ஸர்வம் சக்தி மயம் 12

பாகம 1.                           தேவீ மாஹாத்மியம்

அத்தியாயம் 12.               லலிதா ஸஹஸ்ரநாமம்-நாமங்களின் மகத்துவம்.

லலிதா ஸஹஸ்ர நாமாவளியில் ஒவ்வொரு நாமத்திற்கும் தனி மகத்துவமும் பொருளும் உளது. இவை 

தேவியின் குண நலன்களையும் உருவ அழகையும் பாராட்டி சொல்வது போல் இருந்தாலும் அவை 

எல்லாவற்றிற்கும் உட்பொருளும் உண்டு.இந்த ஆயிரம் நாமங்களையும் தனித்த தனியாக விளக்கிக் கூறுவது 

இந்த தொடரின் நோக்கமல்லாததால்,அவைகளை தேவியின் குண நலன்களோடு பொருத்தி சில 

தொகுப்புகளாக தர முயலுகிறேன். இந்த தொகுப்பு அறுதியானது என்றில்லை. வேறு வித்த்திலும் தொகுக்க 

இயலும்.

மாத்ருபாவம்

ஶ்ரீமாதா

 தேவியின் நாமங்களை வெளிப்படுத்தும் முக்கியமான குண விசேஷம் தேவியின் மாத்ரு பாவம் தான். 

எல்லோரையும் தன் குழந்தைகளாக பாவித்து தன் அருளை வழங்குகிறார்கள் ஜகன்மாதா. மாத்ரு பாவம் 

என்பது அன்பை மட்டும் பிரதிநிதீகரிப்பதல்ல. மன்னிக்கும் மனோபாவம், பலன் எதிர்பாராமல் கருணை 

காட்டுவது, தான் கஷ்டப்பட்டாலும் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணெம் 

மஇவையெல்லாம் தாய்மையின் குணாதிசயங்களாகும்..

எல்லோருக்கும் பௌதிக வாழ்வில் ஒரு  தாயுண்டு. பிறவிகள் அனேகம் என்பதால் தாய்மார்களும் அனேகம் 

ஆனால் ஶ்ரீ லலிதாம்பிகை தான் முதன்மை தாய்.ஆகவே தான் ஶ்ரீ மாதா என்று சொல்லப்படுகிறது. 

பௌதிகவாழ்வில் நமக்கு கிடைக்கும் தாய்மார்கள் தாய்மையின் குண நலன்களை பெற்றிருந்தாலும் 

அவர்களது செயலாற்றும் திறைமைகள், நன்மை பயக்கும்  திறன் இவைகளுக்கு  ஒரு எல்லையுண்டு. நாம் 

அவரவர்களின  பிராரப்தத்தின்படி கர்மங்கள்ஆற்றுவதும் அவைகளின் பலன்களை அனுபவிப்பதும் உலக 

மாதாவின் நியதி. அதை யாராலும் மாற்ற முடியாது.

ஆனால் ஶ்ரீ லலிதாம்பிகை இந்த பிரபஞ்சத்தின் தாய். அவள் தான் சிருஷ்டி கர்ததா. இந்த பிரபஞ்சம் 

அவளிலிருந்து தோன்றுகிறது, அவளது கருணையால் நிலை நிற்கின்றது, கடைசியில் அவளிலேயே 

லயிக்கின்றது.

‘புனரபி ஜனனம், பனரபி மரணம்’ என்ற நியதிப் படி நாம் சம்சாரக் கடலில் கரையேற வழி தெரியாமல் உழன்று 

கொண்டிருக்கோம்.இந்த சம்சாரக்கடலிலிருந்து  நம்மை காப்பாற்றக் கூடிய வல்லமை அந்த 

லலிதாம்பிகைக்கு மட்டும் தான் உள்ளது. ஆகவே அவளை ஶ்ரீ மாதா என்றழைக்கறோம்.அவள் ஒருத்தி தான் 

நமக்கு பிரம்ம ஞானத்தை தெளிவு படுத்த முடியும். பிரம்ம ஞானம் தான் கிடைப்பதற்கரிய செல்வம்.

 ‘ ஶ்ரீ’என்றால் ஐசுவரியங்கள், செல்வம் என்று பொருள். செல்வங்களுக்கெல்லாம்  செல்வம் பிரம்ம 

ஞானம்.அந்த ஞானத்தை நல்குகின்ற தாய ஶ்ரீ மாதா.

இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் லலிதாம்பிகை லக்ஷ்மீ தேவி, சரஸ்வதீ தேவி, ருத்ரனி தேவீ ஆகிய 

முப்பெரும் தேவிகளுக்கும்  தாய் . ஆகவே ஶ்ரீ மாதா.

துர்வாச மாமுனிவர் ஶ்ரீ மாதாவின் மகிமை குறித்து 61 சுலோகங்கள் இயற்றியுள்ளார்.அவர் ஶ்ரீ மாதாவின் முன் 

தன்னை அர்பபணித்துக்கொண்டு சொல்கிறார்:’ என் தாயே! கருணைகடலே!நான் பல பிறவிகளில் பல 

தாய்மார்களின் குழந்தையாக பிறந்திருக்கேன்.மீண்டும்  பிறப்பதற்கும் அந்த பிறவிகளின் துன்பங்களை 

அனுபவிப்பதற்கும்.பயமாக இருக்கிறது.தாயே நீயே எனக்கு சரணம். என்னை இந்த பிறப்பு- இறப்பு எனும் 

சக்கர சுழற்சியிலிருந்து காப்பாயாக்”‘

ஶ்ரீ என்பது மேன்மையை குறிக்கிறது. தேவீ உபாசனையில் ஐந்து முக்கியமான வார்ததைகளுடன் ‘ ஶ்ரீ’ 

சேர்க்கப்படுகிறது. இந்த ஐந்தையும் சேர்த்து பஞ்சகம் என்று சொல்வார்கள்.அவை முறையே, ஶ்ரீ புரம், – தேவி 

வசிக்கும் நகரம்,ஶ்ரீ. சக்கரம்- தேவி யின் அரண்மனை- தேவி தன் சேவகர்களுடன் வசிக்கும் இடம், 

ஶ்ரீவித்யா,-தேவீ உபாசனை முறை, ஶ்ரீ ஸூக்தம்-தேவீ ஆராதனை சுலோகங்கள், ஶ்ரீ குரு-சக்தி 

உபாசனையை  நமக்கு சொல்லித்தரும்படி சக்தி ஆசான்.

ஶ்ரீ என்பதன் இன்னொரு அர்த்தம் வேதங்கள். வேதங்கள் பிரம்மாவின் நாவிலிருந்து வந்தவையாகும்.

ஶ்ரீ லலிதாம்பிகையே பிரம்மன்.

ஸ்வேதஸவதர உபநிஷத் கூறுகிறது, ” …………….முதலில் பிரம்மனை படைத்தாள் (ர்).பிறகு வேதங்களை 

அவரிடம் ஒப்படைத்தார்கள். முக்தி நாடி நிற்கும் ‘ நான்’  அந்த பிரம்ம ஞானத்தை  

வெளிப்படுத்துகிறார்களோ, அவர்களை சரண் அடைய வேண்டும்.”

ஶ்ரீ மாதா என்பது ‘ பஞ்சதசி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது.

.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s