யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 223

தினமொரு சுலோகம்

நாள் 223

மனத்தை கட்டுபடுத்து

தாவமானமதோபாகே சித்தம் ப்ரத்யாஹரேத்பலாத்

ப்ரத்யாஹரேண பதிதமதோ வாரீவ ஸேதுனா !

धावमानमधोभागे चित्तम् प्रत्याहरेदबलात्

प्त्याहरेण परितमधो वारीव सेतुना !

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” எவனொருவனில் விஷயம் தொடர்புடைய ஆசைகளும் நிராசைகளும் போன்ற 

இரட்டை மனப்பாங்கு இல்லாமலாகிறதோ, அவனுக்கு ஒன்றும் தேவை படாதவனாக ஆகிறான்;எதையும் 

அவன் தேட வேண்டியிராது.அவன் எதையும் வேண்டாம் என்று ஒதுக்குவும் மாட்டான். விருப்பு வெறுப்பு 

இரண்டுமே அவனுக்கு கிடையாது.இந்த துவைத சிந்தைகள் அழிநதால் தான் மனதில் சாந்தியும் சமன் 

நிலையும் உளவாகும்.இது ‘ ஸத்’ , இது ‘அஸத்’ இம்மாதிரியான பாகுபாடுகள் அவன் மனதில்  எழாது. 

அம்மாதிரியான பாகுபாடுகளை மனதில் தோன்றும்பொழுது தான் மன அமைதி இல்லாமலாகிறது. 

‘ இது இலாபம்; இது நஷ்டம்’ என்றோ, ‘ இது ‘ சரி’ இது ‘ தவறு ‘  என்ற எண்ணங்கள் அவனில் இராது. 

அந்த எண்ணங்கள் உளவாகிவிட்டால் சமன் நிலை எப்படி கைக்கெட்டும்?மாசற்ற மனம் எப்படி வசமாக்கும்?

நிர்மமதை- எனது என்ற எண்ணமின்மை எப்படி அவனில் காண முடியும்?பிரம்மம் என்பது ஒன்றே; அது என்றும் 

ஒன்றே; அதுவே பலதாக தோற்றமளிக்கின்றது என்கின்ற பொழுது ‘ சரியும் தவறும்’ எங்கிருந்து வரும? மனம் 

விருப்பு வெறுப்புக்களில் ஆனந்தம் ஆடையும் பொழுது சமன்நிலை எங்கிருந்து வரும்?

தானாகவே எவனொருவனில் முயற்சி எதுவும் செய்யாமலேயே விருப்பு- வெறுப்பு மனோ விகாரங்கள் எனும் 

இரட்டை மனோபாவம் இல்லாமலிருக்கிறதோ, அவனில்,ஆசையின்மை, பயனின்மையை,பலனை 

எதிர்பாராமல் கர்மங்கள் ஆற்றும் தன்மை, மன உறுதி, எல்லாவற்றையும் எல்லோரையும் சமனாக பார்க்கும் 

மனோபாவம்,தைரியமற்ற,பொறுமை,மேதா விலாசம்,எதிலும் பிடிப்பின்மை,நன்மை, கேடு 

நிலையாமையைப,நல்ல பேச்சுக்கள்,நட்பு, ஞானம்,போதும் என்ற மனப்பாங்கு இப்படி எண்ணிலடங்கா 

நற்குணங்கள் காணப்படும்.

” மன ஓட்டத்தை கீழ்நோக்கிப் செல்லும் தன்மையிலிருந்து தடுத்து நிறுத்துதல்,சாதகனுடைய 

கடமை.நதியின் ஓட்டத்தை அணைக்கட்டு தடுக்கிறதல்லவா, , அதுபோல் மன ஓட்டத்தை தடுத்து நிறுத்த 

வேண்டும்”.

வெளிப்பொருட்களுடனான தொடர்புகளை அழித்து விட்ட பிறகு,பல தரப்பட்ட கர்மங்கள் ஆற்ற வேண்டி 

வந்தாலும் மனதை உள் நோக்கி திருப்பி, அங்குள்ளதைக் குறித்து சிந்திக்கவும்.ஞானத்தின் கூர் வாளால் 

மனோ வாசனைகள் எனும் வலையைக் அறுத்து எறியுங்கள்.வாசனைகள்,விகாரவிசாரங்கள், 

ஈர்ப்புகள்,ஏற்றுக்கொள்ளுதல்- நிராகரித்தல் போன்ற மனோ விருத்திகள், இவைகளெல்லாம் அந்த வலையின் 

இழைகள் தான்.அவை தான் இந்த பிரபஞ்சமெனும் மாயைக்குள் பொறுப்பு.மனதால் மனதை 

அறுத்தெறியுமோ.சுத்தமாசற்ற தன்மையை அடைந்து விட்டால் அங்கேயே உறுதியாக நிலை கொள்.

மனதால் மனதை நிராகரித்துவிட்டு அந்த நிராகரிக்கின்ற மனோ விருத்தியையும் துறந்து விடு.அவ்வாறு 

இந்த திருசிய பிரபஞ்சத்தை முற்றிலும் இல்லாதாக்கி விடலாம்.அப்படி உலகம் இல்லாதாகிவிட்டால் 

கற்பனைகள் இல்லாமலாகிவிடும்.உலகம் மீண்டும் மனதில் முளைக்காது.உலகின் பொய்மையை புரிந்து 

கொண்டிருக்கையிலும் லௌகீக கர்மங்களை நன்றாக செய்யவும். ஆனால் அந்த கர்மங்கள் உன்னில் 

எந்தவிதமான ஆசையையோ,எதிர்பார்பபுக்களையோ உளவாக்கலாம் எந்தவிதமான பந்தங்களிலும் உன்னை 

கட்டிப் போடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.சமன்நிலையுடன், ஸஹஜமாக உன்னிடம் வந்து சேருகின்றன 

கர்மங்களை செவ்வனே நிறைவேற்று.  ஏன் இது வந்தது என்று யோசிக்காமல் வந்ததை 

ஏற்றுக்கொள்ள.மமதாகாரம இல்லாமல் ஏற்றுக்கொள்.கடவுள் எல்லா செயலுக்கும் கர்ததா என்றும் அவர் 

எதையும் செய்யவில்லை என்றும்- அகர்த்தா என்றும் சொல்லப்படுகிறது.அதே போல் நீயும் ஆகிவிடு.விருப்பு 

வெறுப்பில்லாமல் கர்மங்களை செய்.அவ்வாறு செய்தால் உனக்கு விதிக்கப் பட்டிருக்கும் கர்மங்களின் 

கர்த்தாவும் அதே நேரத்தில் அகர்த்தாவும் ஆகி விடுவாய்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s