சர்வம் சக்திமயம் 6

பாகம் 1. தேவீ மாஹாத்மியம்

அத்தியாயம்.7 லலிதா ஸஹஸ்ரநாமம். 1

தேவீ மாஹாத்மியத்திற்குள் நுழையும் முன் அதை அறிமுகப்படுத்தும் விதமாக இரண்டு கிருதிகளை நாம் பார்ககப் போகிறோம் ஒன்று பிரம்மாண்ட புராணத்தில் வரும் லலிதா ஸஹஸ்ரநாமம். இன்னொன்று அத்வைத ஆசான் ஆதிசங்கரன இயற்றிய ஸௌந்தர்ய லஹரி.

லலிதா ஸஹஸ்ரநாமம் தேவீ காவியங்களில் முதன்மையானது என்று கூறலாம். ஹயக்ரீவருக்கும் அகஸ்திய முனிவருக்கும் இடையில் நடக்கும் சம்பாக்‌ஷணை ரூபத்தில் வருகிறது.இந்த காவியம்.

பரமசிவன் தக்‌ஷ ப்ரஜாபதியின் மகளான சதியை மணம் முடித்து வாழ்ந்துகொண்டிருக்கும் காலம். தக்ஷனுக்கு பரமசிவனைக் கண்டாலே ஆகாது. சதியின் கட்டாயத்திற்காக மணம் செய்து கொடுத்திருந்தான்.. ஒருமுறை தக்ஷன் ஒரு யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான் . எல்லா தேவதைகளையும் தேவர்களையும் அழைத்துவிட்டு பரமசிவனையும் சக்தியையும் அட்டும்அழைக்கவில்லை
.’ தந்தை வீடு தானே அழைக்காவிட்டால் என்ன’ என்று ஆர்வத்துடன் யாகத்திற்கு கிளம்பினாள் சதி தேவி. பரம சிவன் தடுத்து பார்த்தார் . சதி தேவி கேட்கவில்லை.

” நீ அஅவமானபடுத்தப் பட்டு திரும்புவாய் ” என்றார் பரமன் . சதி புரிந்து கொள்ளவில்லை. தக்ஷனின் யாக ஸ்தலத்தில் பரமசிவன் சொன்னது போலவே நடந்தது. தன்னை அவமதித்ததைக் கூட சதி பொறுத்துக் கொண்டாள். ;ஆனால் தன கணவரை, இந்த பிரபஞ்சத்திற்கே ஈசுவரனான பரமனை அவமதித்ததைக் அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் யாகாக்னியில் விழுந்து உயிரை விட்டாள்

விவரம் அறிந்த பரமசிவன் ருத்ர தாண்டவம் ஆடினார்.. கடைசியில் தக்ஷனை கொன்று விடுகிறார். இருந்தும் அவர் கோபம் தணியவில்லை. அவர் நீண்ட தவத்தில் ஆழ்ந்து விட்டார்.

சதி தேவி இமவானின் மகளாக ஜனித்து வளர்நது பரமசிவனையே மணம் முடிக்க வேண்டும் எனக் காத்தருந்தாள். அதற்காக கடின தவமிருக்க முற்பட்டாள்..
அதே காலத்தில் தேவர்கள் சூரபத்மனை எதிர்கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சூரபத்மன் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறக்கும் மகன்தான் தன்னை வதம் செய்ய முடியும் என்றொரு வரம் வாங்கியிருந்தான்.

ஆகவே பரமசிவனின் தவத்தை கலைத்து பார்வதிக்கும் சிவனுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டியது தேவர்களின் தேவையாகிறது.

அவர்கள் மன்மதனிடம் பரமசிவனின் தவத்தை கலைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். மன்மதனும் மலரம்புகளை சிவன்மீது எய்தான். பரமனின் தவத்தை கலிக்க தன்னாலான முற்சிகளை எடுத்தான். பரம சிவன் கோபமுற்று கண்களை திறந்தார். நெற்றிக் கண்ணையும் திறந்தார்.. மன்மதன் எரிந்து சாம்பலானான். மன்மதனின் மனைவி ரதி தேவி , தேவர்களுடன் பரமசிவனை வணங்கி தன் கணவருக்கு உயிர்பிச்சை கொடுக்க வேண்டும் என்று மன்றாடினாள்.
பரமசிவன் மனம் இளகவில்லை.பரமசிவன் மன்மதனின் சாம்பலை கண்சிமிட்டாமல் பார்த்தார். அதிலிருந்து பண்டாசுரன் எழுந்து வந்தான்.
பண்டாசுரன் இந்த மூவுலகையும் தனதாக்கி. மாற்றி விட்டான்.அவன் தனது சாம்ராஜ்ஜியத்திற்குள் அமைந்த ஷோனிதாபுரத்தை தலை நகராக்கிக் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பித்தான்.அவனும் தேவர்களுக்கு தொந்திரவுகள் கொடுக்க ஆரம்பித்தான்.
தேவர்கள் தங்களது கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு செல்லுமாறு நாரத முனிவரை கேட்டுக் கொண்டார்கள்.நாரதர்
தேவர்களிடம் ஒரு யக்ஞம் அனுஷ்டிக்க சொன்னார் அவர்கள் அனுஷ்டித்தார்கள் யக்ஞத்தின் ஹோமாக்னியிலிருந்து ‘ லலிதா திரிபுரா சுந்தரி எழுந்து வந்தாள்
மாதா லலிதா திரிபுரா சுந்தரி அதீவ அழகுடையவளாக காணப்பட்டாள்.அடர்ததியான கருங்கூந்தலையுடைவளாகவும், செண்பகம், அசோகம், மல்லிகை முதலிய மலர்களின் வாசனையுடைய கூந்தலோடும், நெற்றியில் கஸ்தூரி திலகத்துடனும், முகமெனும் ஏரியில் நீந்தி விளையாடிக்கொண்டிருக்கின்ற மீன்களைக் போன்ற கண்களுடனும் ,நட்சத்திரங்களை தோற்கடிக்கும் பளபளப்புடன் மின்னிக் கொண்டிருக்கின்ற மூக்குத்தியுடனும், சூரியனுடன் சந்திரனும் இரு காதணிகளாக உருக்கொண்டு அலங்கரித்த காதுகளுடனும் தோன்றினாள்.
‘செக்கச் சிவந்தத் திருமேனி, சம்பகம், அசோகம் முதலான பூக்கள் சூடிய கூந்தல், பத்மராகக் கற்களால் ஜொலிக்கும் கிரீடம், பிறைச்சந்திரன் போன்ற நெற்றி, கருப்பு நிறக் கஸ்தூரிப் பொட்டு, அழகிய புருவங்கள், மீன் போன்ற கண்கள், சம்பகப் பூப்போன்ற நீண்ட மூக்கு, நட்சத்திரம் போல் ஜொலிக்கும் மூக்குத்தி, கடம்பப் பூங்கொத்து அலங்கரிக்கும் காதுகளில், சந்திர-சூரியரே தோடுகளாக திகழ்கின்ற,.பத்ம ராகத்தாலான கண்ணாடி போன்ற கன்னங்கள், பவளத்தை பழிக்கும் உதடுகள்’ என்று இந்த அன்னையின் அழகை விவரிக்கிறது லலிதா சகஸ்ரநாமம்.
இந்த இடத்தில் பிராமி பட்டர் பாடிய பிராமி அந்தாதாதியை நினைத்து பார்ப்பது உசிதமாகவும்.

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது,மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும் தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும்,உச்சித்திலகம் என்ற செம்மலரைப் போலவும்,எல்லோராலும் போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும் தாமரை ஒத்து விளங்கும் மலரில் வீற்றிருக்கும் திருமகளும் துதிக்க்க் கூடிய வடிவுடையவள் என் அபிராமியாகும்.அவள் கொடி மின்னலைப் போலவும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள்.இனி அவளே எனக்கு துணை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s