ஸர்வம் சக்திமயம் 11

பாகம் 1.                          தேவீ மாஹாத்மியம்

அத்தியாயம் 11.               லலிதா ஸஹஸ்ர நாமம்- பாராயண பலன்கள்

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம் பாராயணத்தால் எண்ணிலடங்கா பலன் கிடைக்கும்.

முதலாவதாக ஜகன்மாதா லலிதாம்பிகையின் மீது முழு நம்பிக்கை அர்ப்பணித்து அவள் திரு நாமங்களை 

இடை விடாமல் ஜபிப்பதால் நம்மையறியாமலையே தன்னம்பிக்கை உண்டாகும்.

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஜப் கோஷத்தால் சுற்றுச்சூழல் சூழ்நிலை புனிதமடையும்.

 ஆயிரம் நாமங்களை சொல்லும்பொழுது நமது சரீரத்திலுள்ள ஒவ்வொரு நாடி நரம்பும் முறைக்கேறி, 

நம்முள்ளேயே இருக்கும் சக்தியானது  வெளி வரும்.

ஶ்ரீ லலிதா தேவி எப்பொழுதும் தன் குழந்தைகளுடன் இருந்து அவர்களை வெற்றியடைய செய்கிறாள்.

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம் பாராயணம் வாக் சாதுர்யம்,பெயர், புகழ், நன் மதிப்பு தேடித்தரும்.

வெள்ளிக் கிழமை பாராயணம் செய்வது சாஅச் சிறந்தது என்றிருந்தாலும் என்று வேண்டுமானாலும் 

எப்பொழுது வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம். தாய் ஏற்றுக் கொள்வாள்.

பாராயணம்  ஆரம்பித்துவிட்டு முடிக்க முடியவில்லையே என்று யாரும் வருந்த வேண்டாம்; ஒவ்வொரு 

பெயரும் பொருள் பொதிந்தது ; அருள் மிகுந்தது.ஒரு பெயரை உச்சரித்தாலே தேவியின் கருணைக்கு நாம் 

பாத்திரமாகி விடுவோம்

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம் எல்லா தந்திர-மந்திரங்களை விட புனிதமானது; மிகவுமிரகசியமானது.

கோயில், குளங்களுக்கு போவதைவிட , புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வதை விட, தான தர்மங்களை 

செய்வதை விட மகத்தானது ஶ்ரீ லலிதாம்பிகையின் நாமத்தை உச்சரிப்பது. அப்படி உச்சரிப்பதன் மூலமாகவே 

தாயின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டு, நல்ல எண்ணங்களையும் நல்ல சிந்தைகளையும் நம் மனதில் 

உருவாக்கிவிடும்.

  பூஜா விதிகளில் ஏற்படும்  தவறுகளுக்கு ஶ்ரீ ஐகன்மாதாவின் நாம பாராயணம் பிராயச்சித்தமாகும்.
  லலிதா மாதவின் நாமங்களை கால  மரணத்தைக் கூட தடுத்து நிறுத்த வல்லமை படைத்தது.நம்பிக்கையுடன் 

நாம் பாஆயணம் செய்தால் காய்ச்சலை அகற்றிவிடும் நெற்றியில் கை வைத்து லலிதா நாமத்தை 

சொல்லுங்கள் வியாதி குணமாகிவிடும்.தலைவலி பறந்து விடும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து லலிதா ஸஹஸ்ர நாமம்  ஜபித்து விட்டு அந்த நீரால் அபிஷேகம் 

செய்தால் ஏவம் பில்லி சூனியமல்லாத முதலிய பாதைகள் ஒழிந்து விடும்.

சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் உண்டாகும்.

ஶ்ரீ ல்லித் ஸஹஸ்ர நாம பாராயணம் ஒரு சர்வ ரோக நிவாரணி. அடிப்படை தேவை நம்பிக்கை.காரண 

காரியங்களை தேடாமல் மாதாவின் மீது நம்பிக்கை வையுங்கள்; எல்லாம் சாத்தியமாகும்.
 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s