யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 227

தினமொரு சுலோகம்

நாள் 227

மனம் எனும் ‘அவஸ்து

ஜடத்வாந்நி: ஸ்வரூபத்வாத்ஸர்வதைவ ம்ருதம்மன:

ம்ருத்யேன மார்யதே லோகஶ்சித்ரேயம் மௌர்க்யசக்ரிகா !

जढत्वान्नि:स्वरूपत्वात्सर्वदैव म्रुतम् मन:

मृत्येन मार्यते लोकश्चित्रेयम् मौर्ख्यचक्रिका ।।

வஸிஷஃடர் தொடர்ந்தார்:” மனம் வெறும்ஜடம்.அது உண்மையில்லை.அது என்றும் எப்பொழுதும் 

உயிரற்றதாயத் தான் இருக்கிறது.ஆனால் உயிரற்ற ஜடம் தினமும் பிரபஞ்சத்திலுள்ள அனேகம் 

ஜீவராசிகளையும் ‘ கொன்று’ கொண்டேயிருக்கிறது.எவ்வளவு விசித்திரம் உயிரற்ற ஒன்று உயிருள்ள 

மற்றவைகளுடன் கொல்கிறது! என்னே முட்டாள்த்தனமான தனம்.”

மனதிற்கு தனதான ஆத்மாவோ, தேகமோ,சாய்காலோ,உருவமோ  கிடையாது.ஆனாலும் மனம் உலகத்தின் 

எல்லாமெல்லாம்.கண்டிப்பாக இது ஒரு புதிர் தான்.உண்மையில் ‘ இல்லாத’ மனம் என்னை 

கஷ்டப்படுத்துகிறது என்றால் , தாமரையிதழால் என் மண்டையை அடித்துபிஅக்கிறார்கள் என்பது போல் 

முட்டாள்த்தனமான தனமாக உள்ளது. யாராவது மனதின் உபத்திரவத்தால் கஷ்டப்படுகிறான் என்று 

சொன்னால், அது நிலவின் சூட்டில் நான் பொசுங்கிக் கொணஃடிருக்கிறேன் என்பது போல்தான்.மனம் 

ஜனனமும், பேஆமடந்தையும் குருவும் ஆக இருக்கிறது.

தன்னை எதிர்கொள்ளும் எதிரியின் படைகள் எல்லாவற்றையும் தனியாக எதிர்த்து நின்று வெல்ல வல்ல 

வீரனைக்கூட இந்த ‘ இல்லாத’ மனம் அழிக்க வல்லதானதாக  இருக்கிறது.எண்ணங்களால்- கற்பனைகளால் 

உருவாக்கப் பட்ட இந்த மாயத் திரைக்கு ‘இருப்பு’ கிடையாது. அதன் ‘ இருப்பை’ தேடிச் சென்றாலும் அது 

இல்லாமலாகி விடுகிறது.அது பொய்மை- அஸத் ஆகிவிடுகிறது.முட்டாள்த்தனமும, அஞ்ஞானமும் தான் இந்த 

உலகிலுள்ள எல்லா துன்பங்களுக்கும் காரணம்.இந்த பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்கும் காரணம் வேறு 

எதுவுமில்லை; அதுவே தான்.இது தெரிந்திருந்தும், பொய்மையான அந்த இல்லா பொருளை ஜீவராசிகள் 

ஊக்குவிக்கின்றது  என்று காணும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது.இந்த உலகம் எனும் மாயக் காட்சி ஒரு 

தளபதியின் கெட்ட கனவு போல் தான்.தனது கனவில் வருகின்ற எதிரியின் படைத்தலைவனின் 

கண்களிலிருந்து ஓடி வரும் சங்கிலிகளால் தான் பிணைக்கப் படுவது போலுள்ள கற்பனை போன்றது தான் 

இதுவும்.

எதிரியைக் குறித்துள்ள தனது எண்ணங்களிலிருந்து உண்டான கற்பனையில் எதிரிகளால்  தான் 

தொந்திவிர்க்கு ஆளாவது போல் நினைக்கிறான்.இவ்வாறு ‘இருப்பே’ இல்லாத ஒரு மனம் சிருஷ்டிக்கின்றது 

உலகை இன்னொரு மனம் இல்லாமலாக்குகிறது. அந்த மனமும் ‘ அவஸ்து’ – இல்லாத பொருள் தான்.

இந்த மாயக்காடசியான உலகமே மனம் தான். மனதின் இந்த உண்மை நிலை அறியாதவர்களுக்கு வேத 

சாஸ்திரங்களில் சொல்லப் படுகின்ற பரம சத்தியத்தை அறிவதற்கு அருகதை கிடையாது.அம்மாதிரி ஒருவனில் 

வேதங்களில் கூறப்பட்டுள்ள உண்மை பதியவும் பதியாது.அந்த மனதிற்கு உலகம் என்ற எல்லைக்குட்பட்ட 

அறிவே தாராளம் அந்த மனம் பயங்கள் நிறைந்ததாயிருக்கிறது. இனிய வீணையின் நாதமும் பிரியமான 

சொந்த பந்தங்களும் கூட அவர்களை பயப்படுத்துகின்றது.மற்றவர்கள் எழுப்பும் ஒலியும், சிறு பூச்சி 

புழுக்களுங்கூட அவர்களில் பயத்தை உளவாக்குகின்றது.அஞ்ஞானியான அவன் இந்த பிரபஞ்சக் 

காட்சிகளிலும் தன் மூட மனதின் கற்பனைகளிலும் மூழ்கியிருப்பான்.தன்னில் வசிக்கும் மனதின் சூட்டில் அவன் 

தகிக்கிறான்.சில நேரங்களில் மகிழ்ச்சி தரக்கூடிய அனுபவங்கள் கிடைக்குமென்றாலும் இந்த மனம் கொடும் 

நஞ்சு போல் அழிவைப் தருகிறது.மூடமனம் எனும் பிரமையில் ஆழ்ந்து இருப்பதால் அவன் இதை 

அறிவதில்லை.இது என்னே விசித்திரம்! 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s