ஸர்வம் சக்திமயம் 14

பாகம 1.                       தேவீ மாஹாத்மியம்

அத்தியாயம்  14.           ல்லிதாவின் திருநாமங்கள் 3-5

3.சிம்ஹாஸனேஶ்வரி

ஶ்ரீ லலிதாம்பிகை சிம்மவாஹினியாக காட்சி தருகிறாள்.சிம்மம தைரியத்தின் பிரதீகம். விலங்குகளின் அரசன். 

சிம்மம் தாயின் குழந்தைகளை பாதுகாக்கின்ற குணத்தை எடுத்து காட்டுகிறது மட்டுமல்லாமல் தீமையை 

அழிக்கவும் செய்வாள் மாதா என்று குறிப்பிடுகிறது. மேலும் சிருஷ்டி அல்லது படைத்தல்அல்லது ஆக்கல் 

மற்றும் பாலனம் அல்லது காத்தல் , என்ற இரண்டு கர்மங்களை முதல் இரண்டு  நாமங்கள் 

குறிப்பிட்டதென்றால், மூன்றாவது திருநாமம் ‘அழித்தலை’ குறிக்கிறது.

‘ ஶ்ரீ மத் ‘ என்ற சொல் தேவிக்கு அளிக்கப்படும் மரியாதையைக் குறிக்கிறது சிம்மாசனேசுவரி என்றால் 

சிம்மமாகின்ற ஆசனத்தில் – இருக்கையில் அமர்ந்து அரசாளுபவள்- நல்லவர்களை காத்தும், தீயவர்களை 

அழித்தும் ஆட்சி நடத்துபவர்களுக்கு மாதா லலிதாம்பிகா தேவி ஒரு முன்னுதாரணம்.

இவ்வாறு முதல் மூன்று திருநாமங்கள் ஶ்ரீ என்ற எழுத்துடன். துவங்குகிறதிற்கு. ஶ்ரீ என்றால் செல்வம் – 

ஐசுவர்யம்.இந்த பீஜாக்‌ஷரம் லக்‌ஷ்மியை குறிப்பிடுகிறது. லகஷ்மி திருமாலின் மனைவி. ஶ்ரீநிவாஸன்- ஶ்ரீ 

குடியிருக்கும்  செல்வத்தின் நாயகன். அப்படிப்பட்ட ஶ்ரீ யை உபாசிப்பவர்கள சர்வ ஐசுவரியங்கிளுக்கும் 

பாத்திரமாவார்கள்.

ஞானார்ணவா என்ற ஒரு புராதன கிரந்தத்தின் படி எட்டு சிம்ஹாஸன மந்திரங்கள்  உள்ளன.ஶ்ரீ சக்கரத்தின் 

நான்கு மூலையிலுமுள்ள பிந்துக்களின் நான்கு பக்கமும் மற்றும் பிந்துவிலும் இந்த சிம்ஹாஸன மந்திரத்தை 

சொல்லி பூஜை செய்ய வேண்டும்.இருபத்தி நான்கு தேவிகளை  சிம்ஹாஸன மந்திரத்தால்  உபாசனை செய்ய 

வேண்டும்.

இந்த சிம்ஹாஸனேசுவரி என்ற நாமத்தின் மூலம் ஶ்ரீ லலிதாம்பிகை அந்த இருபத்தி நான்கு தேவிகளுக்கும் 

ஈசுவரி என்று அர்ததமாகிறது.முதல் மூன்று திரு நாமங்கள் தேவியின் படைத்தல் அல்லது, காத்தல் அழித்தல் 

என்ற மூன்று சக்திகளை குறிப்பிடுகிறது. மூன்றாவது சக்தியான அழித்தல் பாபங்களை அழித்து தன்  

பக்தர்களை தன்னில் லயிப்பிக்கின்ற சக்தியை குறிப்பிடுகிறது .நான்காவது நாமம். ஜீவாத்மா பரமாத்மாவில் 

லயிக்கின்றது  என்பதை  சுட்டிக்காட்டுகிறது.

4.சிதாக்னிகுண்டா-சம்பூதா

‘சித்’  நிர்குண பிரம்மத்தை குறிக்கிறது. நிர்குணம் என்றால் உருவமோ மற்ற எந்த குண நலன்களோடு 

இல்லாதது.அக்னி குண்டம் என்றால் ஹோமகுண்டம். அதில் ஹோம திரவியங்களை அர்பபணித்துக்கொண்டு 

உபாசனை செய்யப் படுகிறது.சம்பூதா என்றால் தோன்றியது.ஹோமகுண்டத்திலிருந்து தோன்றியவள்.சித் 

எனும் நிர்குணமான ஹோமகுண்டத்திலிருந்து தோன்றியவள் லலிதாம்பிகை.

ஹோமகுண்டம் இருளை இல்லாதாக்கி ஓளியை பரப்புகிறது.அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை 

அளிப்பவர்கள்.அக்னிகுண்டத்திலிருந்து தோன்றியவள் என்றால் ஶ்ரீ மாமாவை ஒளிப்பிழம்பான ஞானத்தை 

பிரதிநிதீகரிப்பவள் என்று பொருள்.அவளே பரமாத்மா.அவளிலிருந்துதான் எல்லாமே தோன்றியன.சுத்த 

போதமான பரப்பிரம்மம் சுயம்பிரகாசமானது.மாயை அழிக்க வல்லது இந்த ஆத்ம பிரகாசம்.

பகவத் கீதையில் நான்காம் அத்தியாயம் 37 வது சுலோகத்தில் கிருஷ்ணன் சொல்வார: சகல கர்மங்களும் 

ஞானாக்னியில் எரிந்து  சாம்பலாவது எது போல் என்றால் விறகு எப்படி நெருப்பில் போட்டால் எரிந்து 

சாம்பலாகுமோ அதுபோல்’

ஶ்ரீமாதாவை உபாசிப்பதன் மூலம்  சுத்த பிரம்மம் நம்முள்ளேயே பிரகாசிக்கச் செய்து,நம் கர்மங்களையும் 

அதன்  பலன்களையும் அழித்து , நம்மை ஜனன-மரண சுழற்சியிலிருந்து முக்தியடைய முடிகிறது.நல்ல 

கர்மமாகிறது இருந்தாலும் கூட தீய கர்மமாகிறது இருந்தாலும் எல்லாவற்றிற்கும் பலன்கள் 

உண்டு.கர்மங்களையும் அதன் பலன்களையும் சேர்த்து அழிக்க வேண்டும் அது ஜகன் மாதாவால் மட்டும் தான் 

முடியும்.

5.தேவகார்ய சமுத்யதா.

தேவர்களுக்கு எப்பொழுதெல்லாம் நெருக்கடி ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் உதவி செய்வதற்கு ஶ்ரீ 

மாதா  தனி அவதாரம் எடுப்பாள். நன்மையை நிலை நாட்டுவதற்கு தீமையை அழிப்பதற்கு ஶ்ரீ  லலிதாம்பிகை 

புது அவதாரம் எடுத்து உலக அபரிபாலனமும் பண்ணுவாள் என்பதை இந்த திரு நாமம் சுட்டிக் காட்டுகிறது.ஶ்ரீ 

திரிபுர சுந்தரி அஅவதரித்ததாக பண்டாசுரனை வதம் செய்வதற்காகத் தான் என்பதை நாம் நினைவில் 

வைத்துக் கொள்வோம்.ஏன் தனித்தனி அவதாரம் என்று கேட்கலாம். தேவையில்லை தான் ஆனால் 

ஜகன்மாதாவாக இருக்கும்பொழுது அவள் நிர்குண பிரம்மம்.ஆகவே எந்த பக்கமும் சாராபாய் மனம் 

குழந்தைகள் சண்டை போடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பாள். சண்டை அளவிற்கு மீறி போகும் 

பொழுது நிஆயத்திற்கு நிலை நாட்டுவதற்காக நன்மை செய்யும் குழந்தைகள் பக்கம் போராட 

தீர்மானிக்கின்றனர். ஆனால் தாயாக இருக்கும்பொழுது கட்சிகள் சேர்வது சரியில்லாதது என்பதால் நீதி 

தேவதையாக கடுமையான தண்டனைகள் அளிக்க முன்வருகிறாள்.

அஞ்ஞானம் அழிந்து ஞானம் வெல்ல வேண்டியது இயற்கை நியதி. அதை தேவி நடைமுறைப் படுத்துகிறார்.

தேவ கார்யங்களுக்கு ( ஞானம் சார்ந்த காரியங்களுக்கு) மாதா எப்பொழுதும் துணை இருப்பாள் என்பதை 

இந்த திரு நாமம் ஞாபகப்படுத்துகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s