யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 232

தினமொரு சுலோகம்.

நாள் 232

துவைதாத்வைதங்களில் எனும் மித்யை

பாவாத்வைதமுபாஶ்ரித்ய ஸத்தாத்வைதமயாத்மக:

கர்மாத்ஙைதமனாத்யத்ய த்வைதத்வைதமயோபவ!

भावाद्वैतमुपाश्रित्य सत्ताद्वैतमयात्मक:

कर्माद्वैतमनाद्यत्य द्वैताद्वैतमयो भव !

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, யார் சரீர உணர்வுகளுக்கப்பால் செயலாற்றுகிறார்களோ, அவர்கள் 

விவரிக்கமுடியாத அனுபவங்களுக்கு உடமையாகிறார்கள்.அப்படிப்பட்ட ஜீவன்முக்தர்களின் 

இலக்கணங்களை என்ன என்பதை உனக்கு விவரிக்கிறேன், கேள். இயற்கையாக ஒருவனில் நிகழும் 

கர்மங்கள் அவனில் ஆசையையோ ஆஸக்தியையோ உண்டு பண்ணுவதில்லை.ஜீவன்முக்தன் ஆற்றும் 

கர்மங்களும் அத்தகையைவையே.ஆசையை உளவாக்கின்ற கர்மங்கள் பந்தங்களையும் 

உண்டாக்குகின்றன.முக்தி நிலையை அடைந்த முனிகளிடம் அஹம் உணர்வு இராது.அப்படிப்பட்டவனில் 

உளவாகின்ற இயற்கையான குணங்கள் எவையோ அவை தான் முக்தனின் இலக்கணமும்.

புறம்பொருட்களுடன் ஏற்படுகின்ற தொடர்புகள் பந்தயங்களுக்கு காரணமாகின்றன.ஆனால், 

மனப்பூர்வமாகவல்லாமல், எதேச்சையாகத் தோன்றும் இயற்கை உணர்வுகள் எதையும் சார்ந்து 

இருப்பதில்லை- எதனாலும் உண்டாவதில்லை. 

பொருட்களுடன் தொடர்பு ஏற்படுகின்றதற்கு முன்  இருந்த இச்சை என்னவோ அது தான் இப்பொழுதும் 

அவனிடம் உள்ளது.அது இயற்கையானதும, துன்பமில்லாததும் மாசற்றதுமாகவிருக்கிறது. அப்படிப்பட்ட 

இச்சைகள் பந்தங்களையும் உண்டாக்குவதில்லை.

‘இதை எனதாக்கிக் கொள்ள வேண்டும் ‘ என்ற வேட்கை எப்பொழுது ஒருவனில் உதயமாகின்றதோ, 

அப்பொழுது அவனது இதயமும் மாசடைகின்றது.

விவேகம் உடையவன் அம்மாதிரி வேட்கைகளை எவ்வாறேனும் அழித்து விட வேண்டும்.பந்தங்களை 

உளவாக்கின்ற எல்லா ஆசைகளையும்- முக்தி வேண்டுமென்பது உட்பட- எல்லா ஆசைகளையும் விட்டு விட 

வேணடும் , இராமா.கடல் எவ்வாறு சாந்தமாயிருக்கிறதோ அது போல் அமைதியாக இரு.ஆத்மா ஜரா 

நரைகளுக்கும், இறப்பு- பிறப்பு என்பவைக்கும் அப்பால் நிலை கொள்கின்றது.அதில் எந்த சந்தேகமும் 

வேண்டாம்.இந்த பிரபஞ்சம் ஒரு மாயாகாட்சி தான் என்பதை உணர்ந்து, ஆசைகளின் அர்ததமின்மையை 

புரிந்துகொள்.

ஜீவாத்மாக்களில் நாலு விதமான உணர்வுகள் தோன்றுகின்றன:

1. நான், என் தாய் தந்தையிரிலிருந்து உண்டான இந்த தேகம்.

2. நான், இந்த உடலிலிருந்து வேறுபட்ட சூக்‌ஷ்மமான அணு தத்துவம்

3. உலகில் நிறைந்திருக்கின்ற பலதரப்பட்ட பொருட்கள் எல்லாவற்றின் உட்பொருளும் ஸனாதனமான 

தத்துவமும்’ நான்’ தான்

4. நானும் உலகமும் ஆகாயம் போன்று ‘ நிஶ்ஶூன்னியம்’ தான்.

இதில் முதலாவது ஜீவனை பந்தத்திற்குள்ளாக்கின்றது. மற்ற மூன்றும் முக்திக்கு வழி வகுக்கின்றன. 

முதலாவதுடன் தொடர்புடைய ஆசைகள் மேலும் மேலும் ஆசைகளை தூண்டிவிட்டு  அவனை மீண்டும் அதிக 

பந்தங்களில் கட்டிப்போடுகின்றது.மற்ற மூன்று எண்ணங்களின் தொடர்புடைய ஆசைகளும்  அவை அவனில் 

உளவாக்கின்ற   மன உறுதியும், அவனை எதற்கும் அடிமையாக்குவதில்லை.

ஒரு முறை ‘ நான் எல்லாவற்றின் ஆத்மா’ என்ற உண்மையை புரிந்து கொண்டு விட்டால்,அவன் 

வீழ்ச்சியடையவோ, சஞ்சலங்களுக்கு ஆட்படவோ மாட்டான்.இப்படிப்பட்ட ஆத்மாவைத் தான் வேத 

சாஸ்திரங்களில் ‘ சூன்னியம்’ ‘ இயற்கை ( பிரகிருதி)’ ‘ மாயை’ ‘ பிரம்மம்’ ‘ போதம்’ ‘ சிவம்’ ‘ புருஷன்’ 

என்பன போன்ற வார்த்தைகளால் விவரிக்கப் பட்டுள்ளது.அது தான் சத்தியம். மற்றொன்றிலும்’ ஸத்’ இல்லை.

” இந்த அத்வைத சத்தியத்தை உணருவாய், இராமா.அதை அறிந்து விட்டால், கர்மங்கள் துவைத 

தத்துவத்தை அடிப்படையாக கொண்டது என்ற உண்மையையும் அறிவாய்..அவ்வாறு உன் சுபாவம் 

துவைதாத்வைதங்களில்  அவைகளுக்கேற்றாற்போல் சஞ்சரிக்கட்டும்”

துவைதம் என்பதோ ஏகாத்மமோ எதுவுமே சத்தியத்தில் இல்லை. ஏகாத்ம தத்துவம் என்பது துவைதத்தின் எதிர் 

பதம் மட்டுமே. இரண்டுமே மனதின் கற்பனைகளே.இந்த கற்பனைகள் எல்லாம் இல்லாதாகும் பொழுது 

அனந்தாவபோதம்( பிரம்மம்) மட்டும் ஒரேயொரு உண்மையாக உணரப்படுகின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s