ஸர்வம் சக்தி மயம் – தேவீ மாஹாத்மியம்

பாகம் 2.                தேவீ மாஹாத்மியம்

அத்தியாயம்            கவசம் 4

க்ரீவாயாம் பத்ரகாளீ ச ப்ருஷ்டவம்சே தனுர்தரீ 

நீலக்ரீவ பஹிகண்டே நளிகம்அலக்கூபாரி

கட்க தரின்யோபௌ ஸ்கனடௌ பஹு மே வஜ்ர தாரிணி

ஹஸ்தயோர் தண்டினி ரக்‌ஷேத் அம்பிகா ச அங்குலீஷு ச !

கழுத்தை காளீ தேவியும் முதுகெலும்பை வில்லை ஆயுதமாகக்கொண்ட தனுர்தரீ தேவியும் முன்கழுத்தை

நீலநிறத்துடன் கூடிய நீலக்ரீவ தேவியும்,கழுத்திலுள்ள எலும்பை நளகூபரி தேவியும் ( குபேரனின் 

சக்தியுடைய) கட்கத்தை ஆயுதமாகக்கொண்ட கொண்ட கட்கதாரிணீ தோள்களையும் வஜ்ரா யுதத்தை 

ஆயுதமாகவும் கொண்ட வஜ்ரதாரிணீ தேவி என் புஜங்களையும், தவறை தண்டிக்கின்ற தண்டினி தேவீ என் 

கைகளையும் சகலருடையவும்  தாயான அம்பிகா என் விரல்களையும் காப்பாற்றட்டும்.

நகம் சூலேஸ்வரி ரக்‌ஷேத்,குக்ஷௌ ரக்‌ஷேத் நளேஸ்வரி

ஸ்தனௌ ரக்‌ஷேத் மஹாதேவி,மன சோகநாசினி! 

என் நகங்களை சூலேசுவரியும், நாபியை நளேசுவரியும்,மகாதேவி என் மார்பகங்களையும், சோக நாசினி 

தேவி என் மனதையும் காக்கட்டும்.மனம் தான் எல்லா இன்பதுன்பங்களுக்கும் காரணம் என்பதால் மனோ 

விருத்தியை தடை செய்துவிட்டால் துன்பங்கள் அழிந்துவிடும் ஆகவே மனோ நாசத்திற்கு சோக நாசினி ஏ

தேவியருளட்டும்.
.

   ஹ்ருதயம லலிதாதேவிஹிதயரே சூலதாரிணீ,நபிம் ச 

   காமினி ரக்‌ஷேத் குஹ்யம் குஹ்யேஸ்வரி மாதா 

தேவி லலிதாம்பிகை எனது இதயத்தை பாது காக்கட்டும். திரிசூலத்தை ஏந்தி நிற்கின்ற சூலதாரிணீ என நாபி 

பிரதேசத்தையும், காமினி என் அடி வயிற்றையும், குஹ்யேசுவரி என் பிறப்புறுப்புகளையும் காப்பாளாக.

பூதநாத ச மேத்ரம் ச குதம் மஹிஷவாஹினி

காத்யம் பகவதி ரக்‌ஷேத் ஜனுனி விந்திய வாசினி

எனது ஆணுறுப்பை சர்வ பிரபஞ்சத்தையும் ஆட்சி செய்கின்ற பூதநாதாவும்,எனது பிரஷ்டத்தை மஹிஷ 

வாஹினியும்,என்துடைகளை பகவதியும், என் முழங்கால்களை விந்திய மலையிலே வசிக்கின்ற விந்தியா 

வாசினியும் காத்தருளட்டும். 

ஜங்கே மஹாபாலா ப்ரோக்தா ஜனுமத்யே வினாயகி

குல்பஃஆயோர் நரசிம்ஹன் ச பாதப்ருஷ்டே அமிதௌஜஸி

பாதாங்குலி ஶ்ரீதரி,ச பாததஸ்தலாவாஸினி,

 நகம் தமஷ்ட்ரகராலி ச கேசமஸ்சைவொர்த்வ கேஸினி

முழங்கால் முழையை மஹாபாலாவும்,முழங்கால்களின் மத்தியையும் வினாயகியும்,முன்னங்கால்களை 

நரசிமஹியும், பாதங்களின் மேல்பாகத்தை ஶ்ரீதரியும்,பாதங்களின்கீழ் பாகத்தை கராளியும் உடலிலுள்ள 

உரோமங்களாலான – எல்லா உரோமங்களையும் ஊர்த்வகேஸினியும் பாதுகாப்பார்களாக.

ரோமகூபானி  கௌபேரி த்வாந்தம் வாகீஸ்வரி,ததா 

ரக்த,மஜ்ஜவாஸா மாம்ஸான்ய அஸ்தி மேதம்ஸி பார்வதி

தேகத்திலுள்ள ரோமகூபங்களை- மயிர்ககால்களை கௌபேரியும்( குபேரனின் ஸ்த்ரீ சக்தி) , சரீரத்தின். 

தோலை வாகீசுவரியும்,இரத்தம்,சதை,சாறு,எலும்புகள் , மற்றும் கொழுப்பையும் பார்வதியும் காத்தருளட்டும்.

அந்த்ராகணி காள ராத்ரிஸ்ச,பியுதன்ச மகுடேஸ்வரி,

பத்மாவதி ப்தம கோசஏ கபே சூடாமணி ஸ்ததா

என் குடல்களை காள ராத்திரீ தேவியும், பித்த கோசங்களை மகுடேஸ்வரியும்,இதயத்தை பத்மாவதி 

தாயாரும், என்னுள் இருக்கும் கபத்தை சூடாமணி தேவியும் காத்தருளட்டும்.

ஜ்வாலாமுக்கி நக ஜ்வாலம் அபேதயா ஸர்வ ஸந்திஷு,

சுகரம் ப்ராஹ்மணி மே ரக்‌ஷேத்,ச்சாயம் சத்ரேஸவரி ததா

என் நகங்களின் பளபளப்பை ஜ்வாலாமுக்கி தேவியும்,எல்லா எலும்பு முட்டையும் அபேதயா தேவியும்,என் 

நிழலை சத்ரேஸ்வரியும் காப்பாற்றுவளாக. எனது விந்தை ப்ராஹ்மணி தேவி காப்பாற்றுவாளாக. 

இது வரை உடலினை ஒவ்வொரு பாகங்களாக சொல்லி தேவி காப்பாற்றுவாளாக என்று ப்ரார்ததிக்கின்றோம். 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s