ஸர்வம் சக்திமயம் 13

பாகம்1.                             தேவீ மாஹாத்மியம் 

அத்தியாயம் 13.                லலிதாவின் திரு  நாமங்கள்- சிறு விளக்கம்

மாத்ரு பாவம்

இரண்டாம் மந்திரம் – ஶ்ரீ மஹாராஜ்ஞி

இரண்டாவது மந்திரமும் ஶ்ரீ என்ற அடைமொழியுடன் ஆரம்பிக்கிறது.ராஜ்ஃனி என்றால் ராணி அல்லது அரசி 

என்று பொருள். மஹா ராஜ்ஃனி என்றால் மஹா ராணி என்று பொருள். ராணிகளுக்கெல்லாம் ராணி.ஶ்ரீ 

மஹாராணி என்றால் எல்லா மஹாராணிகளுக்கும் மஹாராணி. இந்த பிரபஞ்சத்திற்கே ராணி. அரசி அல்லது 

ராணி அரச குடும்பத்து குழந்தைகளுக்கு மட்டும் தாயல்ல; நாட்டு மக்களுக்கெல்லாமே தாய் அப்படிப்பட்ட 

ராணிகளுக்கெல்லாம் ராணி என்றால் இந்த பிரபஞ்சத்திலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் தாய; உலக மாதா.

இன்னொரு விஷயம் இங்கு குறிப்பிடுவது அவசியம் என்று நினைக்கிறேன்.

ஸம்ஸக்ரிதத்தில் எல்லா பெயர்களுமே சக்தி வாய்ந்த பீஜாக்‌ஷரங்களால் உருவானது.பீஜம் என்றால் விதை; 

ஆரம்ப புள்ளி.அது இல்லையேல் மேற்கொண்டு எதுவுமில்லை.ஆனால் பீஜங்களை பெயரிலிருந்து பிரித்து 

எடுக்க முடியாது. பீஜம் என்றால் தனி ஒரு எழுத்து என்று சம்ஸ்கிரதத்தில் சொல்வார்கள்.அது ஒரு எழுத்தாக 

இருக்கலாம் ; அல்லது பல பீஜங்களை சேர்ந்து உருவான கூட்டெழுத்தாக இருக்கலாம்இந்த பீஜாக்‌ஷரங்கள் 

மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் அதை தொடர்ந்து உச்சர்ரிப்பவர்களுக்கு- அர்த்தத்தை புரிந்துகொண்டு 

உச்சரிப்பவர்களுக்கு மிகுந்த நற்பலன்களை விளையுமென்றும் நம்பப் படுகிறது.இவைகளின் உச்சரிப்பிற்கு 

கடுமையான நியதிகளுமுண்டு.

இந்த தருணத்திலும் தந்திர முறை உபாசனை குறித்து ஒரு சில வார்த்தைகள் சாதாரணமாக தந்திர சாஸ்திர 

உபாசனை உடனடி பலன் தரக்கூடியவை என்ற ஒரு நம்பிக்கை உண்டு.இவைகளில் முதன்மை ஸ்தானத்தில் 

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம உபாசனைக்கு உண்டு. லலிதா மாதாவை ஆராதித்து பத்து ஸஹஸ்ர நாமாவளிகள் 

உண்டு. அவை ஒவ்வொன்றும் உலக மாதாவின் பல அவதாரங்களும் குறித்து சொல்லப்படுவதாகும்.அவை 

முறையே கங்கா, காயத்ரி,ஶ்யாமளா,லக்‌ஷ்மி,காளி,பாலா, ராஜராஜேஸ்வரி,ஸரஸ்வதி, பவானி மற்றும் 

லலிதா. இதில கடைசியைத்தான் நாம பார்ததுக்கொண்டிருக்கிறோம்.

மந்திரம் என்றால் கடவுளின் புருஷ் அவதாரங்களும் உபாதிக்கும் வித்யா என்றால் ஸ்த்ரீ அஅவதாரங்களும் 

ஆராதிப்பதின் ஆகும்.

ஆனால் லலிதா ஸஹஸ்ர நாம உபாசனை ஶ்ரீ வித்யா எனப்படுகிறது.அதாவது இது ஒரு மந்திர 

உபாசனையும் வித்யா உபாசனையும் ஒருங்கே சேர்ந்தது. சிவ சக்தி சம்யோக உபாசனை.

பஞ்சதசி மந்திரம் என்றால் பதினைந்து மாத்திரைகள்- பீஜங்களை அடங்கியது என்று பொருள்.பஞ்சதசி 

மந்திரங்கள் பன்னீரண்டு விதமானவை. அவையில் முக்கியமானது, காடி வித்யா, அல்லது பரா வித்யா 

என்பதாகும்.பஞ்சதசி மந்திரத்தில் பதினைந்து பீஜங்கள் தான் உள்ளது என்று தோன்றினாலும் உண்மையில் 

அதில் முப்பத்தியேழு எழுத்துக்கள் உள்ளன. பதினைந்து உயிர் எழுத்துக்கள், பதினாறு 

மெய்யெழுத்துக்கள்,மூன்று பிந்துக்கள்,மற்றும் மூன்று நாடாக்கள்.அப்படி முப்பத்தியேழு எழுத்துக்கள் 

ஆகவே இதை த்ரிதசீ என்றும் கூறுவார்கள்.இந்த முப்பத்தியாறு எழுத்துக்களை முப்பத்தியாறு த்த்துவங்களை 

குறிக்கின்றன. முப்பத்தியேழாவது பரப் பிரம்ம த்த்துவம். .அதை ‘அ’ என்று குறிப்பிடுகிறார்கள்.லலிதா த்ரிசதி  

ஏமுழுக்க முழுக்க பஞ்சதசி மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. த்ரிசதீ மந்திர உபாசனைக்குப் பின் 

வேறு ஒரு பூஜையில் செய்யக்கூடாது என்பது நியதி. அதற்கு பின் ஆரத்தி மட்டும்தான்.

சோடஸி மந்திரம் தேவீ உபாசனையில்   மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.சோடஸி என்றால் 

பதினாறு கலைகள்- எழுத்துக்கள்.சந்திரன் வளர்வதும் தேயவதும் பதினாறு நாட்களுக்கு .அமாவாசை 

நாளிலிருந்து பௌர்ணமி நாள் வரையும் மறுபடியும் அமாவாசை வரையும்.பஞ்சதசியுடன் ஒரு பீஜாக்‌ஷரத்தை 

சேர்த்தால் சோடஸி.பதினாறாவது பீஜாக்‌ஷரம் நாலு எழுத்துக்களின் கூட்டு.ஶ+ர+ஈ+ம்=ஶ்ரீம்.இதை லகஷ்மி 

பீஜம் என்று சொல்லப்படுகிறது.அது ஜீவ ராசிகளின் இருப்புக்கு அவசியமானது.

ஶ்ரீ மாதா சிருஷ்டி சக்தியை குறிப்பிடுகிறதென்றால் ஶ்ரீமஹாராஜஃஞி  சம்ரக்ஷணாசக்தியை 

குறிக்கிறது.அரசியின் கடமை தன் மக்களை வளமுடன் வைத்துக்கொள்வது.அதையும ஶ்ரீ லலிதாம்பிகை 

செவ்வனே நிறைவேற்றுகிறாள்.


.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s