யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 224

தினமொரு சுலோகம்

நாள் 224

சங்கல்பங்கள் நீங்கிவிட்டால்  மிஞ்சுவது பரப்பிரம்மம்

சேத்யேன ரஹிதா யைஷா சித்ததப்ரஹ்ம ஸனாதனம்

சேத்யேன ஸஹிதா யைஷா சித்ஸேயம் கலனோச்யதே !

चेत्येन रहिता यैषा चितद्ब्रह्म सनातनम्

चेत्येन सहिता यैषा चित्सेयम् कलनोच्यते।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, நீ  எல்லாவற்றையும் அறிந்த – அறிகின்ற ஆத்மா.நீ 

பிறப்பில்லாதவன்.நீ பரம்பொருள்.நீ ஸர்வவியாபியான ஆத்மாவிலிருந்து வேறல்ல நீ.ஆத்மவல்லாமல் 

வேறோன்றில்லை என்று அறிந்து மனதை உறுதிப்படுத்திக்கொள்.  இன்ப- துன்பங்களை உளவாக்குகின்ற 

பிரச்சினைகள் எதுவும் ஒரு பொருட்டல்ல.அவனை அவைகள் பாதிக்காது.களிமண்கட்டிக்கும் 

தங்கக்கட்டிக்கும் ஒரே மதிப்பை அளிப்பவனுக்கு எதிலும் விருப்பு-வெறுப்பு தோன்ற முடியாது.இங்கு 

காண்கின்ற பிரபஞ்சத்தை – இந்த மாயக் காட்சிகளை- நியாயப்படுத்துவதற்கு எந்த வாசனைகளும் இல்லாத 

அவன் ஒரு யோகி.அவன் என்னவெல்லாம் செய்தாலும்,என்னவெல்லாம் அனுபவித்தாலும்,எதையெல்லாம் 

அழித்தாலும் எதுவும்அவனை பாதிக்காது. அவனது போதம் எப்பொழுதும் சுதந்திரமானதாகவேயிருக்கும். 

அவனால் எல்லா இன்ப-துன்பங்களையும் ஒரே போல் காண முடியும்.ஒத்துக்கொள்ளக்கூடிய கர்மங்கள், 

ஒத்துக்கொள்ளவியலாத கர்மங்கள் என்று பாகுபாடு செய்து பார்ககமுடியாதவனாக 

அவனிருப்பான். அப்படிப்பட்ட அவனை அந்த கர்மங்கள் எந்தவிதத்திலும் பாதிக்காது. அனந்தாவ 

போதல்லாமல் வேறொன்றில்லை என்று உறுதியாக நம்புகிறவனை இன்ப அனுபங்களைக் குறித்துள்ள எந்த 

நினைப்புக்களும் பாதிப்பதில்லை.அவன் சுயக்கட்டுபாடுள்ளவனாகவும்,எப்பொழுதும்் சாந்தியுடனும் 

இருப்பான்.

மனதின் பிறவிக்குணம் ஜடத்தன்மைதான்.அது அனந்தாவபோதத்திலிருந்து புத்தியை தனியாக பிரித்து 

தன்னுள் சேர்த்துக்கொண்டு அனுபவ இலாபத்திற்காக முயற்சிக்கின்றது. சித்சக்தியின் காரணமாக 

வந்துசேரும் விஷயங்களோடு மனதிற்கு தொடர்பு ஏற்படுகிறது.மனம் செயல்படுவது அனந்தாவபோதத்தின் 

தயவினால்த் தான்.அது இந்த பிரபஞ்சத்தைக் குறித்துள்ள பலதரப்பட்ட எண்ணங்களை கற்பனையாகயால் 

தக்கவைத்துக் கொள்கின்றது.மனதிற்கு கிடைக்கும் ஒளி அனந்தாவபோதத்திலிருந்து மட்டும் 

தான். அப்படியில்லையென்றால ஜடமான மனதிற்கு புத்தியுடன் கர்மங்கள் ஆற்ற எப்படி இயலும்?வேதம் 

பயின்ற ஞானிகள் ‘போதத்திலுண்டாவதாக தோன்றுகின்ற பொய்யான அசைவு தான் மனம்’ என்று 

கூறுகிறார்கள்.பாம்பின்சீற்றம் உளவாக்கின்ற ஒலி போல் தான், மனம் உளவாக்கின்ற சிந்தைகளும் 

கருத்துக்களும் அதில் உண்மை கிடையாது.

” போதத்திலிருந்து கற்பனை எண்ணங்களை அகற்றிவிட்டால் மிஞ்சுவது பரப் பிரம்மம் மட்டும் 

தான்.போதத்தோடு கற்பனை எண்ணங்கள் சேர்ந்தால் மனோ விருத்திகளாகின்றன”.

அவையில் ஒரு பாகம் போல் இதயத்திலே உண்மை போல் நிலைக்கின்றது.இதுதான் ஒரு 

வரையறைக்குட்பட்ட போதம் அல்லது தனிமனித போதம் .ஆனால் இந்த தனிமனித போதம் தன்னுடைய 

பிறவிக்குணம் எல்லையற்ற தன்மையை மறந்து ஜடப்பொருள் போல் இருந்துகொண்டிருக்கிறது.அது பிறகு 

மனோ விகாரங்களின், விருப்பு-வெறுப்புக்களாகி, அவையின் விளைவானது ஏற்றுக்கொள்ளுதலும் 

நிராகரித்தலுமாக தொடருகிறது. அவையே அதின் பிறவிகள் குணம் போல் கற்பனை செய்து 

கொள்கிறது.இப்படியெல்லாம் ஆவது அனந்தாவபோதத்தின் என்பது மறக்கடிக்கப் படுகிறது.திரும்பவும் இந்த 

உண்மையை- தான் அனந்தாவபோதம் தான் என்ற உணர்வு  ஏற்படும்வரை- அது தன் ஆத்மா என்பதை 

அறிந்து கொள்வதேயில்லை.ஆகவே மனதை வேதங்களும் சொல்லித்தான் தருகின்ற நிர்மமதை- எனது என்ற 

மனப்பாங்கு-, இநிரியங்களின் கட்டுப்பாடு முதலியவைகளின் துணையோடு அதை உணர்ததுவதற்கு முயல 

வேண்டும்.மேதா சக்தியை, போதத்தை அவ்வாறு எழச்செய்து செய்து விட்டால் அது 

பரப்பிரம்மமேயாகிறார்கள் வெளி வரும்.அப்படி செய்யவில்லையென்றால் அது மேலும் மேலும் உலக 

அனுபவங்களில் மூழ்கிக் கொண்டேயிருக்கும் வெளிவர முடியாத ஆழத்தில் விழுந்து விடும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s