ஸர்வம் சக்திமயம்- தேவீ மாஹாத்மியம்

பாகம் 2.                       தேவீ மாகத்மியம்.

அத்தியாயம்                  தேவீ கவசம்  2

நவதுர்கைகள்

முதலில் பிரம்மன்ஆதி சக்தியின் ஸகுண பிரதானமான  நவ தேவிகளைப் பற்றி சொல்கிறார். துர்கா மாத்ரு 

சொரூபம்.அவளே தேவி, அவளே சக்தி, பரசக்தி, மஹா சக்தி.அவள் நிர்குண பிரம்மம்.

 உலகாரம்பத்தில் ருத்ரன் நிர்குண பிரம்மான ஆதி சக்தியை பூஜை செய்து வணங்கி வந்தார்.

அவரது பிரார்த்தனையில் மனமுருகி உலகமாதா பரமசிவனின் பாதியாக சித்தாத்திரியாக 

பிரத்யடசமானாள்.( அதனால் பரமசிவன் அர்த்த நாரீசுவரர் ஆனார்)

அதன்பின்அவள் சூரியனுக்குள் பிரவேசித்து அங்கிருந்து சூரியனின் ஒளிமயமான சக்தியை 

தனதாக்கிக் கொண்டு பிரபஞ்சமெங்கும் பரவ செய்தாள்.சூரியனுக்குள்ளேயே வசிக்கவல்லவளான ஆதி சக்தி, 

சுயம்பிரகாசமான பராசக்தி கூஷமாணாடாள்் என்றறியப்படலானாள்.

அதன் பின் சகுண பிரம்மமாக தக்‌ஷபிரஜாபதியின் மகளாகப் பிறந்து பரமசிவனை மணந்து கொள்ள 

காத்திருந்தாள் . இந்த மணம்முடிக்காத உலமாதாவை பிரம்மசாரிணி என்றழைக்கின்றோம்

பரமசிவனை மணந்து, பிறந்து வீட்டு யாகத்திற்கு அழையாமலையே சென்று, தன் பதியை அவமதித்ததை 

பொறுக்கமுடியாமல் அந்த சதீதேவீ யாகாக்னியில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாள்..

அதன் பின் சதீதேவீ இமவானின் புத்திரியாக பிறக்கிறாள்.மலையவனின் மகளாக பிறந்ததால் மலைமகள்- 

ஶைலபுத்ரீ என்றறியப்படுகிறாள்

பதினாறு வயது நிரம்பிய பர்வத குமாரி அழகின் மொத்த உருவமாக வெண்மை நிறத்துடனும் காண்பவர் 

கண்களையும் மனதையும் ஈர்ககக் கூடியவளாக இருந்ததால் அவள் கௌரி என்றழைக்கப்பட்டாள். பார்வதி 

எனும் மலைமகள்  ஆதிபராசக்தியின் சகுணாகாரமாக இருந்ததால் அவள் மஹாகௌரியாகிறாள்.

பரமசிவனை மணந்த பிறகு நெற்றியில் சந்திரக்கலை வடிவத்தில் மணிகளை அணிந்திருந்ததால் சந்திர 

கண்டா ஆகிறாள்.

மஹிஷாஸுரனையும் வதம் செய்வதற்கு காத்யாயனியாக அவதாரம் எடுக்கிறாள்.

சும்ப நிசும்பர்களை வதம் செய்வதற்காக கால ராத்திரியாக உருவெடுக்கிறான்.

இதை பிரம்மன் கீழ்க்கண்டவாறு மார்ககண்டேயரிடம் கூறுகிறார்.

   

     ப்ரதமம் ஶைலபுத்ரீதி, த்விதீயம்ப்ரஹ்மசாரிணீ
  

     த்ரிதீயம் சந்தரகண்டேதி,கூஷ்மாண்டேதி சதுர்த்தகம
   

    பஞ்சமம் ஸ்கந்தமாதேதி,ஷஷ்டம் காத்யாயநீதி ச
    

    ஸப்தமம் காலராத்ரீதி, மஹா கௌரீதிசஸ்தம்ம் 
    

      நவமம் ஸித்தயே ப்ரோக்த நவ துர்க்கானா ப்ரகீர்ததிதா
     

          உக்தன்யேதனி நாமாமி ப்ரஹ்மணைவ மஹாத்மனா!

 பிரம்மன் சொன்னார்,” எனக்கு நவ மாதாக்களைக் குறித்து சொல்வதில் அதீவ  சந்தோஷமே!

ஶைல புத்திரி- இமவானின் மகள், உலகிலேயே உயர்ந்த மலைக்கதிபனாம் இமவானின் புதல்வி பார்வதி 

தேவீ எவ்வளவு உன்னதமானவள்.

அவள் ப்ரஹம சாரிணீ- ப்ரஹமத்திற்கு வழிகாட்டுபவள், ( ப்ரம்மத்தை அறிந்தவன் முக்தன்)-ஆகவே முக்திக்கு 

வழி காட்டுபவள் அவளே பிரம்மம். 

சந்திரக்கலையை தனது அரைக்கட்டில் வைத்திருப்பவர்கள்- அதாவது இந்த விசுவ பிரபஞ்சத்தையே தன் 

அரைக்கட்டில் வைத்திருப்பவள்-

 விசுவபிரபஞ்சத்தை சிருஷ்டிக்கின்றவள்,கூஷமாண்டா- விசுவ பிரபஞ்சத்தை முழுவதுமாக விழுங்குபவள்- 

உலகத்திலுள்ள எல்லா சுக- துக்கங்களையும் தன்னுள் வாங்கி தன் குழந்தைகளை பாதுகாக்கிறவள்,

அவளே முருகனின் தாய்; முருகன் என்றால் அழகன்; போர்ககுணம்படைத்தவன் ; அவன் தாயும் 

அழகானவர்கள்; போர்ககுணம் படைத்தவள்; தீமைகளை அழிப்பவள்.

காத்யாயனரின் ஆசிரமத்தில் பிறந்து வளர்நதவள்,

காளராத்திரக்கதிபதியாக இருப்பவள், பிரளய காலத்தில்எல்லாம் முடிவிற்கு வரும்பொழுது எல்லாவற்றையும் 

தன்னுள் லயிப்பிக்கின்றவள்,

மஹாகௌரீ- முற்றிலும் வெண்மையாக காண்பவன்- மாசில்லாதவள்,முக்தி நல்குபவள் என்றெல்லாம் 

வேதங்களிலும் கூறப்பட்டுள்ள தேவியைக் குறித்து கூறுவதில்லை மிகவும் மகிழ்சசியடைகிறேன்.’ என்றார் 

பிரம்மன்

பிரம்மன் தொடர்கிறார்: 

அகனீனா தயமானஸ்து ஶத்ரு ம்த்யே  கதோ ரேண | 

விஷமே துர்கமே   சைவ பயார்த ஶரணம் கதாஃ || 

 ந தேஷம்  ஜாயதே  கிஞ்சித் அஶுபம் ரணஸங்கடே  |

 நாபதம தஸ்ய  பஶயாமி  ஶோக துஃக்க பய நஹி || 

எவனொருவன் இந்த ஒன்பது மாதாக்களையும்  உபாசனை செய்கிறானோ அவனுக்கு சங்கடங்கள் எதுவும் 

வராது.அவன் நெருப்பின் மத்தியில் அகப்பட்டுக் கொண்டால்க் கூட வெந்து போகமாட்டான். எதிரிகளிடம் 

அகப்பட்டுக் கொண்டால் அவனுக்கு தீங்கு ஏதும் விளையாது.துன்பங்கள் எவ்வளவு நேரிடினும் அவன் 

கலங்கமாட்டான்.ஜகன்மாதாவே சரணம் என்றிருப்பவர்களுக்கு எந்த துன்பங்களும் வராது.

யைஸ்து பக்தயா ஸ்மருதா நூனம் தேஷாம்ருதி ப்ரஜாயதே 

ப்ரேத: ஸமஸ்த அது சாமுண்டி வராஹி மஹிஷாஸனா

இந்த்ரி கஜ ஸ மாரூடா வைஷ்ணவி கருடாஸனா

மஹேஷ்வரீ வ்ருஷபாரூடா, கௌதமாரி ஷிக்கிவாகனா

ப்ரஹ்மி ஹம்ஸாரூடா ஸர்வாபரணபூஷிதா

நானாபரண ஷோபதயா நானோ ரத்னோப ஷோனிதா

த்ருஶ்யன்தே ரதாமாரூடா திவ்ய கோப ஸமன்விதா

தேவி பக்தர்களுக்கு -தேவியின் நாமங்களை நினைவில் வைத்துக் கொண்டாலே அமுது பருகினதிற்கு ஈடாகும்.

பிணங்களால் மீது சவாரி செய்யும் சாமுண்டி, மஹிஷாஸனத்தில் அமர்நதிருக்கும் வராஹியெனும் 

தேவி,யானை மீது அமர்நதிருக்கும் இந்திராணி தேவி,மயிலை வாகனமாக கொண்ட கௌமாரி,அன்னத்தை 

வாகனமாககொண்ட ப்ரஹ்மி, இப்படி பல பெயருடனும் வாகனுங்களுடனுமான ஒன்பது தேவியரும் 

சர்வாபரணங்களுடன் பல விதமான வைரவைடூரியங்களும் இரத்தினங்களும் பதித்த ரதங்களுடனும் 

கோபாவேசமாகவும் காண்பபடுகிறார்கள். இவர்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் தேவீ 

பக்தர்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s