யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 226

தினமொரு சுலோகம்

நாள்226

மனமும் போதமும்

ப்ராணஶக்தௌ நிருத்தாயாம் மனோ ராமாவிலீயதே
த்ரவ்யச்சாயானு தத்த்ரவ்யம் ப்ராணரூபம் ஹி மானஸம் !

प्राणशक्तौ निरुद्धायाम् मनो राम विलीयते

द्रव्यच्छायानु तद्द्रवयम् प्राणरूपम् हि मानसम्!!

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” பரம்பொருளிலிருந்து எழுந்து வருகின்ற ஒரு சிறு மனோ விருத்தி தான்- எண்ணம் 

தான் தனி மனித போதமாக உரு எடுக்கிறது.இந்த எண்ணத்துளி உடல் பந்தத்திலிருந்தும், – தானே உடல் 

எனும் எண்ணத்திலிருந்தும்,அம்மாதிரி நினைப்புகளிலிருந்தும் விடுதலை பெறும்பொழுது முக்தியாயிற்று.இந்த 

பிரபஞ்சமெனும் காட்சிக்கு காரணம் அனந்தாவபோதத்திலுண்டாகின்ற சிறு சிறு எண்ண அலைகள் தான் 

.இந்த சிறு சிறு எண்ண த் துளிகள் தனி மனித போதத்தை தோற்றுவிக்கின்ற விதைகள்.தன்னுடைய 

பிறவிக்குணமான சாந்தியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விலகி, எண்ணஅலைகளால் மாசு பட்டு, 

தனிமனித போதத்தில் கற்பனை ஶக்தி வளருகிறது.தன்னுடைய கற்பனையில் ஒரு பிரபஞ்சத்தை சிருஷ்டித்து, 

வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறது.

‘ இராமா, ஆகவே பிராண ஶக்தியை கட்டுப் படுத்துவதன் மூலம் நாம் மனதையும் கட்டுப் படுத்த 

இயலும்.நிஜத்தை நீக்கிவிட்டால் அப்புறம் நிழலேது? பிராண சக்தியை கட்டுப் படுத்துவதற்காகத்தான் மூலம் 

மனதையும் அழித்து விட முடியும்’

 பிராண சக்தி நம் தேகத்தில் பயணிப்பதால்த்தான், என்றோ , எங்கோ நடந்த சம்பவங்கள் நம் ஞாபபகத்தில் 

தங்கி பிறிதொரு நாள் முளைத்தெழுகிறது.இந்த செயலை நாம் மனம் என்கிறோம்.பிராணனின் பயணத்தை 

அனுபவிப்பது மனம் தான்.எப்படி இந்த பிராணசக்தியை கட்டுப் படுத்துவது? நிர்மமதை ஒரு 

மார்ககம்.நிர்மமதை என்றால் ‘ எனது’ என்ற உணர்விலிருந்து விடுபட்டு இருப்பது.பிராணாயாமம், 

பிராணசக்தியின் பயணத்தை- மனோவிருத்தியின் விசாரணைக்கு உட்படுத்துவது.மேதா சக்தியின் 

உதவியுடன் துன்பங்களிலிருந்து விடுபடுதல்,பரம்பொருளைக் குறித்து சுயமாக விசாரித்து 

உணர்தல்,இவையெல்லாம் பிராணனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளில் சிலதாகும்.ஒரு கல்லில் 

புத்தியிருக்கிறது என்று மனதால் அனுமானிக்கமுடியும் ஆனால் மனதிற்கு சுயமாக கடுகளவு கூட புத்தி 

கிடையாது.வெறும் ஜடப்பொருளான ப்ராண சக்தி தான் மனதின் அஏசைவை தீருமானிக்கின்றது.

புத்தி, போதம்,விவேகம் என்பன சாசுவதுமும், சர்வ வியாபியுமான அனந்தாவபோதத்தின் 

குணங்கள்.பிராண சக்திக்கும் அனந்தாவபோதத்திற்கும் பந்தம் உளது என்று கற்பனை செய்வது மனம் தான்.

ஆனால் பிராண சக்தி ஜடவும் ஆகவே அஸத்தும் ஆக இருக்கிறது. ஆத்மா அல்லது அனந்தாவபோதம் 

ஸத்தாக உள்ளது.அப்படியிருக்க அவைகளுக்கிடையே எந்த பந்தமும் ஏற்பட இயலாது.அப்படிப்பட்ட 

மித்யையை -பந்தத்திலிருந்து உளவாகின்ற எல்லா எண்ணங்களும் மித்யையாகத்தான் இருக்க முடியும்.-

அவையை உண்மை என்று எண்ணுவது தான் அவித்யை, மாயை,, அஞ்ஞானம்.இது தான் பிரபஞ்சமெனும் 

பிரமை. அதுவும் ஒரு மாயக்காட்சி தான்.பிராண சக்தியும் போதமும் தொடர்புடையவை என்பது ஒரு 

கற்பனையே. நம் கற்பனையில் உளவாவது தான் இந்த மாயா பிரபஞ்சம்.அந்த கற்பனையில்லையென்றால் 

இந்த உலகமுமில்லை.

பிராணசக்தியின்  போதத்துடனுள்ள பந்தம் காரணம் இந்த உலகை காணவும் அனுபவிக்கவும் 

இயலுகிறது.ஆனால இவை  எல்லாம் வீண் வேலை.இருளில் பேயைக் கண்டு பயப்படும் குழந்தையின் 

அனுபவம் போல் பொய்யான அனுபவம்.எல்லாமே அனந்தாவபோதத்தில் ஏற்படுகின்ற அசைவுகளே! இந்த 

உலகிறக்கும்  சரி, உலகிலுள்ள பொருட்களுக்கும் சரி எல்லைகள் உண்டு. அப்படி 

எல்லைகளுக்குட்பட்டவை, எல்லையில்லாத அனந்தாவபோதத்தை பாதிக்காது.

ஆகவே , இராமா, மனமும், எல்லைக்குட்பட்ட போதமும் உண்மையல்ல.சத்தியம் எது என்ற ஞானம் 

உதயமாகும்பொழுது மனம் இல்லாதாகிவிடுகிறது.மனம் என்பது அடிப்படையிலேயே ஒரு பொய்யான 

கற்பனையில் உதயமானது தான் அது அபூர்ணமான அறிவிலிருந்து உளவாவதும் தான்.அந்த 

அபூரணத்துவத்தை மறந்து-மறைத்து பூரணத்துவத்தை அடையும் பொழுது மனம் காணாமலே போய்விடுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s