவின்மையோ அணுகவே அணுகாது.

” ஞான ஒளியில் பார்க்கும்பொழுது உலகை அதன் உண்மையான நிலையில் காண முடியும்.இவ்வாறு 

தெளிவாகவும் பூரணமாகவும் பார்க்க முடிகின்றவர்களை அதிர்ஷ்டங்களோ துரதிர்ஷ்டங்களோ 

நெருங்குவதில்லை.”

சூரியனை மறைக்கின்ற மேகத்தை காற்று விலக்கிவிடும் ஆத்மாவை மறைத்துக் கொண்டிருக்கின்ற அஹம் 

பாவத்தை விலக்குவதற்கு ஆத்மஞானம் என்ற உள்ளொளியால்த்தான் முடியும்.பயிர் அறுவடை செய்ய 

எண்ணுகின்ற விவசாயி முதலில் வயதிலுள்ள மண்ணை கொத்தி உழுதல் தயார் நிலைக்கு கொண்டு 

வருவாரோ அது போல், நாமும் நமது மனதை முதலில தூய்மைப்படுத்த படுத்த வேண்டும்.அதற்காக 

நமதுமனதை ஞாஆனமென்கின்ற உள்ளொளியால் நிரப்ப வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s