ஸர்வம் சக்தி மயம்

தடங்கலுக்கு வருந்துகிறேன்

இந்த பரம்பரையை ஆரம்பிக்கும்பொழுது சொன்னேன்’ இந்த வருடம் அவைகளில் தேவீ மாஹாத்மியம் 

காவியத்தையும் தேவீ பாகவத புராணத்தையும் விளக்கிக் கொள்ள முயலலாம் என்று எண்ணுகிறேன்.’ என்று.

ஆனால் எழுத ஆரம்பித்தபின், எங்கெங்கோ போய்விட்டது எனது எழுத்துக்கள் முற்றிலும் சம்பந்தமில்லாத 

விஷயத்திற்கு சென்றுவிட்டது என்று கூற வரவில்லை. மார்க்கண்டேயர் புராணத்தில் கூறப்பட்டுள்ள தேவீ 

மாகாத்மியம் காவியத்தை விளக்கி விட்டு தேவீ பாகவதத்திற்குள் போகலாம் என்று எண்ணினேன்.எழுத 

ஆரம்பித்ததும் ஶ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்தையும் சௌந்தர்ய லஹரியையும் சொல்லாமல் தேவி 

மாகாத்மியத்தில் பற்றி மட்டும் சொன்னால் அது பூரணமாகாது என்று தோன்றியதால் அந்த கிரந்தங்களை 

குறித்து எழுத ஆரம்பித்தேன். சுருக்கமாக சொல்லிவிட்டு தேவீ மாகாத்மியத்திற்கு வந்து விடலாம் என்று 

எண்ணினால் அது மிகவும் கஷ்டமானதாக தென்படுகிறது.ஜகன் மாதா லலிதாவின் ஒவ்வொரு நாமத்தையும் 

முடிக்கும் பொழுது இன்னும் எழுத வேண்டும் என்ற உத்வேகம் எழுகிறது. அப்படி மாதாவின் ஆயிரம் 

நாமங்களையும் விளக்கிவிட்டு தேவீ மாகாத்மியத்திற்கு வரலாம் என்றால் அதற்குள் நான் எழுதிய ஆரம்ப 

அத்தியாயங்களும் தேவீ மாகாத்மியத்திற்கு பின்புலமும் நினைவிலிருந்து தப்பி விடுமோ என்ற சந்தேகம் 

எழுகிறது. ஆகவே இரண்டையும் சமகாலத்தில் , இரண்டு இரயில் தண்டவாளம் போல் 

எழுதலாம் என்று எண்ணுகிறேன்

ஆகவே இது வரை எழுதியதை கீழ்க்கண்டவாறு இரண்டு தனித்தனி பரம்பரையாக அல்லது ஒரே பரம்பரையின் 

இரண்டு சமகாலீன பகுதிகளாக பார்க்கலாமே என்று தோன்றுகிறது.

                                                    ஸர்வம் சக்திமயம்

                                                            முன்னுரை

  பாகம் ஒன்று.            லலிதா ஸஹஸ்ர நாமம்.                 பாகம் இரண்டு.          தேவீ மாகாத்மியம்.    

அத்தியாயம்.1               திரிபுர சுந்தரி அவதாரம்.               . அத்தியாயம் 1.          தத்துவார்த்த விளக்கம்.  1   

   அத்தியாயம்2               ஶ்ரீ புரம்.             .                             அத்தியாயம் 2.        தத்துவார்த்த விளக்கம்.  2  

                                                                                                  அத்தியாயம்  3.      பின்புலம். 1

 அத்தியாயம்.   3            பண்டாசுர வதம்.                                அத்தியாயம் 4.          பின்புலம்2

  அத்தியாயம   4              தத்துவார்த்த விளக்கம்                                                            

   அத்தியாயம். 5.            ஶ்ரீ மாதா                                                                                                   

 அத்தியாயம் 5 மார்க்கண்டேயர்  க்ரௌஸ்திகிஸம்வாதம் சம்வாதம்                                                                

                                                                            அத்தியாயம் 6                    பாராயணகிரமம்  

                         
அததியாயம்     6.               ஶ்ரீ மஹாராஃஜஞி

அத்தியாயம் 7.                     மந்திரம் 3-5

இவ்வாறு இரண்டு பரம்பரையாக பதிவேற்றம் செய்வதாலும் ஏற்கனவே யோகவாஸிஷ்டம் பரம்பரையை எழுதி 

வருவதாலும் தினமும் ஏதோ ஒரு பதிவுதான் வெளியிட இயலும் என்று எண்ணுகிறேன்.இவைகளைத் தவிர 

அஷ்டாவக்கிரமணிகள் என்ற பெயரில் எழுதிவரும் விளக்கவுரையையும் தொடர எண்ணம் உள்ளது. ஏற்கனவே 

ஒரு சில கட்டுரைகளே எழுதிய ஹரிநாம கீர்ததனமும், சங்கரனின் ஆத்ம போதமும் பாதியில் நிற்கின்றது. 

எதையெல்லாம் முடிக்க கரம் அருளி காக்கப் போகிறானோ அந்த அஅருணாசலன்!

நான் எழுதுவதால் ஏதோ பெரிய நன்மை ஏற்பட்டுவிடப் போவதாகவோ எழுதாதால் ஏதோ நஷ்டம் ஏற்பட்டு 

விடும் என்றோ எண்ணவில்லை. எழுதினால் மனதிற்கு ஒரு திருப்தி. அருணாசலனை வேண்டி  

 மீண்டும் ஆரம்பிக்கிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s