ஸர்வம் சக்தி மயம்- தேவீ மாஹாத்மியம்

அத்தியாயம்.7                         தேவீ கவசம்.3

கேடகம்,தோமல்பள்ளி சைவபரஶும் பாஶமேவ ச,

குந்தாயுதம்,த்ரிஶூலான் ச ஸரங்காயுதமுத்தமம்,

தைத்தியானம் தேஹ நாஶய பக்தானாம் பய ச

தாராயந்த்யுதானேதம் தேவனாம்ச ஹிதயவை

மஹாபலே, மஹோத்ஸஹே, மஹாபயவினாஶினி,

த்ராஹி மாம்துஷ்ப்ரேக்‌ஷயா, ஶத்ருனம் பயவர்ததினி

இந்த தேவியர் வித விதமான ஆயுதங்களுடன் காட்சியளிக்கிறார்கள். சங்கு, சக்கரம், கதை, வாள், ஈட்டி, 

கலப்பை,கேடயமும்,கோடாரி,திரிசூலம்,வில் அம்பு என்று எவ்வளவு விதமான ஆயுதங்கள் உண்டோ

அவையெல்லாம் தேவியரின் கைகளிலிருந்தன.இவை அசுரர்களை வதம் செய்வதற்காகவும் தேவர்களை 

காப்பதற்காகவும்தான் தேவியர் கையில் வைத்திருந்தார்கள்.இவை எதிரிகளுக்கு பயத்தை உண்டு 

பண்ணுவதோடல்லாமல் பக்தர்களுக்கு பயத்திலிருந்தும் விடுதலையும்் அளிக்கிறது.

தேவீ, நீ மிகவும் சக்தி வாய்ந்தவையாகும் இருக்கிறாய்; தேவீ ,நீ மிகுந்த உத்ஸாஹத்துடன் 

இருக்கிறாய்;உன்னைக் கண்டாலே மரண பயம் இல்லாமலாகிவிடும்;ஆனால் தேவி உன்னைக் காண்பது 

மிகவும் துர்லபமாக உள்ளதே; உன்னை காணாதபோதே உன்னை நினைத்த மாத்திரையிலையே உன் 

எதிரிகள் பயந்து நடுங்குவார்களே;அப்படிப்பட்ட தேவீ, நீ எங்களை காப்பாற்றுவாயாக!

எப்படி தேவி காப்பாற்றுகிறாள்?

   ப்ராச்யம் ரக்‌ஷது மாம் இந்திராணி,ஆக்னேவின் அக்னி தேவதா

   தக்‌ஷிணே வது வராஹி,நிருத்தம் கட்கதாரிணீம்

   ப்ரதீச்யாம் வாருணி ரக்‌ஷேத்,வாயவ்யாம் ம்ருகவாஹினி,

  உதீச்யாம் ரஶக்ஷ கௌமாரி,ஈசானீயம்சூலதாரிணீ,

  ஊர்த்வாம்ப்ரஹ்மணீ மே ரக்‌ஷேத்,அத்ஸ்தாத்வைஷ்ணவி ததா

    ஏவம் தசா திசோ ரக்‌ஷே, சாமுண்டே ஶவவாஹனா

கிழக்கு திசையில் இந்திராணியும்,தென்கிழக்கில் அக்னி தேவியும் எங்களை காத்தருளட்டும்.;தென் திசையில் 

வராஹி காத்தருளுவாள்.தென்மேற்கில் வாளுடன் இருக்கும் கட்கதாரிணீயும் காத்தருளுகிறாள்.மேற்கு 

திசையில் வாருணியும் வடமேற்கில் மிருக வாஹினியான வாயு தேவதையும் காக்கட்டும்.வடக்கு திசையில் 

குமரனின் சக்தி வடிவமான கௌமாரியும் காக்கட்டும்.வடகிழக்கில் மஹேசுவரனின் தேவி மஹேசுவரியும் 

எங்களை காத்தருளட்டும்.

ஊரத்த்வத்தில் நமக்கு மேலிலிருந்து ப்ரஹ்மணி காத்தருளட்டும்.வைஷ்ணவி நமக்கு கீழேயிருந்து பாது 

காப்பருளட்டும். பிணங்களின் மேல் அமர்நதிருக்கும் சாமுண்டி மொத்தத்தில் பத்து திசைகளிலிருந்தும் நம்மை 

பாதுகாக்கட்டும்

சுருக்கமாக சொல்லப் போனால் எங்கு திரும்பினாலும் தேவியின் விவித உருவங்கள் நம்மை காத்தருள 

தயாராகாத இருக்கிறாள்.சாமுண்டியாகப்பட்டவள் எல்லா ஜடப்பொருள்களையும் துவம்சம் செய்து நம்மை 

தன்னுடன் ஐக்கியமாக்கி பாதுகாக்கிறாள்.அவள் சர்வ வியாபியாக இருக்கிறாள். ஆகவே நமக்கு எந்த 

திசையிலிருந்தும் ஆபத்து வராமலே காத்தருளட்டும்.

தேவியின் மேல் சந்தேகமின்றி நம்பிக்கை வைத்து ஆராதனை செய்தால், நம்மை எந்த தீங்கும் 

அண்டாது.ஆத்மசாக்‌ஷாத்காரம் அடைந்து விட்டால் காமக்குரோத, ராகத் துவேஷங்கள் போன்ற ஜட 

உருவமாகவுள்ள எதிரிகள் நம்மை தாக்க மாட்டார்கள்.அந்த எதிரிகளை அழிப்பதற்கு தேவீ கடாட்சம் 

வேண்டும். தேவீ கருணையை வேண்டுவோம் .அது நமக்கு கவசமாக இருக்கட்டும்.

ஜயா மே சாக்ரத:ஸ்தாது விஜயாஸ்தாதி ப்ரஷ்டாத:

அஜிதாவாம பார்ஶ்வே து தக்‌ஷிணேசாப்பராஜிதா!

ஶிக்காமுத்யோதினி ரக்‌ஷேதுமாமூர்தினிவ்யவஸ்திதா

மாஹாத்மியம் லலாடே ச ப்ருவோ ரகஷேத்யஶஸ்வினி !!

த்ரிநேதா சப்ருவோர்மத்யே யமகண்டா ச நாஸிகே

ஶங்கினி சக்‌ஷுசோர்மத்யேஏ,ஸ்ரோத்ரயோர்த்வார வாஸினி

கபோலோ காலிகே ரக்‌ஷேத் கர்ணமூலேத் து ஶாங்கரி

நாஸிகாயாம் ஸுகந்தா ச உத்தரோஷ்டே ச சர்சிகா

அதரே சாம்ருதக்லா ஜிஹ்வாயாஞ் சஸரஸ்வதி!

தன்தான் ரக்‌ஷது கௌமாரி கண்டமத்யே  ச சண்டிகா

கண்டிகாம் சித்ரகண்டா சமஹாமாயா ச தாலுகா!

காமாக்‌ஷி சிபுகம் ரக்‌ஷே த் வாசம்ஸர்வமங்கலா!

க்ரீவாயாம் பத்ரகாளீ ச ப்ருஷ்டவம்ஶீ தனுர்தரீ !

மேலும் கவசத்தில் நாம் ப்ரார்ததிப்பது ‘ தேவி எப்படியெல்லாம் நம் அவயவயங்களை பாதுகாக்க வேண்டும் ‘ 

என்று தான்.

‘ எனது முன்னால் வெற்றியின்  சக்தி நின்று, எப்பொழுதுமே வெற்றிமட்டுமே காண்கின்ற விஜயா என். 

பின்னால் நின்று, யாராலும் வெல்ல முடியாத அஜிதாவாக என இடது பக்கம் நின்று, என்றுமே தோல்வி 

காணாத அபராஜிதா என் வலது பக்கம் நின்று என்னை காப்பாற்றுவாள்.’ பின் நான் ஏன் பயப்பட வேண்டும்?

எப்பொழுதுமே தயார் நிலையிலிருக்கும் ‘ உத்யோதினி’ என் தலைமுடியை காப்பாள்; உமையவள் என் 

தலையே காப்பாற்றுவாள்;கழுத்தில் கண்டஶரம் -மாலை அணிந்துள்ள மாலாதாரி என் நெற்றியை 

பாதுகாப்பாள்;யஶஸ்வினி- மங்காத புகழுக்குரியவள் கண் புருவங்களையும்,மூன்று கண்ணுடைய த்ரிநேத்ரிணி 

என் புருவ -மத்தியையும்,யமகண்டா என்ற பெயருடைய தேவி எனது நாஸியையும்

கண்களின் நடுவில் சாங்கினி தேவியும், செவியிரண்டையும் துவார வாசினியும் ( செடிகளுக்கும் ஆழத்தில் 

வசிப்பவள்) காப்பாளாக.

ஸுகந்தா தேவி என் நாசியையும்,வருணனைகளுக்கெல்லாம்்அப்பாற்பட்டவளான சர்சிகா தேவி எனது 

அதரத்தின் மேல் பாகத்தையும்,அதரங்களை அமுதைப் பொழியும் சந்திர கலையை அணிந்திருக்கும் 

தேவியும்,எனது கன்னங்களை கருமையாகவும் நிறத்துடனும் காலிகே தேவியும், என் பற்களை  விந்திய 

மலையுச்சியில் வசிக்கும் பரமேசுவரியும்,எனது நாவை சரஸ்வதீ தேவியும் காப்பாற்றுவளாக!என் கழுத்தை 

அளவற்ற வலிமையடைய சாமுண்டியும் காத்தருளுவாள்.

என் தொண்டையை சித்திரம் போல் அழகுடைய தேவியும்,கண்டவனைக் மாயைக்குள் உட்படுத்துபவளான 

மஹாமாயையின் எனது உள் நாக்கையும் கண்டவரை சுண்டியிழுக்கும் கண்களையுடைய 

காமாக்‌ஷி என் தாடையையும், எல்லோருக்கும் மங்களம் அருளுகின்ற ஸர்வமங்கள தேவி என் பேச்சையும் 

காப்பாளாக!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s