ஸர்வம் சக்திமயம் 9

பாகம 1                   தேவீ மாஹாத்மியம் 

அத்தியாயம் 9.                       லலிதா ஸஹஸ்ர நாமம் 2

                பண்டாசுர வதமும் ஸஹஸ்ரநாமாவளி உருவாக்கமும்
தேவர்கள் மஹா திரிபுரசுந்தரியை வணங்கி பண்டாசுரனை வதம் செய்து தங்களை காப்பாற்றுமாறு 

பிராரத்தித்தார்கள்.தேவியும் அவர்கள் மீது இரங்கி படையுடன் புறப்பட்டாள்.தேவியுடன் அணிமா, 

மஹிமா,ப்ரஹ்மா,கௌதாரி,வைஷ்ணவி,வாஹினி,மஹேந்த்ரி,சாமுண்டி மஹாலக்ஷ்மி,ஏனைய நித்ய 

தேவதைகள்,அவர்ண தேவதைகள்,என்று ஶ்ரீசக்கரத்தில் வசித்து வந்த எல்லோரும்  சென்றார்கள்.

ஸம்பத்கரி தேவி யானை ப் படைக்கு தலைமை தாங்கினார்.அசுவாரூடா தேவி குதிரை படைக்கு தலைமை 

தாங்கினார்.தண்டினி காலாட்படைக்கு தலைவியாக இருந்தாள் .அவள் கிரி சக்கரம் எனும்  ரதத்தில் ஏறி 

போருக்கு போனாள்.கேய சக்கரம் எனும் தேரில் மந்திரிணியினுடையது. அவளது உதவியாக 

சென்றாள்.ஜ்வாலா மாலினி தேவியின் படையைச் சுற்றி ஒரு நெருப்பு வலயத்தை சிருஷ்டித்து பண்டாசுரனால் 

அவர்களை நெருங்க விடாமல் செய்தாள்.

படைகளின் மத்தியில் ஶ்ரீசக்கரமெனும் ரதத்திலேறி போரிட்ட நிதயா தேவி பண்டாசுரனின் படைகளின் நல்ல 

தஒரு பகுதியை நாசம் செய்தாள்.பாலா பண்டாசுரனின்  மகனை கொன்றாள்.பண்டாசுரனின் 

சகோதரர்களான விஷஙாவையும் விஷுக்ராவையும் மந்திரினியும் தண்டினியும் வதம் செய்தார்கள்.

அசுரர்கள் தேவியின் படைகளை சுற்றி முற்றுகையிட்டபொழுது, தேவி திரிபுர சுந்தரி. காமேசுவரனின் 

உதவியுடன் கணேசனை தோற்றுவித்து,முற்றுகையை முறியடிக்க முயன்றாள். அப்பொழுது 

பண்டாசுரன்,ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, இராவணன் முதலிய அசுரர்களை தோற்றுவித்தார்.மாதா 

பராசக்தி விஷ்ணுவை பத்து அவதாரம் எடுக்கவைத்து அவர்களை அழித்தாள்.

பாசுபத அஸ்திரத்தால் அவனது படைகளையும் காமேசுவராஸ்திரத்தால் பண்டாசுரனையும் 

அழித்தாள்..தேவர்கள் எல்லோரும் தேவியை நமஸ்கரித்து புகழ்நதார்கள்.தேவி உலக நன்மைக்காக 

மன்மதனை உயிர்பபித்தாள். பிறகு சிவ சக்தி திருமணம் நடந்தேறியது.

ப்ரம்மாண்டபுராணத்திலுள்ள முதல் 34 சுலோகங்களில் இந்த கதை சொல்லப் பட்டுள்ளது. இந்த 

சுலோகங்களில் தேவியின் ஆயிரம் நாமங்கள் சொல்லப்படுகிறது. இதில் விசேஷம் என்னவென்றால் ஒரு 

பெயர் கூட ஒரு முறைக்கு மேல் சொல்லப்படவில்லை என்பது தான்.

ஏற்கனவே கூறியது போல் ‘ லலிதா ஸஹஸ்ரநாமம்’ ப்ரம்மாண்டபுராணத்தில் “‘ லலிதோபாக்கியானம்’எனும் 

பகுதியில் 36 ஆவது அத்தியாயமாக வருகிறது.அகஸ்தியருக்கு ஹயக்ரீவர் அளித்த உபதேச ரூபத்தில் 

தரப்பட்டுள்ளது என்றும் கூறினோம்.ஹயக்ரீவர் மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று நமக்கெல்லாம் 

தெரிந்ததே.

அவர் மஹா திரிபுரா சுந்தரி எனும்   தேவியின் தோற்றத்தையும்,அவளது லீலைகளையு ம்அவளது 

வாசஸ்தானமான ஶ்ரீ புரத்தையும் விவரித்து கூறிய பிறகு, அவளது பஞ்சதசாக்ஷரி எனும் மந்திரத்தின் 

மகிமையை விளக்கினார்.ஶ்ரீயந்தரா, ஶ்ரீ வித்யா, ஶ்ரீ லலிதாம்பிகா, மற்றும் ஶ்ரீ குரு மந்திரங்களின் 

ஒற்றுமையையும் கூறிவிட்டு அகஸ்தியருக்கு மற்ற தேவியரின்  ஸஹஸ்ர நாமங்களை   அறிமுகப் 

படுத்துகிறார்.ஆனால் அகஸ்திய முனி கேட்டுக்கொண்ட லலிதாம்பிகையின் ஸஹஸ்ரநாமாவளியைக் குறித்து 

மட்டும் ஒன்றுமே சொல்லவில்லை.அகஸ்திய முனிவர் திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்கவும் சீடனின் 

ஆர்வத்தை பாராட்டி விட்டு லலிதா ஸஹஸ்ர நாமத்தின் தைய்வீகத்தனமையையும் அதை முற்றிலும் தகுதி 

வாய்ந்த மாணாக்கனுக்கு மட்டுமே சொல்லிகொடுக்கலாம் என்றும்  கூறிவிட்டு அதை ஆரம்பத்திலேயே 

உபதேசிக்க கூடாது என்பதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.

ஒரு முறை ஶ்ரீ லலிதாம்பிகை தனது உப தேவிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தாள்.அப்பொழுது வாஸினி 

மற்றும் ஏனைய வாக் தேவதைகளை பார்த்து, ‘ ஶ்ரீ சக்கரம்  மற்றும், ஶ்ரீ வித்யா, போன்ற மந்திரங்களை அறிந்த 

நீங்கள்,நமது மகிமை விளக்கும் விதத்தில் ஆயிரம்  நாமங்களை கொண்ட ஸ்தோத்திரங்கள் புனைய

 முடியுமா ?’என்று  கட்டளையிட்டாள்.

வாஸினி மற்றும் ஏனைய வாக்தேவதைகள் உடனேயே லலிதா ஸஹஸ்ர நாமாவளியை தொகுத்து 

அளித்தார்கள்.அதை மௌனமாக ஏற்றுக்கொண்ட லலிதாம்பிகை, பின்னொரு  நாள் தனது தர்பாரில் 

அமர்ந்திருந்தான். அவள் முன்னால் எண்ணிலடங்காத விஷ்ணுக்களும் பிரம்மாக்களும் சிவன்களும், மந்திரினி, 

தண்டினி போன்ற சக்தி சொரூபமான  தேவிகளும் அமர்நதிருந்தார். எல்லோரும் அன்னையை வணங்கிய 

பின் , அன்னை கண் ஜாடையில் வாசினிக்கு ஸஹஸ்ர நாமாவளியை சொல்லுமாறு ஆணையிட்டார்.

எல்லா சக்தி தேவதைகளும்  எழுந்து நின்று கூப்பிய கரங்களுடன் லலிதா ஸஹஸ்ரநாமாவளியை சொல்ல 

ஆரம்பித்தார்கள்.

சபையினர்  அனைவரும் ஆச்சரியத்தால் வாயடைத்துப் போய் அமர்நதிருந்தனர். 

பாராயணம் முடிந்ததும் லோக மாதா அன்னை லலிதாம்பிகா மௌனம் கலைத்து கூறினாள்:’ வாஸினியும் மற்ற 

வாக் தேவிகளும் என் கட்டளைப்படி இதை உருவாக்கியுள்ளார்கள். இது உலக நன்மைக்காக உருவாக்கப் 

பட்டது, என் அருமை குழந்தைகளே. யார் இதை சிரத்தையுடனும் பக்தியுடனும் பாராயணம் 

செய்கிறார்களோ, அவல்களுக்கு எல்லா நன்மைகளும் சித்திக்கும்’.

இந்த நாமாவளியை யார்பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்கிறார்களோ , அவர்களுக்கு தன்னம்பிக்கையும் 

சாதிக்கும் திறனும் கிடைக்கும்.இதை பாராயணம் செய்வதனால் மூலம் கிடைக்கும் சக்தி நம்பிக்கை, மற்றும் 

மன உறுதியையும் பெறுவோம்.பொருளை புரிந்து பாராயணம் செய்தால் பூரண பலன் கிடைக்கும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s