ஸர்வம் சக்திமயம் -லலிதா ஸஹஸ்ரநாமம் 26-31

மந்திரம் 26
கற்பூரவீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா

  Karpūravīṭikāmodha-samākarṣi-digantarā

 कर्पूरवीटिकामोध-समाकर्षि-दिगन्तरा 

கற்பூரவீடிகாமோத என்பது தாம்பூலம். வெறும் தாம்பூலம் அல்ல; நறுமணம் கமழும், குங்குமப்பூ, 

ஏலக்காய்,கிராம்பு,இலவங்கம்,கற்பூரம்,கஸ்தூரி, பாக்கு,மற்றும் வெற்றிலையும் சேர்ந்த தாம்பூலம்.இந்த 

தாம்பூலத்தில் ஜாதிபத்திரியும் சேர்ந்து, சர்க்கரையின் தூளும் சேர்ந்தால் எப்படியிருக்கும்!இதை 

மென்றுகொண்டிருக்கும் தேவி இந்த பிரபஞ்சம் முழுவதும் நறுமணமானதாக இருக்க காரணமாக 

இருக்கிறாள்.இதே பொருளை 559 ஆம் நாமமும, லலிதா த்ரிஶதியில் 14 ஆம் நாமமும் தருகிறது.

இதன் பொருள் என்னவென்றால் தேவியின் ஸஹஜமான  நறுமணம் மூலம் அஞ்ஞானிகளை தன்பால் ஈர்த்து 

கொள்கிறாள்அன்னை லலிதாம்பிகை என்பதாகும்.

ஞானிகள் தங்கள் பக்தியினால் தேவியை அடைய முடியும். அஞ்ஞானிகளுக்கு வேறு தூண்டுதல்களும் 

வேண்டியுள்ளது.அவளது நறுமணம் சாமானியர்களை அவள் பக்கம் ஈர்ககின்றது.

மந்திரம் 27

நிஜ ஸல்லப மாதுர்ய விநிரபர்த்ஸ்தித கச்சபி.

Nija-sallāpa-mādurya-vinirbhartsita-kacchpī

 निज-सल्लाप-मादुर्य-विनिर्भर्त्सित-कच्छ्पी 

ஸரஸ்வதி தேவியின் கையிலிருக்கும் ‘ கச்சபி’ என்ற வீணை எழுப்பும் ஒலி- சங்கீதம் மிகவும் 

இனிமையானது.அதை விட இனிமையானது தேவி லலிதாம்பிகையின் குரல்.அப்படிப்பட்ட குரலுடைய 

தேவியை போற்றுவோம்.

ஸௌந்தர்ய லஹரி 66 ஆம் சுலோகத்தில் ஆதி சங்கரருக்கு இதையே சொல்லியுள்ளார்:

விபஞ்சயா காயந்தி விவிதம்பதானம் பதபமஸ்ந-

த்யயாரஸ்ப்த வக்தம் சலிதஶிரஸா ஸாத்ர்யவசஸ்ந,

ததீகயர்மாமாத்ர்யகரபலபிததந்த்ரீகலரவம்

நிஜாம் வீணாம் வாணி நிசுலயதி ஸ்சாஸ்ந நிப்யதம்.

அன்னையே, தேவீ, பரமசிவனின் பலவிதமான பெருமைகளை புகழ்ந்து சங்கீதமாக சரஸ்வதீ தேவி  தன் 

இனிமையான வீணையின் நாதத்தில் உளவாக்கிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருக்கும் 

நீ,தலையாட்டிக்கொண்டே அதை ரசித்து, புகழும் பொழுது, தங்களது மிகவும் இனிமையான குரலின் முன் தன் 

வீணா நாதம் வெட்கி தலை குனிவதைக் கண்டு சரஸ்வதீதேவி அதன் உறையில் போட்டு மூட வேண்டி 

வருகிறது.

முன் மந்திர விளக்கத்தில் கூறியது போல் ‘அஞ்ஞானிகளை ஈர்பபதும் உன் குரலே’ என்று தான் கூற 

வேண்டும்.

மந்திரம் 28

மந்தஸ்மிதப்ரபாபூர மஜ்ஜத்காமேச மானஸா 

Mandasmita-prabhāpūra-majjatkāmeśa-mānasā

 मन्दस्मित-प्रभापूर-मज्जत्कामेश-मानसा (28)

தேவீ, லலிதாம்பிகையே, உன்புன்னகையை- இல்லை அதிலும் அதிக கவர்சசியான மென்னகையை கண்டு 

பூரித்துப் போயிருக்கின்ற ஈசனின்  இடது துடையில் அமர்நதிருக்கும் காமேஶவரியே உன்னை 

வணங்குகின்றேன்.’ஸ்மிதா’ என்றால் புன்னகை.’மந்தஸ்மிதா’ மெல்லிய புன்னகை.அது ஒரு தனிக்காட்சி 

அது கவர்சசியுடன் கூடிய மென்னகை. அதில் கருணை, தயா, பாசம்,ஆசை எல்லாம் ஒரு சேரவிளங்கும் 

மென்னகை. இப்படிப்பட்ட மென்னகையை தேவி எப்பொழுது உதிர்ககிறாள்? பரம சிவனின் இடது 

துடையில்  அமர்நதிருக்கும் பொழுது.அப்படியிருக்கும்பொழுது பரமசிவன் காமேசுவரன் 

என்றும்,லலிதாம்பிகை காமேசுவரி என்றும் அறியப்படுகிறார்கள். இது அர்த்த நாரீசுவரத்தோற்றம் அல்ல.இந்த 

நிலையில் தேவியின் மென்னகையில் பரம சிவன் தன்னையே இழந்து மெய் மறந்திருக்கிறான்.

இன்னொரு வித்த்திலும் இந்த மந்திரத்தை வியாக்கியானிக்கலாம்.. ‘காம’ என்றால் ‘பிந்து’ ‘ புள்ளி’என்றும் 

பொருள் உண்டு.பிந்து என்பது ‘ காமகலா’ பீஜத்தின் ஒரு பகுதி.( இ) இந்த பீஜ த்தில் இரண்டு பிந்துக்கள் 

உண்டு. அவை முறையே சூரியனையும்  சந்திரனையும் பிரதிநிதீகரிக்கின்றது.பிந்து என்பது ‘ அஹம’ ஐஉம்

‘ காம’ மற்றும் ‘கலா’ என்பது ஆசையும் குறிக்கும்.மனம் தான் ஆசைகளின் உறைவிடம்.பரமசிவனின் மனமே 

அன்னை லலிதாம்பிகையின் – காமேசுவரியின் புன்னகையில் இளகி ஆசையின் வசமாகி  விடும் பொழுது 

சாதாரண மனிதர்களைப் பற்றி கூறவும்  வேண்டுமோ? 

அன்னை நம்மை எல்லோரையும் தன் புன்னகையில் ஈர்த்து தன் வசமாக்கும் முக்திக்கு வழி காட்டுகிறாள்.

மந்திரம் 29

அனாகலித ஸாதுரிஶ்ய சிபுக ஶ்ரீ விராஜிதா

Anākalita-sādṛśya-cibuka-śrī-virājitā

 अनाकलित-सादृश्य-चिबुक-श्री-विराजिता

தேவீ, உனது தாடை மிகவும் அழகு வாய்ந்தது.அது மலர்நதும் மலராத பூ மொட்டு போல் இருக்கிறது. அங்கு 

ஸர்வ ஐசுவரியங்களின் தேவதை குடியிருக்கிறான்.ஸௌந்தர்ய லஹரி 67 ஆம் சுலோகத்தை இந்த 

தருணத்திலும் பார்ப்பது பொருத்தமாகவிருக்கும்.

கராக்ரண ஸ்பஷ்டம் துஹினகிரீணா வத்ஸலதயா

கிரிஶேனஸ்தம் முஹுராதரபானாகுலதயா

கரக்ராஹயம் ஶமபோர்முகமுகுரவிருந்தம் கிரிஸுதே

கதம்காரம் ப்ரூமஸ்தவ சுபுகமௌபமரஹிதம்

‘அன்னையே, மலைமகளே, தேவீ , நின் தந்தை இமயன் பாசத்தோடு தடவிய உன் மெல்லிய 

உதடுகள்,பரமசிவனில், அந்த அழகிய அதரங்களிலிருந்து அமுதை பருக வேண்டும் என்ற ஆர்வத்தை 

உண்டுபண்ணி,மீண்டும் மீண்டும் தன் கைகளை உயர்த்துவதற்கு தூண்டிய அதரங்கள்,உன் முகமாகின்ற 

கண்ணாடியின் கைப் பிடி போல் அவைகளை பற்றும்போது தோற்றமளிக்கின்றன.அப்படிப்பட்ட  உன் 

உதடுகளின்்அழகை எப்படி வருணிப்பேன்?’ என்கிறார் ஆதி சங்கரர்.

அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் பாடுகிறார்:

பவளக் கொடியில்  பழுத்த செவ்வாயும்
பனிமுறுகல்

தவள திருநகையாம் துணையா எங்கள்  சங்கரனை

துவளப் பொருத துடியிடை சாய்ககும் துண முலையாள்


அவைளப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைகே

பவழங்கள் போல் ஒளிர்கின்ற உதடுகளும்,அதில் தவழ்கின்ற புன் முறுவலும் கொடியிடையும் அவைக்கு துணை 

செய்கின்ற இரு முலைகளும் எங்கள் சங்கரனையே வீழ்த்தி விட்டது! அப்படிப்பட்ட அழகியான உன்னை 

போற்றிப் பாடினால் இந்திரபுரியாம் அமராவதிக்கே எங்களை இட்டு செல்லமாட்டாயா, தேவீ , நீ.

மந்திரம் 30

காமேஶ பத்த மாங்கல்யா ஸூத்ர ஶோபிதாமகன் கந்தரா

Kāmeśa-baddha-māṅgalya-sūtra-śobhita-kandhara

कामेश-बद्ध-माङ्गल्य-सूत्र-शोभित-कन्धरा (30)

காமேசுவரன் அணிவித்த திருமங்கல்யத்துடன் , தேவீ, உன் கழுத்து என்னே அழகு!.
ஸௌந்தர்ய லஹரி 69 ஆம் சுலோகத்தில் ஆசாரியன் கூறுவான்:
கலே ரேகாதிஸ்திஸ்ர கதிகமக்கதைநிபுணிகா

விவாஹவ்யானத்தகுணகுணஸங்கயாப்ரதிபுவ:

விராஜந்தே நாநாவிதமதுரராகாகரபுவா:

த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதிநியமஸீமான இவ தே!

கதி, கமகம், மற்றும்,கீதம் அவையில் திறைமை வாய்ந்த தேவீ, முன்னொருநாள் பரமசிவன் த்ஙகள் 

கழுத்தில் அணிவித்த திருமங்கல்ய சரடுகளால் ஏற்பட்டவையோ அந்த மூன்றுகோடுகள்? இல்லை சங்கீத 

பிரிவுகளின் எல்லைக் கோடுகளோ அவை?

தேவியின் மணிக்கழுத்து அவ்வளவு நளினத்துடன் இருந்ததை குறிப்பிடுகிறது இந்த நாமம்.
மந்திரம் 31

கனகாங்கத கேயுர கமனீய புஜனவிதா

Kanakāṅgada-keyūra-kamanīya-bhujanvitā
 कनकाङ्गद-केयूर-कमनीय-भुजन्विता 

தங்க வளையல்களையும் கெயுராக்களையும் அணிந்துள்ள தேவீ, நீ எனக்கருள்வாய்எந்த ஆபரணம் 

அணிந்தாலும் அவை அழகிற்கு அழகூட்டுவது போல் உள்ளது.. தேவீ நீ எதை அணிந்தாலும் அது 

தங்கமல்லவா. ஜீவாத்மாக்கள் எந்த உருவில் தோன்றினாலும் அவை உன் குழந்தைகளே. நீயே அவை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s