ஸர்வம் சக்தி மயம் -லலிதா ஸஹஸ்ரநாமம்

பாகம் 1.                                         மந்திரங்கள் 6-11

மந்திரம் ஆறு. 
உத்யதபானு ஸஹஸ்ராபா.  

   

 ஆயிரம் உதய சூரியனின் ஒளியுடன் கூடியவள் லலிதாம்பிகை. ஆயிரம் என்றால் கணக்கிலடங்கா, 

எண்ணிக்கையிலடங்காத சூரியர்களின் ஒளி போல் பிரகாசிக்கிறான் தாய லலிதாம்பிகை. அதும் வெறும் 

சூரியனைக்க ண்ட போலல்லாது; உதய சூரியனைக்கண்டது போல்.உதய சூரியனின் தனித்தன்மையல்லவா 

சிவப்பு நிறம் .பார்க்க, பார்க்க அதிகரித்துக்கொண்டே வரும் ஒளி வெள்ளம்; உக்கிரம் குறைவான, 

குளிர்மையான ஒளி வெள்ளம். குளிர்மையும் ஒளியும் தாய்மையின் குணங்கள். உதய சூரியனின் இன்னொரு 

தனித்தன்மையல்லவா செந்நிறம்.உதித்து சிறிது நேரம் போய்விட்டால் செந்நிறம் மாறி 

வெண்மையாகிவிடும்.தேவியின் நிறமும் சிவப்பு உதய சூரியனின் நிறத்தைக் போல்.லலிதா ஸஹஸ்ர நாமத்தின் 

தியான சுலோகத்தில் அம்பிகையின் நிறம் சிவப்பு என்று சொல்லப் பட்டுள்ளதை நினைவு கூர வேண்டும்.

सिन्दूरारुण-विग्रहां त्रि-नयनां माणिक्य मौलि स्फुरत्

तारानायक-शेकरां स्मितमुखीं आपीन वक्षोरुहाम
!
ஸிந்தூராண விக்ரஹாம் த்ரி நயனாம் மாணிக்ய மௌலி ஸ்புரத்

தாராநாயக் ஶேகராம் ஸ்மிதமுக்கிம் அபின் வக்ஷோருஹாம்

லலிதாம்பிகையை பெண்கள்நெற்றியில்அணியும் குங்கும பொட்டுடனும் உதித்தெழும் சூரியனுடனும் 

உவமிக்கப்பட்டுள்ளது இந்த தியான சுலோகத்தில்.இரண்டுமே சிவப்பு நிறம்.இரண்டுவிதமான உவமைகள் 

தருவதன் மூலம் வாக்தேவதை அழுத்தமான செந்நிறத்தையுடையவள் மாதா லலிதாம்பிகை என்பதை 

புரியவைக்க முயலுகிறாள்.லலிதாம்பிகை விக்ரகம் போல்அழகாக இருக்கிறாள் அவள் 

முக்கண்ணுடையவளாயிருக்கிறாள்.மூன்றாவது  கண் ஞானக் கண்.ஞானம் பெற்றவர்களெல்லாமே மூன்றாவது 

கண்ணுடையவர்களே. பௌதிக கண்களை மூடியிருந்தாலும் அவர்கள் உண்மையை தரிசிக்கிறார்கள்ள்..

எல்லா தந்திர சாஸ்திரங்களிலும் தேவியின் நிறம் சிவப்பு என்றே சொல்லப் பட்டுள்ளது.தேவிக்கு மூன்று 

உருவங்கள் உண்டு. முன்னால் சொல்லப்பட்ட நாமங்களில் அவளின் பிரகாசமான ரூபம் சொல்லப்பட்டது. 

அது சூக்‌ஷ்ம ரூபம். இந்த நாமத்தில் அவளது விமர்ச ரூபம் அதாவது பௌதிக உருவம் பேசப்படுகிறது. 

இல்லையென்றால் நிர்குணமான தேவிக்கு நிறம் ஏது?அவளது ‘ பரா’ ரூபம் மிகவும் முக்கியமானது. அது 

மிகவும் பிரகாசமான ரூபம் . அது  பல மந்திரங்களில் பராமரிசிக்கப்படுகிறன்றது. அவைகளில் முக்கியமானது 

‘மஹா சோடஸி’ மந்திரம்.தேவியின் விமர்ச ரூபம் தான் நாமெல்லாம் உபாசிக்கின்ற பௌதிக உருவம் அதுவே 

ஆயிரக்கணக்கானவை.ஆனால் நாம் மனதாலும் உபாசனை செய்கின்ற பரா ரூபம் தான் மிகவும் 

உன்னதமானது.

பௌதிக உருவ வழிபாடு எளிதாக மனித மனதில் பதிந்துவிடுகிறது.சிவப்பு அக்கறையின வடிவம. தாயின் 

அக்கறை தேவியின் நிறமாக வெளிப்படுகிறது.

இதையே தான்் பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணனும் சொல்கிறான்.

திவி ஸூர்ய ஸஹஸ்ரஸய பவேத்யுகபதுந்திகா

யதித்வமாத்மானம் பா: ஸத்ருசீ ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மனா:!

दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुस्थिता

यदि भा: सद्रुशी सा स्याद्भासस्तस्य महात्मन्।

” ஆயிரமாயிரம் சூரியர்கள் ஒரே நேரத்தில் உதித்துயர்நதால் ஆகாயம் எப்படி பிரகாசமானதாகவோ , அது 

போல் பிரம்மமும் ஒளிர்கிறது்”

நாம் கண்டிராத ஒன்றை தெளிவு படுத்துவதற்காகத்தான் நாம் கண்ட ஒரு வஸ்துவை பெரிது படுத்தி 

சொல்கிறார் பகவான். ஒரு சூரியனை நாம் கண்டுள்ளோம் அதே போல் ஆயிரம் சூரியன் என்றால் நம்மால் 

ஒரளவிற்கு கற்பனை செய்து கொள்ள முடியும். 

 மந்திரம் ஏழு

சதுர்பாஹு ஸமன்விதா

இந்த மந்திரத்திலிருந்து மாதா லலிதாம்பிகையின் விமர்ச உருவம் விளக்கப்படுகிறது.தேவி லலிதாம்பிகைக்கு 

நான்கு கைகள் என்கிறது இந்த மந்திரம்.இந்த நான்கு கரங்களுடன் தேவியின் நான்கு மந்திரிகளை 

சூசகமாகக் குறிப்பிடப் படுகிறது..அவர்களும் நான்கு தேவியர்களே.அவை மாதாவின் ஆட்சிமையை 

குறிக்கின்றது.அவைகள் அடுத்த நான்கு நாமங்களில் விளக்கப் படுகின்றன.

மந்திரம் எட்டு

ராகஸ்வரூபா பஶாத்யா

ராகம் என்றால் எதிலும் விருப்பம்; ஆசை.பாஶம் என்றால் கயிறு.

சக்தி மூன்று விதம் இச்சண்டையில் சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி. இவைகளின் இச்சா சக்தியின் மாய 

வலையில் அகப்பட்டவர்கள் லௌகீகத்தில் விழுந்து மூழ்கி விடுவார்கள். அப்படி மூழ்காமலிருக்க தேவியின் 

இடது மேல் புறமுள்ள கை யால் இச்சா சக்தியை கட்டுப்படுத்தி நம்மை படுகுழியில்  விழாமல் 

காப்பாற்றுகிறாள். ஆகவே தேவி ராக ஸ்வரூபா பஶ்யாத்யா என்றறியப்படுகிறாள்.அவள் அசுவாரூடா தேவி 

எனும் சொல்லப்படுகிறாள்.இந்திரியங்கள் தான் இச்சைகளை மனதில் தோற்றுவிக்கின்றன.அந்த 

இச்சைகளின் காரியப்ராபதிக்காக கர்மேந்திரியங்கள் செயலாற்றுகின்றன. ஆகவே இந்திரியங்களை 

கட்டுக்குள் வைத்து விட்டால் இச்சைகளும் காட்டுக்குள் இருக்கும். இந்திரியங்கள் எனும் குதிரைகளை  

-அசுவஙகளை கடிவாளம் போட்டு- கயிற்றால் கட்டிவைத்திருப்பவள் தாய் லலிதாம்பிகை. ஆகவே 

அசுவாரூடா தேவி அவள்.

மந்திரம் ஒன்பது 

க்ரோதாகாரங்குசோஜ்வலா
.

தனது வலது கையில் அங்குசத்தை வைத்திருக்கிறாள் தேவி.குரோதம் எனும் விகாரம் மனதில் எழுந்தால்  

தேவி அங்குசத்தால் அதை சமனப்படுத்துகிறாள்.அது மட்டுமல்ல, தேவியின் அங்குசம் மனித மனத்தில் 

சாந்தியையும் ஞானத்தையும் வழங்க வல்லது. உஜ்வலா என்ற பதத்தின் மூலம் குரோதம் அழிந்து ஞானம் 

பிரகாசிக்கச் செய்ய வல்லது இந்த அங்குசம் என்று பொருள் படுகிறது.

மேலும் க்ரோம் என்ற பீஜாக்‌ஷரம் உட்கொண்டிருப்பதால் இந்த நாமம் காளியை குறிப்பிடுகிறது. காளி 

துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்றுபவள். ஆகவே ஒரே நாமத்தின் இரு நாமங்கள் 

அடங்கியிருக்கின்றன.

வலது கீழ்பபுறமுள்ள கையில அங்கசத்தை வைத்துள்ள லலிதாம்பிகையை ஸம்பத்கரி தேவி என்று 

அழைக்கிறோம்

மந்திரம் 10

மனோருபேக்‌ஷு- கோதண்டா

மனம் தான் ஸங்கல்ப விகல்பங்களின்  உறைவிடம். ஸங்கல்பம் என்றால் மனதில் கற்பனை 

செய்வது;விகல்பங்கள் என்றால் ஒன்றை மற்றொன்றாக காண்பது.

இந்திரியங்களில் உண்டாகின்ற பதிவுகள் மனதில் சென்று எண்ணங்களாய் மாறி பாஹ்யேந்திரியங்களை 

செயலில் இறங்க செய்கின்றன.் அழகான பெண்ணை காணுகின்ற நயனங்கள் தனது பதிவை மனதில் 

கொண்டு சென்று அவளை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் தோற்றுவித்து அதற்கான 

செயல்களில் இறங்க வைத்து இன்ப துன்பங்களை உளவாகின்றன.கயிறை பம்பாகவும் சிப்பியை 

வெள்ளியாகவும், தூணை பேயாகவும் நினைக்க வைக்கின்றது மனம் தான்.இந்த மனதை கரும்பை பிழிவதை 

போல் பிழிந்தால் கரும்பு உயிரற்றதாய் சுவையான சாறு கிடைப்பது போல்  போல் நமக்கு சாந்தியும் 

சமாதானமும் கிடைக்கும்.மனோ ரூப இக்‌ஷு என்றால் மனமெனும் கரும்பு என்று பொருள்.தேவி லலிதாம்பிகை 

ஙதனது இடது கீழ்பக்க கையில்  கரும்பையும் இன்னொரு கையில் கோதண்டத்தையும் வில்லையும் தாங்கி 

நிற்கிறாள்.

மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் துன்பம் இராது, இனிப்பான அமுதென்ற கரும்பு ரஸம் கிடைக்கும் 

என்பதை நமக்கு புரியவைப்பதற்காக தேவி இம்மாதிரி காட்சியளிக்கிறாள். பிரம்மம்  தான் கரும்பின்சாறு. 

மனோ நிவுருத்திமார்க்கம் தான்  பிரம்மத்தை அடைய ஒரேவழி என்று தேவி நமக்கு உணர்த்துகிறார்..

இந்த ரூபம் மந்திரிணி என்றும் இந்த தேவி சியாமளாதேவி என்றும் அழைக்கப் படுகிறாள்.. 

மந்திரம்11

பஞ்சதன்மாத்ர ஸாயளகா

தேவியின் இந்த பெயர் ஐம்புலன்களினால்  உளவாகின்ற பஞ்ச ரஸங்களையும் பஞ்ச பூதங்களையும் குறிப்பிட்டு 

காட்டுகின்றது.. பஞ்ச ரஸங்கள்- ஒலி, ஸ்பரிசம்,காட்சி,ருசி,மற்றும் கந்தம் அல்லது மணம் 

என்பவையாகும்.இந்த ஐந்தும் பஞ்சபூதங்களான ஆகாயம் வாயு, நீர்,நெருப்பு, மற்றும் பூமி யை குறிக்கின்றன.

நாம் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்த பஞ்ச தன்மாத்ராக்கள் தான்.ஆண் யானை 

பெண்யானையுடன் முட்டி உருமிக்கொண்டு போகும் பொழுது வழியில் வரும் குழியை பார்க்காமல் ஆபத்தில் 

சென்று மாட்டிக் கொள்ளும். மான்கள் வேடர்கள் உண்டாக்கும் ஒளியினால் கவரப்பட்டு ஆபத்தை விலைக்கு 

வாங்கும் விட்டில் பூச்சிகள் விளக்கின் ஒளியால் கவரப்பட்டு உயிரை இழக்கும். தூண்டலின் 

கோர்ககப்பட்டிருக்கும் இரைக்கு ஆசைப் பட்டு மீன் உயிரை இழக்கும்.வண்டுகள் மலரின் நறுமணத்தால் 

ஈர்க்கப்பட்டு அதனுள்ளே போய் அமர்நதிருக்கும் இரவு மலர் மூடிப்போகும் வரை .அதற்குள் உயிரை இழக்கும். 

ஆகவே இந்த பஞ்ச தன் மாத்ரைகளை கட்டுக்குள் வைத்திருந்தால் ஆபத்து நம்மை அண்டாது என்று 

லலிதாம்பிகையின் இந்த நாமம் நினைவூட்டுகிறது.

இன்னொரு விதத்தில் பார்த்தால், முன் மந்திரத்தில் தேவியின் வில்லை குறித்து  பராமரிசிக்கப் பட்டது.இந்த 

மந்திரத்தில் தேவியின் ஐந்து அம்புகள் பராமரிசிக்கப் படுகின்றன.. லலிதாம்பிகைக்கு ஐந்து அம்புகள் உண்டு. 

அவை மலர்களாலானவை. தந்திர சாஸ்திரத்தில் இந்த மலர்கள் பல விதமாக வருணிக்கப்பட்டுள்ளது 

இந்த மலர்கள் முறையே தாமரை, ரக்த கைரவம் என்பது தெற்றி மலர்,கல்ஹரா என்ற பேராம்பல் 

மலர்,இந்திராக என்ற சரக்கொன்றை மலர்,மற்றும் மாம்பூ என்பவையாகும்.இந்த மலர்கள் முறையே கிளர்ச்சி, 

பிரமை, குழப்பம்,ஊக்குவித்தல்,மற்றும் அழித்தல் என்பவற்றையு குறிக்கின்றன.இந்த அம்புகள் போரில் 

பயன்படுத்தப் படும் சில யுக்திகளையும்  பிரதிபலிக்கின்றன.தேவி லலிதாம்பிகை இந்த அம்புகளை நம்முடைய 

மாயா பிரம்மத்தைக் அழிப்பதற்கு பயன் படுத்துகிறார் மாயையை உண்டு பண்ணுபவளும் அவளேஅழிப்பவளும் 

அவளே.

இந்த மலரம்புகள் அவளது வலது கீழ்ப்பகுதியிலுள்ள கையிலுள்ளன..வராஹி தேவி என்ற  பெயர் இந்த 

தேவிக்குண்டு..

எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது மற்றும் பதினொன்றாவது மந்தரங்களில் தேவியின் சில பீஜாக்‌ஷரங்கள் 

மறைந்திருக்கின்றன.

எட்டாவது மந்திரம் ராக ஸ்வரூபா இதில் ராகஸ்வ என்பதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.ரா+ஆக+ஸ்வ.

ஆக என்றால் சம்ஸ்கிரதத்தில் சிவ என்று பொருள்..சிவ என்பதின் பீஜம் ஹாம்.இதை நாம் ஹா என்றெடுத்துக் 
கொள்ளளலாம்.ரா என்பதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.ஸ்வஎன்றால் இம்அப்படி ஹ்ரிம் என்ற பீஜ 

மாகியது.

இதே போல் மற்ற மூன்று மந்திரத்திலும் பீஜாக்‌ஷரங்கள் மறைந்து கிடக்கின்றன.அதனால் தான் லலிதா 

ஸஹஸ்ர நாமம் வேத சாஸ்திரங்களுக்கு ஈடானது என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது லலிதா ஸஹஸ்ரநாமத்தை  ராகத்ததுடனோ, ஸவரத்துடனோ 

சொல்லக்கூடாது என்பது தான்.ஏனென்றால் அப்படி செய்யும் பொழுது பீஜங்கள் சிதைந்து போக 

வாய்ப்புண்டு.
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s