,ஸர்வம் சக்தி மயம் 10

பாகம் 1.                                     தேவீ மாகாத்மியம்

அத்தியாயம் 10.               லலிதா ஸஹஸ்ர நாமாவளியின் த்துவார்த்தவிளக்கம்

மகா திரிபுர சுந்தரியின் விஜயம் அஞ்ஞானத்தை ஞானம் வென்ற கதை.மாத்ரு உபாசனை் பாரதீய கலாச்சாரத்தின் ஒரு இன்றியமையாத அம்சம். ஸர்வ சராசரங்களுக்கும உற்பத்தி மாதாவிடமிருந்து தான் மாதா இல்லையென்றால் உற்பத்தியில்லை. மாதாவாக பிரகிருதி என்றும் குறிப்பிட்டுள்ளார்கள் வேத 

உபநிஷத்துக்களில்.

லலிதா ஸஹஸ்ரநாமம் ஆரம்பிப்பதே ‘ ஹே, மாத்ரு நம:’ என்று தான்.ஜகன் மாதாவிற்கு நமஸ்காரம் என்பது நமது கலாச்சாரத்தின் அடித்தளம். கடவுளை ‘மாதா’ என்ற அழைத்து அணுகும்பொழுது நாம் குழந்தையாகிவிடுகிறோம்.குழந்நதை மனம் களங்கமற்றது.அதில் ‘ நான்’ என்ற அஹம்காரத்திற்கோ, ‘ 

எனது’ என்ற ‘ மமதாகாரத்திற்கோ’ இடம்கிடையாது. சம்சார ந்த உணர்வுகள் குழந்தையிடம் கிடையாது. பெரியவர்கள்தான் இது உன் தந்தை, சகோதரி, சகோதரன், இது நம் வீடு என்ற பந்த உணர்வுகளை உளவாக்குவது.லலிதா என்றால் குழந்தை போல் நளினமானவள்,அழகானவர்கள்,வாத்சல்யமுடையவள் என்று பொருள்.குழந்தை முதல் கல்வியறிவு பெறுவது தாயிடமிருந்து தான். பின்னால் வரும் அறிவெல்லாம் இந்த அடிப்படை அறிவின் மீது  கட்டி யது தான். ஜீவாத்மா மாதாவிடமிருந்து பெறும் அறிவை ஆராய்ந்து, அதனுடன் சேர்த்தும் கோர்ததும் பிரித்தும் தனது அறிவை விருத்தி செய்துகொள்கின்றது. ஆகவே மாதாவை -ஜகன் மாதாவை- ஶ்ரீ வித்யா என்றழைக்கறோம்.ஜீவாத்மாக்களின் மொத்த உருவம் தான் ஆதி ப்ராணனும் சக்தியான லலிதாம்பிகை.ஆதியும் அந்தமும் இல்லாத ஆனந்த சாகரம் அவள்.
கடவுள் உணர்வை- தன்னைத் பற்றிய – உணர்வை ஜீவாத்மாக்களின் மனதில் உண்டுபண்ணுவதும் அவளே. 

வேதாந்தங்கள் விளக்கும் ஞானத்தை பிரம்ம வித்யா என்றழைக்கறோம். ஏனென்றால் ஶ்ரீ வித்யா தான் எல்லா ஞானத்தின் மூலமும்.ஶ்ரீ வித்யாவின் ஆன்மா ஶ்ரீ சக்கரம் அது இந்த பிரபஞ்சத்தின் வரைபடம்.அதன் மத்தியில் உள்ள பிந்துவில் ஶ்ரீ லலிதாம்பிகை அமர்ந்திருக்கிறார்.மந்தரம், யந்தரம், தந்தரம் என்பவை ஶ்ரீ 
வித்யாவின் முப்பரிமாணங்கள்.மந்தரத்தின் சித்திர ரூபம் யந்த்ரம். தந்திரங்கள் மனோ சொருமிப்பிற்கான ஆசார அனுஷ்டானங்கள். குண்டலினியில் குடியிருக்கும் சக்தியை வெளிக் கொணருவதற்கான மார்ககங்களே.

ஶ்ரீ இராம கிருஷ்ண பரம ஹம்ஸர் தனது உடலை ஒரு யந்திரமாகவே பாவித்தார்..அவர் அன்னையை பார்த்து கூறுவார்:’ தாயே, நான் வெறும் கருவிதான். இயக்குபவள் நீயே.’ பாவனோபநிஷத் மனித சரீரத்தை ஒரு யந்திரமாகவே விவரிக்கிறது.

ஶ்ரீ வித்யா முக்திக்கான எல்லா மார்ககங்களையும் ஒரு போல் மதிக்கின்றது.பிரம்ம வித்யையும் ஶ்ரீ வித்யையும் தனித்தனமை வாய்ந்தவை. லலிதா உபாசனை நிர்குண உபாசனையையும சகுண உபாசனையையும் தன்னுள் அடக்கியுள்ளது. லலிதா உபாசனை பக்தி மார்கக்தையும், கர்ம மார்கக்தையும் ஞான மார்ககத்தையும் 

தன்னுள் கொண்டுள்ளது. 

லலிதா உபாசனை அல்லது சக்தி உபாசனை கிரகஸ்திகளுக்கும் சன்னியாசிகளுக்கும் ஒரு போல் முக்திக்கு வழி காட்டுகிறது.ஶ்ரீ லலிதா எல்லா உருவங்களின் ஏகோபித்த உருவம். பகவான் கிருஷ்ணன் விசுவ ரூப தரிசனத்தில் இந்த பிரபஞ்சமே – சூரியனும் சந்திரனும் அக்னியும், கடலும், மலையும் எல்லாம் தன்னுள் அடக்கம் என்று காண்பித்தான். அந்த கிருஷ்ணனும் மாதாவில் அடக்கம் என்கிறது ஶ்ரீ லலிதா உபாசனை.

குண்டலினி சக்தி தான் நம் சரீரத்தின் எல்லா சக்திகளுக்கும் ஆஸ்தானம் ஶ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் ஶ்ரீ சக்கரத்தைக் குறித்து கூறும் பொழுது நமது உடலிலுள்ள மற்ற சக்கரங்களையும் குறிப்பிடுகிறது.நமது உடலில ஆறு சக்கரங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரம், அனாஹதம்,விசுத்தி, மற்றும் ஆக்ஞா சக்கரம்.சங்கரன் ஸௌந்தர்ய லஹரியும் கீழ்க்கண்டவாறு கண்டவாறு கூறுகிறார்:

மஹீம் மூலாதாரே  கமபி மணிபூரே ஹுதவஹம்

ஸ்திதம் ஸ்வாதிஷ்டாஸன ஹிருதிமருதமாகாஶப்ருபரி

மனோ   அபி ப்ரூமஸ்தய ஸகலமபி பித்யுதா குலபதம்

ஸஹஸ்ஆஸர பத்ம ஸஹ ரஹஸி  புத்யா விஹரஸ்ஸ

மூலாதரத்தின் பூமி தத்துவத்தையும்,,மண்ணிபூரத்தினுடைய ஜல தத்துவத்தையும், ஸ்வாதிஷ்டாத்தின் அக்னி தத்துவத்தையும், இதயக்கமலத்தின்( அனாஹத சக்கரத்தின்) வாயு தத்துவத்தையும் ,அதற்கு மேலேயுள்ள விசுத்தி சக்கரத்தினுடைய ஆகாசதத்துவத்தையும்,ப்ரூமத்தியில் நிலைகொள்கின்ற மனோ தத்துவத்தையும் 
தாண்டி, அன்னையே,  தாங்கள் ஸஹஸ்ரார பத்மத்தில் தங்கள் பதியான பரம  சிவனுடன் இரகசியமாக வசித்து வருகிறீர்கள்.

அன்னையே தாங்கள் பஞ்ச பூதங்களானதாக இந்த சரீரத்தில் இரகசியமாக வசித்து வருகிறீர்கள் என்கிறார் ஆதி சங்கரர்.

ஸுதாதாரா ஸாகரஶ்சரண யுகலாந்தர்  விகலித:

ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தி பு னரபி ரஸாம்னாயமஹஸ:

அவ்யாப்ய ஸ்வாம் பூமிம் புஜகனிபமதுஷ்டவலயம்

ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகண்டே குஹரிணி

ஸஹஸ்ரபத்மத்தில் அமர்நதிருக்கும் தாயே, உன் மாதங்களிலிருந்து அதி சக்தியுடன்ஒழுகி வரும் அமுத தாரையால் தங்கள் பக்தனின்சரீரம் முழுவதும் நனைத்து,திரும்பவும்  தன் இருப்பிடமான மூலாதரத்தின் சக்கரத்திற்கு சென்று, ஒரு சர்பபம் மூன்றடி சுற்றாக குண்டலினியாய், ஒரு சிறு துவாரத்துடன் கூடிய
குல கண்டத்தில்( தாமரை கிழங்கு வடிவத்தில்) உறங்குகிறீர்கள்.

அன்னையே, தாங்களே எங்களது சக்திக்கெல்லாம் காரணம். எங்கள் குண்டலினி சக்தி தாங்களே.
இந்த விசுவ பிரபஞ்சத்தைக் குறித்துள்ள எதிர்மறை எண்ணங்களுக்கும் கேள்விகளுக்கும் லலிதா உபாசனை பதில் அளிக்கிறது. இந்த பிரபஞ்சம் நன்மைக்கும் தின்மைக்கும் நடக்கும் போராட்டச் களமல்ல;இது அன்னையின் ஒரு விதமான விளையாட்டுத்தான்்அன்னை லலிதா சித் ஸ்வரூபிணி;அவள் ஆனந்த பூரணி.இந்த 

விசுவ பிரபஞ்சம் அவளது விளையாட்டு மைதானம்தான்.ஆகவே இங்கு திகழ்பவை யாவும் அவளது தலீலைகளேயன்றி வேறில்லை.அன்னையின் அரவணைப்பில் விளையாடி ஓய்ந்து போயவள் மடியில் அடைக்கலமாக நித்ய ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.

ஆசனைகளற்றதாகும் மனம் அன்னையின் லீலைகளை அமைதியாகவும் ஆனந்தத்துடனும் அனுபவிக்கலாம்.ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சிவ- சக்தி ஐக்கியத்தை வலியுறுத்துகிறது.ஆகவே அன்னை ‘சிவ சக்தி ஐக்கிய ரூபிணி ‘ என்று அறியப்படுகிறாள்.

சிவசக்தி ஐக்கியம் என்றால் ஆத்மா பரமாத்மா ஐக்கியம் என்று பொருள் படுகிறது.

இந்தக் கருத்து ஆதி சங்கரனுடைய சௌந்தர்யலஹரியிலும் காணப்படுகிறது.

           தவாதாரே மூலே ஸஹ ஸம்யயா லாஸ்யபராய

            நவாத்மானாம் மன்யே நவரஸமஹாதாண்டவநடம்

            உபயாப்யமேதாப்யுதய விதி முத்யஶ்ய தயயா

           ஸனாதாபயாம் ஜஞ்ஞாஜனக ஜனனத்துடன் ஜகதிதம்

அன்னையே, தாங்கள் மூலாதார சக்கரத்தில், லாஸ்யபராய பிரியையான சமயா தேவியுடனும் நவ பைரவர்கள் சேர்நதுண்டான மஹா பைரவனுடனும்  லாஸ்யபராய- ஆனந்த தாண்டவம் ஆடி, மஹா பிரளயத்தில் அழிந்து போன விசுவத்தை புனர் ஜனிப்பிக்கின்றாய். லாஸ்யம் ஸ்த்ரீத்துவ பிரதானமானது.ஸ்த்ரி சரீர அமைப்பு தாண்டவ நடனத்திற்கு உகந்ததல்ல. தாண்டவ பௌரு பிரதானமானது. லாஸ்ய தாண்டவ நடனம் ஸ்த்ரீ-புருஷ ஸம்யோகத்தைக் குறிக்கிறது. இந்த ஸம்யோகத்தால் உத்பத்தி தொடர்கிறது. அதாவது சிவ சக்தி ஐக்கியத்தில் சிருஷ்டி கர்மம் நடை பெறுகிறது. சமயா தேவீ லாஸ்ய பிரியை என்று சொல்வதால் 
தேவியின். ஸ்த்ரீத்துவமும், அவளது ஸ்வாதிஷ்டனத்திலுள்ள ஞானாக்னியில் காலபைரவனாகவும் -அதாவது புருஷ் பாவமாகவும் பாவித்து- யுகாந்தத்தில் அழிகின்ற பிரபஞ்சத்தை மீண்டும் உத்பூதமாக்குகிறாள். 
அன்னையே சிருஷ்டி கர்தா, அவளே பாதுகாவலர், ஸம்ஹார மூர்த்தி
இதையெல்லாம் சொல்லும்பொழுது இன்றொன்றையும் சொல்ல கடமைப்பட்ட பட்டுள்ளேன்.அத்வைத சித்தாந்தங்கள் போல் இங்கு யுக்தி வாதத்திற்கு இடமில்லை. யுக்தி வாதம் எல்லாம் முடிவடைந்து, 

பரிபூரணமான நம்பிக்கை உதயமாகும் பொழுது தான் லலிதா உபாசனை ஆரம்பிக்கிறது.மாத்ரு பக்திக்கு யுக்திவாதம் தேவை கிடையாது. 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s