ஸர்வம் சக்தி மயம்- லலிதா ஸஹஸ்ரநாமம்

பாகம் 1.                             லலிதா ஸஹஸ்ர நாமம்

அத்தியாயம்                        மந்திரம் 12-18

மந்திரம் 12

நிஜாருண்-ப்ரபா- பூர-மஜ்ஜத்-பரமஹ்மாண்ட- மண்டலா

தேவியின்  சிவப்பு நிறம் பிரபஞ்சம் முழுவதும்- இல்லை இந்த பரம்மாண்டத்தையே ஒளி 

வெள்ளத்தில்  மூழ்கடிக்கின்றது. வெறும் சிவப்பு நிறமில்லாத்து; அது சூரியனின சிவப்பு நிறம்.

அருண் – அருணன் என்றால் சூரியன். நிஜ- தன்னுடைய

 ப்ரம்மாண்டத்தை முழுவதையும் பிரகாசமானமாக்கிற அம்மையே என்றழைக்கிறது  இந்த நாமம்

பௌதிக வருணனை இந்த நாமத்திலிருந்து ஆரம்பிக்கிறது.சாதாரணமாக கடவுள்களை வருணிக்கும்பொழுது

 ‘ பாதாதிகேசம் ‘ தான் வருணிப்பார்கள்.ஆனால தேவியரை வருணிக்கும்பொழுது தலையிலிருந்து பாதம் 

வரை என்ற  முறையில் வருணிப்பார்கள் சிவனுக்கு மட்டும் இரண்டு விதமாகவும் வருணிக்கலாம். ஏனென்றால் 

சிவன். அர்த்த நாரீசுவரர்.தான் பாதி, சக்தி ப்பாதி. ஆகவே உமையொரு பாகன் என்று அழைககிறார்கள்.

பஞ்சதசி மந்திரத்தில் மூன்று பாகங்கள் உண்டு. அதில் ஒன்று கேசாதிபாதம் பாத வருணனை. ; அதாவது 

தேவியின் உச்சந்தலையில் மையமாக வைத்த தியானிப்பது என்று பொருள்.

தேவி லலிதாம்பிகையின் உச்சந்தலையிலிருந்து சிதறி விழும் ஒளிக்கதிர்கள் இந்த ப்ரம்மாண்டத்தையே 

பிரகாசமானமாக்க வல்லது என்று இந்த மந்திரத்திற்கு பொருள்.

ஞானப்பிராகாசம் என்பது தேவி லலிதாம்பிகையின் சிரஸிலிருந்து தான் உற்பத்தியாகின்றது. அவளே 

ஞானத்தின் உறைவிடம். அவளே ஞானமலை; ஞான ஒளி. அவளை உபாசிக்கிறவர்களுக்கு ஞானம் எளிதில் 

கிடைக்கும். மற்றவர்கள் அஞ்ஞானம் எனும் இருளில் உழல வேண்டியது தான்.

மந்திரம் 13

சம்பகாசோக புன்னாக் ஸௌகந்திக லஸத் கசா    

சம்பகாசோக,புன்னாகம்,ஸௌகந்திகம் என்பன தேவியின் முடியை அலங்கரிக்கும் நறுமணமுள்ள 

மலர்கள். இந்த மலர்கள் தேவியின் முடிக்கு நறுமணம் நல்குவதில்லை.இந்த மலர்கள்தான் தேவியின் முடியில் 

வசிப்பதால் நறுமணம் பெறுகிறது.

இதற்கு முன் கூறப்பட்டுள்ள மந்திரங்களில் தேவியின் ஆபரணாதிகளையும் ஆயுதங்களையும் 

விவரிக்கப்பட்டுள்ளது. இவைகள் எதுவுமே தேவிக்கு அழகையும் சக்தியையும் அளிப்பதில்லை. அவை 

தேவியிடம் இருப்பதால்த்தான் அழகும் சக்தியும் ஆர்ஜிக்கின்றன.

தேவியின் சக்தியும் அழகும் நறுமணமும் தாயின் உள்ளிலிருந்து வருபவை. அதே போல் ஒவ்வொரு 

மனிதனுடைய சக்தியும் அழகும் அவனுள்ளிருந்து அவர் வேண்டும்.அவை வெளியுலகுக்கு லௌகீக- பௌதிக 

வஸ்துக்களால் வருவதில்லை.அவனுள் இருக்கும் பிரம்மம் தான் அவைகளை வழங்குகின்றன. செல்வம், பதவி, 

ஆடையலங்காரம் எல்லாம் நாசமடையக் கூடியவை. அவை எதுவும் ஒருவனுக்கு அழகையும் பலத்தையும் 

அளிக்காது. அவனது ஆத்ம சக்தி மட்டும் தான் அதை அளிக்க முடியும் ஆகவே வெளி அழகை பாராதீர்; 

உங்கள் கவனத்தை உன்முகமாக திருப்பி ஆத்ம விசாரணையின் ஈடுபடுங்கள்;உங்களுக்கு சக்தியும் அழகும் 

கிட்டும் என்பதை இந்த மந்திரம் ஞாபகப் படுத்துகிறது.

   ஆகவே தான் பகவான் ரமண மஹர்ஷி கூறுவார்:

                    சீரை யழித்து நிர்வாணமாகச் செய்துன்னருட்சீரையளித்தருளருணாசலா

ஸௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரன் கூறுவார்:

துனேது த்வாந்தம் நஸ்துலிததலிதேந்தீவரவனம்

கனஸ்னிக்பிதஶ்லஷ்ணம் சிகுரநிகுரும்பம் தவ சிவே,

யதீயம் ஸௌரபயம் ஸஹஜமுலப்தம் ஸுமனஸ்ஸா

வஸந்தயஸ்மின்மன்யே வலமதனவாடீ விடபினாம்.

‘ அம்மா தாயே தேவீ, ( சிவே) அடர்த்தியானதும் மலர்ந்த நீலத் தாமரை பூக்களின் கருமை நிறத்துடனானதும் 

பளபளப்புடனும் காணப்படும்  உன் கூந்தல் எங்கள் அஞ்ஞானமாகின்ற இருளை அகற்றி எங்களுக்கு முக்தியை 

நல்கட்டும். இந்திரனின் பூந்தோட்டத்திலுள்ள மலர்கள் உன் கூந்தலின் நறு மணத்தை பெறுவதற்காக அங்கு 

வந்து வசிக்க விரும்புகின்றன.’

தேவியின் தலைமுடியின் மிருதுத்தனமை தாய்மையின் அன்பை சுட்டிக்காட்டுகிறது.

“ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே ஆச்சர்யம் மெத்த மெத்த அது தான் பாரு“

என்று கருவூர்த் சித்தர்  பாடி அருள்கிறார். ஆதியும் அந்தமும் இல்லாத வாலை இருப்பிடமே ‘ மெத்து மெத்து’ 

என உள்ள உன் தலைமுடியே !

அதாவது நம் சிரசில் உள்ளே மத்தியிலே , நம் இரு கண்ணும் உள் சேரும் இடத்திலே , நம் உச்சிக்கு கீழே 

அண்ணாக்குக்கு மேலே உள்ள அந்த இடமே, அந்த அரங்கமே – அந்தரங்கமான வாலை இடம்.

இதுவே ஞான ரகசியம்.அந்த சிரஸிலிருந்து ஞான ஸ்தானம் நமக்கு ஞான ஸ்நானம் செய்விக்கட்டும் 

என்கிறார் கருவூரார்.

முதலும் முடிவுமான அவளே வாலை. அவளே பாலா .அவளே  சக்தி .

உன்னை படைத்து உன்னுள்ளே ஒளிர்கிறாள் உலகத்தாய் வாலை.அவளை பாரு என்கிறார் கருவூர் சித்தர்.

 மனதை அங்கே- சிரஸில்  நிறுத்தி மனக்கண்ணாலே உணர்ந்து  இருந்தாலே தவம் செய்தாலே ஞானம் 

பெறுதலுக்கு வழி.

ரிஷி துர்வாஸர் தனது ‘ சக்தி மஹிமை’ எனும் கிரந்தத்தில் கூறுவார்’ தேவியின் தலைமுடியின் நறுமணத்தை 

நமது இதய சக்கரத்தில் இருத்தி , தியானம் செய்ய வேண்டும்’ என்று.

உலக மாதாவின் தலைமுடிக்கே அஞ்ஞானத்தை விரட்டியடிக்கக் கூடிய சக்தியிருக்குமெனில் அவளது முழு 

உருவத்திற்கு எவ்வளவு சக்தியிருக்கும்? 

அவளது தலைமுடியிலுள்ள நான்கு மலர் களின் வாசனை என்பது நமது அந்தக்கரணத்தைக் 

குறிக்கிறது.மனது, புத்தி, போதம்,அஹம் இவை நான்கும் சேர்ந்தது தான் அந்தக்கரணம் . மாதாவின் 

தலைமுடியோடு சேரும்பொழுது அந்தக்கரணம் அசுத்தம் செய்யப்படுகிறது. அந்தக்கரணம் 

சுத்தமானால்த்தான் ஞானம் – ஆத்ம சாக்‌ஷாத்காரம் பெறமுடியும்.

மந்திரம் 14

குருவிந்தா,மணிஸ்ரேணி, கனத்,கோடாரி,மண்டிதா

செல்வ செழிப்பையும்,அன்பையும், பக்தியையும்ம் அதிகப்படுத்துகிறது சிவப்பு வைரம் ( ரூபி)பதித்த கிரீடத்தை 

அணிந்துள்ள தேவி லலிதாம்பிகையை உபாசிக்கின்றவர்களுக்கு சர்வ ஐசுவரிங்களும் சித்திக்கும் ஏனென்றால் 

சிவப்பு வைரம் விஷ்ணுவிற்கு பிரியமானது.விஷ்ணு ஶ்ரீநிவாஸன். அவனிடம் ஶ்ரீ – லகஷ்மி வசிப்பதால் அவனை 

சந்தோஷப் படுத்துபவர்களுக்கு செல்வ செழிப்பு உண்டாகும்.

ஸௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர் சொல்லுவார்:

கதைர்  மாணிக்யத்வம் க்கனமணிபி: ஸாத்த்யம் கடிதம்

கிரீடம் ஸ்திதி ஹைம ஹிமகிரிஸுஸ்த கீர்யதி ய:

ஸ நீடசொயாசேரண ஶபலம் சந்தரஶக

தனு: ஶௌனசீரம கீமிதி ந நிபத்தாதி திஷணாம்

தேவி மாதா லலிதாம்பிகையே, பன்னீரண்டு சூரியர்கள் ஒன்றுசேர்நது உருவான தங்கள் தங்க மகுடத்தை 

எவ்வாறு விவரிக்க இயலும்?அதிலுள்ள இரத்தின கற்களின் ஒளியினால் பிரகாசிக்கின்றன சந்திரனை இந்திர 

தனுஷ் என்று கவிஞர்கள் வருணித்தால் அதில் என்ன ஆச்சரியம்?

துர்வாச முனிவரும் சக்தி மகிமையில் தேவியின் மகுடத்தை வருணிக்கிறார்கள் 

மந்திரம் 15

அஷ்டமி சந்திர விப்ரஜா தளிக்க ஸ்தலா ஶோபிதா

தேவியின் முன் நெற்றி அர்த்த சந்திர ரூபத்தில் எட்டாம் நாள் பிறை போல்- அஷ்டமி தினத்து சந்திரனை 

போல் காட்சியளிக்கிறது. எட்டாம் நாள் சந்திரினில் காணும் நெளிவுகள் ஒரு அழகே!.

மந்திரம் 16

முக சந்த்ரா களங்காபா ம்ரிகநாபி விஶேஷகா

நெற்றியில் நறுமணம் உமிழ்கின்ற கஸ்தூரி திலகத்துடன் தேவி காணப்படுகிறாள் தேவியின் திலகமிட்ட 

சந்திரனில் காணப்படுகின்ற கரும்புள்ளி போல் தோற்றமளிக்கின்றது.சக்தி மகிமையில் துர்வாச மாமுனிகள் 

தேவியின்  நெற்றியில் மனதை ஒருமைப் படுத்தி தியானம் செய் வேண்டும் என்று சொல்கிறார்.

மந்திரம் 17

. வதனஸ்மர மாங்கல்யா க்ரஹதோரண சில்லிகா

தேவி லலிதாம்பிகையின் வத னம் மன்மதனின் அரண்மனை போன்றும் அவளது பருவங்கள் அரண்மனை 

வாயிலில் கட்டப் பட்டுள்ள தோரணங்கள் போலவும் தோற்றமளிக்கின்றன. மன்மதன் தேவியின் முகத்தைப் 

பார்த்துத் தான் அரண்மனையை கட்டினான் போலும்!.மன்மதன் எல்லோரையும் ஈர்க்க கூடிய வசீகர 

சக்தியுடையவனாக இருக்கிறான். அந்த சக்தியை அவனுக்கு நல்கியதே உலக மாதா லலிதாம்பிகை தான். 

பிரபஞ்சத்தின் தொடர்இயக்கத்திற்கு மன்மதனின் சேவை மிகவும் அவசியம். அதே போல் ஆத்மாவின் 

சாக் ஷாத்காரத்திற்கு தேவியின் அருள் அவசியம். தேவியின் முகத்தை தரிசித்தாலே முக்தி நிச்சயம்.

மந்திரம் 18

வக்த்ர லக்‌ஷ்மி பரிவாஹ சலன் மினாப லோசனா 

தேவி லலிதாம்பிகையின் முக கமலம் ஒரு குளம் போலவும் அவளது கண்கள் அங்கு நீந்தி விளையாடுகின்ற 

மீன்களைக் போலவும் காணப்படுகின்றன.மீன்களின் தனித்தன்மை என்னவென்றால் அவை ஓரிடத்தில் 

நிலையாக நிற்காது. அவை இடம் மாறிக்கொண்டேயிருக்கும். அதே போல் தேவியின் கண்களும் சகித்துக் 

கொண்டேயிருக்கும். அவள் உலகத்திற்கு தாயல்லவா? அவளுக்கு தன் எல்லா குழந்தலைகளின் மீதும் கண் 

இருக்க வேண்டுமல்லவா?மீனின் முட்டைகளை யாரும் அடை காக்க வேண்டியதில்லை. தாயின் கண்பார்வை 

பட்டே முட்டை விரிந்து குஞ்சுகள் வெளி வருகின்றன. அது போல் உலக மாதாவின் கண்பார்வை பட்டாலே 

நமக்கு முக்தி கிட்டும்.  பிரபஞ்ச- லௌகீக வாழ்விலிருந்து வெளிவந்து விடுவோம்.ஆகவே தான் அவளை 

மீனாக்‌ஷி , மீன லோசனா என்றெல்லாம்  அழைக்கின்றோம்.

இன்னொரு விதத்தில் பார்த்தால், மீன் குளத்து நீரிலுள்ள அழுக்கையெல்லாம் தன்னுள் வாங்கி, குளத்தை 

சுத்தப்படுத்துகிறது. அது போல் லலிதாம்பிகையும் தன் கண்களால் நம்மை நோக்கியே நம் 

பாபங்களையெல்லாம் தன்னுள் இழுத்துக்கொண்டு  நம்மை மாசற்றவர்களாக்கி, சத்திய சாக்‌ஷாத்காரத்திற்கு 

தகுதியுள்ளவர்களாக்கி விடுகிறாள்.

 இதையே பகவான் ரமண மஹிரிஷி பிரார்த்தனை ரூபத்தில் சொல்கிறார்:

                     ஔவை போலெனக்குன் னருளைத் தந்தெனை

                        யாளுவதுகடனருளருணாசலா !

என்றும்

                   நோக்கியே கருதிமெய் தாக்கியே பக்குவ

                                   மாக்கி யாண்டரு ளருணாசலா!

                     

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s