யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 222

தினமொரு சுலோகம்

நாள் 222

அஹம் நாஸ்தி;ஸர்வம் நாஸ்தி!

அயமேவாஹமித்யஸ்மின் ஸங்கோசே விலயம் கதே 

அனந்த புவனவ்யாபீ விஸ்தரிக்கப்பட்ட உபஜாயதே !

अयमेवाहमित्यस्मिन् संकोचों विलयमेष्यति गये

अनन्त भुवनव्यापी विस्तार उपजायते !

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” ஆகவே, இராமா, ஜனக மஹாராஜா செய்தது போல்,ஆத்மவிசாரம்செய்! 

அதன்மூலம்  தெரிய வேண்டியது என்னவோ, அதை தெரிந்து, ஞானிகளின் நிலையை அடைவாய்

அது மிகவும் எளிது.தொடர்நு இந்திரியங்களின் எதிர்ப்பை  எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் சுய 

முயற்சியால் அடைகின்ற வெற்றி தரும் திருப்தி தனியல்லவா?.அவ்வாறு எல்லையற்ற ஆத்மாவை 

உணரும்பொழுது- ஆத்ம சாக்‌ஷாத்காரம் அடையும்பொழுது எல்லா துன்பங்களுக்கும் ஒரு முற்றுப் 

புள்ளியாகிறது். மாயா மயக்கத்தின் முளைகள் கிள்ளியெறியப்படும்பொழுது, துரதிருஷ்டங்கள் இல்லாதாகும் 

பொழுது கெடுதல் விளைவிக்கும் வினையாற்றுவதற்கான தூண்டுதல் இல்லாமலாகிவிடுகிறது.

அதனால் ஜனகனைப் போல் ஆகவும்.சுயம் பிராகாசிக்கின்ற ஆத்மாவின் ஒளியில் ஆத்மாவை 

சாக்‌ஷாத்கரிக்கவும்.

இராமா, நீ அதன்மூலம் உத்தமனாகிவிடுவாய்.ஜனகனைப் போல் இடைவிடாமல் ஆத்மவிசாரம் செய்கின்ற, 

முடிவில்லாத மாற்றங்களுக்கு ஆளாகிக்  கொண்டிருக்கின்ற இந்த பிரபஞ்சத்தை ஒரு சாக்‌ஷி என்பது போல் 

கண்டு கொண்டிருக்கின்ற ஒருவனுக்கு ஆத்ம சாக்‌ஷாத்காரம் காலப்போக்கில் கிடைக்கும் என்பது 

உறுதி..ஈசுவரனோ, யாகத்திற்கான கர்மங்களோ, செல்வமோ,சொந்த பந்தங்களோ, எதுவும் யாரும் நமக்கு 

உதவப் போவதில்லை.உலகம் என்ற மாயத்த தோற்றங்களைஏ கண்டு பயப்படுகிறவர்களுக்கு 

ஆத்மஞானத்திற்கான வழி ஆத்மவிசாரணை எனும் சுய முயற்சி தான்.உன்னைப் 

போலுள்ளவர்கள்,கடவுள்களிலோ, யாகாதிகர்மங்களிலோ, என்றல்ல அது போலுள்ள விசித்திரமான ஆசார 

அனுஷ்டானங்களை சார்ந்திருக்கின்றன பிரமைக்குள்ளான சித்தத்தையுடைய குருவிடமோ சென்று மாட்டிக் 

கொள்ளக்கூடாதே என்று நான் பிரார்ததிக்கிறேன்.

சம்சாரக் கடலை கடப்பதற்கு சத்தியஞானம் அவசியம் தான்.அதாவது, தன்னுடைய  மேதா சக்தியை சிதறிப் 

போக விடாமல் ஏகாத்மாகவும், இந்திரியங்களின் நிற வித்தியாசங்களிற்கு அடிமையாகாமல் எச்சரிக்கையுடன் 

தகுந்தார்போல் வினியோகம் செய்து , தானே ஆத்மாவை, ஆத்ம விசாரம் வழியாக ஆத்மாவாக  கண்டறிந்தால் 

தான் இது இயலும்.

ஜனக மஹாராஜாவிற்கு ஆத்ம ஞானம் உண்டான கதையை சொல்லிவிட்டேன். எங்கிருந்தோ கிடைத்த ஒரு

சிறு கிருபை காரணம் சுவர்ககத்திலிருந்து விழுந்த ஒரு அமுதத் துளி போல்த் தான் ் அது 

நடந்தது.ஜனகரைப்போன்ற விவேகிகளுக்கு உள்ளில் முளை விட்ட ஆத்ம ஒளி காரணம் பிரபஞ்சம் எனும் 

மாயக்காட்சிகள் ஒரு நொடியில் இல்லாமலாகிவிட்டது.

” நான் ‘ இவன்’ என்ற வரையறையும் தேகமென்ற கருவியில் தான்’ நான்’ குடியிருக்கிறேன் என்ற எண்ணமும் 

இல்லாமலாகிவிட்டால் சர்வ வியாபியான அனந்தாவபோதம் தானாகவே உதயமாகிவிடும்”

அதனால், இராமா, நீயும் ஜனகனைப்போல் மனதில் முளை விடுகின்ற கற்பனையான, அசத்தியமான 

அகம்பாவத்தை உதறித்தள்ளு. ‘அஹம்’ பாவம் அழிந்து விட்டால் ஆத்மஞானத்தின் ஒளி உன்னில் 

உதயமாகிவிடும். இது கண்டிப்பாக நடந்தே தீரும்.அஹம் ‘ எல்லாவற்றிலும் மிகக்கொடிய  இருள்.அந்த இருள் 

நீங்க வேண்டுமென்றால் ஆத்மா பிரகாசிக்க வேண்டும்.

யாரொருவன் சுயமாகவே. ‘ நான் இல்லை’ என்று அறிகிறானோ, அவன் ‘ மற்றவர்களும் இல்லை’ என்பதை 

அறிகிறான்.அவன் ‘ இல்லை’ என்பதே இல்லை என்று உணருகிறான்.இவ்வாறு மனோ விருத்திகள் 

இல்லாமலாகிவிட்டவனுக்கு  நேடுவதற்கு ஒன்றுமில்லை. இராமா, பந்தம் என்பதைக் எதையாவது 

தேடவேண்டும் என்ற விருப்பும்,மற்றவர்களுக்கு வேண்டாதவை தனக்கும் வேண்டாம்என்று இருக்க 

இயலாமையால் தான்.அம்மாதிரி சஞ்சலங்களுக்கு ஆளாகாமல் இருப்பாயாக.எதையும் விரும்புவோ 

அவைகளை நேடுவதை இலடசியமாகவோ கொள்ளாதே.எது இருக்கின்றதோ அதில் திருப்தி அடைந்து 

ஆனந்தத்தை அனுபவிப்பாய்
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s