ஸர்வம் சக்திமயம்- தேவீ மாஹாத்மியம்

பாகம்2            தேவீ மாஹாத்மியம்

அத்தியாயம் 12.        அர்கள ஸ்தோத்திரம் 1-9

தேவீ மாஹாத்மியம் பாராயணக் கிரமத்தில் தேவீ கவசம் பாராயணத்திற்கு பிறகு தேவீ அர்கள பாராயணம்

செய்ய வேண்டும்.தேவீ கவசத்தில் தேவி நம் உடல் உறுப்புக்களையும், நம் சந்ததியரையும் பாதுகாக்கும் படி 

வேண்டினோம்  இருப்பதை பாதுகாத்தால் மட்டும் போதாது, எங்களுக்கு மேலும் சில பிரார்ததனைகள் 

உள்ளன; அவைகளை அர்களத்தில் சொல்கிறோம். முக்கியமாக, ” ரூபம், தா, ஜயம் தா, புகழ் தா” என்று 

வேண்டுகிறோம்.ரூபம், ஜயம், புகழ் என்ற மூன்று வார்த்தைகளுக்கு மிகுந்த ஆழமான பொருள் உண்டு.

ரூபம் என்றால் சாதாரணமாக உருவம் அதாவது தேகம் என்று பொருள். மேலோட்டமாக பார்க்கும் பொழுது  

ஆரோக்கியமான வாழ்வை அருளும்படி கேட்பதாக தோன்றுவதில் தவறில்லை. ஆனால் சகல 

ஜீவராசிகளுக்கும் தாயாக இருக்கும்  பராசக்தியிடம் இதை கேட்கவும் வேண்டுமா? தேவியை உபாசனை 

செய்வதற்கு ஒரு பிடிமானம் வேண்டும்.ஆதியும் அந்தமும்்இல்லாத, நிர்குண பிரம்மமான தேவீ,  உன்னை 

நான் எப்படி உபாசிப்பேன்?உன்னை உபாசனை செய்யாமல் எனக்கு எப்படி முக்தி கிடைக்கும்? ஆகவே ‘ 

ரூபம் தேஹி’ என்று பிரார்ததிக்கிறோம்.

நிர்குண பிரம்மத்திலிருந்து சகுண பிரம்மமாக நீ காட்சியளித்தால் மட்டும் போதாது. அந்த உபாசனையில் 

எனக்கு ஜயம் ஏற்படவேண்டும். எந்த வித தடங்கலுமின்றி ஆத்ம சாக்‌ஷாத்காரம் அனுபவப்பட வேண்டும்.

இந்திரியங்களால் தோற்றுவிக்கப்படுகின்ற சஞ்சலங்களுக்கு ஆளாகாமல்  நான் உபாசனையை முழுமிப்பிக்க 

வேண்டும். ஆகவே ” ஜயம் தேஹி” என்று வேண்டுகிறேன்.

நான் எனது உபாசனையில் வெற்றி பெற்று விட்டால் அதைக் கண்டு இன்னும் பலரும் ஆத்ம 

சாக்‌ஷாத்காரத்திற்கு முயலவேண்டும். அதற்கு எனது புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும். ‘ யாம் பெற்ற பேறு 

இவ்வையகம் பெற வேண்டும்’ . ஆகவே ” யஶோ தேஹி” என்று பிராரத்திக்கிறோம்.

ஓம் நமோ சண்டிகாயே !!

॥Om Namas Chandikayai ॥

தேவி சண்டியை வணங்கி இதை ஆரம்பிக்கிறேன்.

ஸ்தோத்திரம் 1

ஓம் ஜயந்தி மங்களா காளீ பத்ரகாளீ  கபாலினீ

துர்கா க்‌ஷமா ஶிவா தாத்ரி ஸ்வாஹா ஸ்வாதா நமோஸ்துதே!

ॐ जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी

दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोऽस्तु ते

Om Jayanti Mangala Kali Bhadrakali Kapalini

Durga Kshama Shiva Dhatri Svaha Svadha Namostute ॥1॥

ஆரம்பிக்கும் பொழுது தேவியை வணங்கி ஆரம்பிக்கிறேன் . தேவியின் எந்த அவதாரத்தை வணங்குகிறேன் 

என்றால் காளி ஆகாரத்தை(உருவத்தை) வணங்குகிறேன் காளி கருமை நிறம் கொண்டவன். உலகிலுள்ள 

இருளை முழுவதும் தன்னுள் ஆகரித்து வெளிச்சம் பகருகிறவள். அவள் எடுத்த காரியத்தில் வெற்றி தருபவள். 

அவள் மங்கலமானவள். ஆனால் கெட்டவர்களை அழிப்பதில் வல்லவள்.அந்த நோக்கத்தில் 

உறுதியாயிருப்பவள். கபாலங்களை மாலையாக அணிந்திருப்பவள். எந்த விதமான தயையோ 

தாட்சண்ணியமோ காட்டாதவள்.ஆனால் தனது உபாசகர்களிடம் கருணை மிகுந்தவள்.பரமசிவனின் பாதியை 

பெற்று உமையொரு பாகன் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தவள்.அவளே உலக மக்கள் அனைவருக்கும் 

உணவு நல்கும்  அன்னபூரணேசுவரி. அவள் வெற்றியின் தேவி. அவளை வணங்கி நமது பிரார்த்தனையை 

ஆரம்பிப்பதே சாலவும் பொருந்தும்.ஆகவே தேவீ, உன்னை நான் வணங்குகிறேன்.எனது உபாசனையின்

வழியிலுள்ள எல்லா தடங்கல்களையும் நீக்கி, என்னை நிரந்தர வெற்றிக்கு இட்டுச் செல்வாய்.சத்திய 

சாக்‌ஷாத்காரத்திற்கு உதவுவாய்.என் உள்ளேயும் புறமேயுமுள்ள எல்லா எதிரிகளையும் அழிக்க உதவுவாய்.

ஸ்தோத்திரம் 2

ஜய த்வம் தேவி சாமுண்டே ஜய  பூதார்ததிஹாரிணி

ஜய ஸர்வகதே தேவிகாளராத்ரி நமோஸ்துதே!!

 जय त्वं देवि चामुण्डे जय भूतार्तिहारिणि

जय सर्वगते देवि कालरात्रि नमोऽस्तु ते

Jaya Tvam Devi Chamunde Jaya Bhutartiharini

Jaya Sarvagate Devi Kalaratri Namostute ॥

‘ தேவீ, வெற்றி எப்பொழுதும் உன்பக்கம். உன்னை எவராலும் வெல்ல முடியாது. நீ எல்லா பூதப் பிரேத 

பிசாசுகளை அழிக்க வல்லவள். நீ எதையெடுத்தாலும் எப்பொழுதும் வெற்றி காண்பவன்.இரவின் தேவி நீ. 

அப்படிப்பட்ட உன்னை வணங்குகிறேன்” 

பூத பிசாசுக்கள் இந்திரியோத்பன்னங்களான வாசனைகளை குறிக்கிறது. அந்த வாசனைகள் அழிந்தால்தான் 

விருப்பு வெறுப்புக்கள் இல்லாதாகும். அப்பொழுது தான் அஞ்ஞானம் அழிந்து, விவேகம் பிறக்கும்.எது ‘ ஸத்’ 

எது ‘அஸத்’ என்ற பகுத்தறிவு உதயமாகும்.ஆகவே நீ எங்கும் இருக்கிறாயா அங்கு வெற்றி நிச்சயம் 

உண்டு.அப்படிப்பட்ட காள ராத்திரியான உன்னை வணங்குகிறேன்.

இந்த முதல் இரண்டு ஸ்தோத்திரங்களிலும் தேவி காளியை உபாசிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

காளியை வட இந்தியாவில் காலீ என்றும் அழைக்கிறார்கள. 

காலீ என்ற பெயர், அவள் காலத்தையும், மரணத்தையும் வெல்ல அருளுபவள் என்பதால் ஏற்ப்பட்டது. 

இந்த பெயரைக் கேட்டவுடனே சிலருக்கு ஒரு வித அச்சம் உண்டாகலாம்.. காளன் என்னும் சிவபெருமானின் 

துணைவி என்பதால் காளீ என்றழைக்கப்பட்டாள். காளி என்ற பெயர் வடமொழியின் காலா என்ற 

சொல்லிலிருந்து உருவானது. உண்மையில் காலீ என்பதே சரியான உச்சரிப்பு ஆகும். காலீ என்பதன் பொருள் 

காலத்தை வென்றவள் என்பதாகும். மற்றொரு பொருள் கரிய நிறம் கொண்டவள் என்பதாகும்.   

காலீ காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை 

இவற்றிற்கு காரணமும் இவளே;இவற்றை போக்குவதும் இவளே. காலீ நேர்மையின் வடிவம். நாம் 

நேர்மையாக இருந்தால் காலீயை வைத்து யாரும் எவ்வித துன்பங்களையும் நமக்கு செய்ய இயலாது. மாறாக 

யார் துன்பம் செய்ய நினைத்தார்களோ அவர்களே அழிவது நிச்சயம்.

காலீ ஞானத்தின் வடிவம். அறியாமை இருளை போக்குபவள். தன்னை அண்டியவர்களின் பயத்தினை 

போக்குபவள். ஆகவே  காலராத்திரினி என்றும் அழைக்கப படுகிறாள்.எவ்வித துன்பங்களிலிருந்தும் தம் 

பக்தர்களை காப்பவள். கருணையின் வடிவம்.  . காலம் மற்றும் மரணம் இவற்றிற்கு காரணமான தெய்வம் 

ஆவாள். இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்லமுடியும். காலீ ஞானத்தின் வடிவம். 

ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள். கல்வியை அளிப்பவள். துணிவை தருபவள். பயத்தை 

போக்குபவள். நோயிலிருந்து விடுவிப்பவள். நோய்களை போக்குபவள். மரணமிலா பெருவாழ்வு தருபவள்.

அவளை வணங்குவோம்

.

  ஸ்தோத்திரம் 3

மது கைடப வித்ராவி விதாத் வரதே நம:

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ  த்விஷோ ஜஹி!!

मधु कैटभ विद्रावि विधातृ वरदे नमः

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि

Madhu Kaitabh Vidravi Vidhatr Varade Namaḥ

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi ॥

மது கைடபர்கள் போன்ற அரக்கர்களை வதம் செய்த வரதே உன்னை வணங்குகிறேன். தேவி , நீ எனக்கு 

தேஹ பலத்தை தா, உன்னை உபாசிப்பதற்கு.உன்னை உபாசிப்பதன் மூலம் என்னை வெற்றி அடைய 

செய்வாய்.அதன்மூலம் என் பெயரும் புகழும் உலகெங்கும் பரவட்டும்.

மது கைடப வதம் தேவீ மாகாத்மியத்தில் வரும் ஒரு முக்கிய பகுதி. அதை இங்கே நினைவு கூர்ந்து, 

அப்படிப்பட்ட தேவி , நீ எனக்கு மது கைடபர்களை போன்ற அரக்கர்களைப் அழிப்பதற்கு உடல் வலிமையை 

அருளவேண்டும்.மது கைடபர்கள் கர்ணமலத்திலிருந்து உண்டானவர்கள். கரணேந்திரயத்தின் தூண்டுதலால் 

ஜீவாத்மாக்கள் நிறைய துன்பத்திற்காளாகிறார்கள். அப்படிப்பட்ட துன்பங்களிலிருந்து என்னைத் 

காப்பாற்றிக்கொள்ள எனக்கு உடல் வலிமையையும் மனோ வலிமையையும் அருள்வாய்.அதன் மூலம் சத்திய 

சாக்‌ஷாத்காரத்திற்கான முயற்சியில் நான் ஜயம் பெற அருள வேண்டும்.அதன் மூலம- என் வெற்றியின் 

காரணம்- எனக்குண்டாகின்ற புகழ் உலகிற்கு முன்மாதிரியாகக் இருக்கட்டும். ‘வரதே’ என்றழைப்பதன் மூலம் 

கேட்ட வார்த்தைகள் தருபவள் என்று பொருள் படுகிறது.

ஆகவே தேவீ, உன்னை வணங்குகிறேன்..

 ஸ்தோத்திரம் 4

 மஹிஷாஸுர நிர்ணஷி பக்தானாம் ஸுகதா நம:

ரூபம் தேஹி ஜயம்  தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி!

महिषासुर निर्णाशि भक्तानां सुखदे नमः

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि

Mahishasur Nirnashi Bhaktanam Sukhde Namah

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi !

மஹிஷாஸுர மர்ததனம் தேவீ மாகாத்மியத்தில் வரும் இன்னொரு சம்பவம்.அதில் மஹிஷ உருவத்தில் வந்து 

தேவர்களை-நல்லவர்களை துன்புறுத்துஉகிறான் ஒரு அரக்கன் அவனை தேவி வதம் செய்கிறாள்.மஹிஷம் 

என்றால் எருமை மாடு. அது மிகவும் பலம் வாய்ந்தது. ஆனால் புத்தி வளராதது. விளைவுகளைத் பற்றி 

யோசிக்காமல், ஒன்றை நினைத்து விட்டால் அதையே குறியாக குதித்து ஓடி வருவது மஹிஷம்.மனிதனில் 

‘ அஹம்’ பாவம் வேரூன்றிவிட்டால் அவனும் மஹிஷத்தைப் போல் நடந்து கொள்வான். பல துன்பங்களுக்கு 

ஆளாவான். ‘தேவீ,  நீ மஹிஷாஸுரனை வதம் செய்தது போல் என்னுள்ளிருக்கும் அஹம் என்ற மஹிஷத்தைப் 

வதம் செய்வதற்கு அருள் புரிவாய்’. அஹம் அழிவது வரை முக்திக்கு வழி பிறக்காதே. ‘நான்’, ‘ நீ’ என்ற 

எண்ணங்கள் தான் எல்லா விருப்பு வெறுப்புக்களுக்கும் அடிப்படை. அது தான் இன்ப-துன்பங்களுக்கும் 

காரணம்.ஆகவே ‘அஹம் என்ற மஹிஷத்தைப் வதம் செய்வதற்கு தேகபலம் தா, வெற்றிபெற சக்தி 

தா, அதனால் உண்டாகின்ற யஶஸ் மற்றவர்களுக்கு தூண்டுகோலாக இருக்கட்டும்”.

ஸ்தோத்திரம்5

தூமநேத்ர வதே தேவி தர்ம காமார்த்த தாயினி

ரூபம் தேஹிஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி!

 धूम्रनेत्र वधे देवि धर्म कामार्थ दायिनि

रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि

Dhomrnetra Vadhe Devi Dharm Kamarth Dayini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi ॥

சூரியனை தூமகேது  மறைப்பது போல், நமது ஆத்மஞானத்தை அவித்யை எனும் தூம கேது மறைத்து 

விடுகிறது.. நாம் கண் இருந்தும் குருடர்களாகிவிடுகிறோம். ‘ தேவீ, நீ, எப்படி தூம நேத்ரன் என்ற 

அரக்கனைக் அழித்து , தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட கர்மங்களுக்கும் வேண்டிய செல்வங்களை ( 

மனோ பலம், சரீரபலம் முதலியவை ) தருவாயோ அது போல், எனக்கும் அருளுவாய்’


ஸ்தோத்ரம்6

 ரக்த பீஜ வதே தேவீ சண்ட- முண்ட வினாசினீ

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி !

रक्तबीज वधे देवि चण्ड-मुण्ड विनाशिनि

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि॥6॥

Raktbeej Vadhe Devi Chand-Mund Vinashini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi!

தேவியின் ரக்தபீஜ வதத்தையும், சண்டமுணஃட வதத்தையும் கூறி , அது போல் ஒன்றன் பின் ஒன்றாக 

முளைத்தெழும் ஆசைகளை  இல்லாமலாக்குவதற்கு சக்தியை எனக்கு அருள்வாய் தேவீ. ரக்த பீஜனை 

கொல்வது எவ்வளவு கஷ்டமானதோ அதை விட கஷ்டம் இந்திரியங்களாலும், பூர்வ ஜன்ம கர்மங்களாலும் 

உளவான வாசனைகளை அழிப்பதம் , ம அதிலிருந்து உளவாகின்ற ஆசைகளை நாசம் செயவதும் அதற்கு 

தேவியின் அருள் கட்டாயம் தேவை.

அது நல்கும்படி தேவியை வேண்டுவோம்.

ஸ்தோத்ரம் 7

ஶும்பஸ்யைவ நிஶும்பஸ்ய தும்ராக்‌ஷஸ்ய செ மந்திளி

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோதேஹி த்விஷோ ஜஹி!

शुम्भस्यैव निशुम्भस्य धूम्राक्षस्य च मर्दिनि

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि

Shumbhasyaiva Nishumbhasya Dhumrakshasya Che Mardini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi ॥7॥

“தங்களின் பலத்திலும் திறைமையிலும் மிகுதியான நம்பிக்கை வைத்திருந்த சும்ப-நிசும்பர்களை தேவி வதம் 

செய்தது போல் எனது அசட்டு தைரியங்களையும் பொருத்தமில்லாத அஹம்பாவத்தையும் அழித்து எனக்கு 

முக்திக்கு வழி காட்டுவாய், நீ,, தேவீ.அகம்பாவம் அழிய எந்த ரூபம் வேண்டுமோ அதைத் தருவாய், தேவீ.”

இந்த பிரார்த்தனை முரண்பாடான பிரார்ததனையாகத் தோன்றலாம். அகம்பாவம் என்பதே, ஆத்மாவை 

தேகத்துடன் ஐக்கியப்படுத்தி, தேகத்தின் சுகஙங்களையும் துக்கங்களையும் ஆத்மாவின் சுக-துக்கங்களாக 

எண்ணுவது தான்.அப்படியிருக்க, அதை அழிப்பதற்கு ரூபம் தேஹி, தேகம் தேஹி என்றால் முரண்பாடு தானே! 

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் , நமக்கு புரியும், “இகலோக ரூபத்திலிருக்கும் தேகத்திலிருந்து விடுதலை 

அளித்து, உன்னோடு ஐக்கியமாவாதற்கான மனோபலத்தையும், மனபக்குவத்தையும் தா”என்பது தான் இதன் 

உண்மையான பொருள் என்று.”அதற்கு தடையாக இருக்கின்ற எல்லா சும்ப-நிசும்பர்களையும் மற்ற 

அரக்கர்களையும் அழிப்பாய் தேவீ, ”


ஸ்தோத்ரம் 8

 வந்திதாங்க்ரியுகே தேவி ஸர்வ ஸபாஹ்யப்யந்தரே தாயினி

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோதேஹி த்விஷோஜஹி !

वन्दिताङ्‌घ्रियुगे देवि सर्व सौभाग्य दायिनि

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि

Vanditaangghriyuge Devi Sarva Saubhaagya Daayini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi ॥8॥

‘ தேவியின் பத்ம பாதங்களை சர்வரும் வணங்குகின்றனர்.நானும் வணங்குகிறேன். எல்லோருக்கும் சர்வ 

ஐசுவரியங்களையும் நீ அளிக்கின்றாய். அதே போல் எனக்கும் அருளுவாய்’

ஸ்தோத்திரம் 9

அசிந்த்ய ரூப சரிதம் ஸர்வ ஶத்ரு வினாசினீ

ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி! 

अचिन्त्य रुप चरिते सर्व शत्रु विनाशिनि

रुपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि

Acintya Rup Charite Sarv Shatru Vinashini

Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Dvisho Jahi!

‘ யாராலும் நினைத்துப்பார்ககக் கூட முடியாத அழகுடைய தேவீ, எல்லா தடைகளையும் நீக்குபவளே , நீ 

எனக்கு என் இலட்சியத்தை அடைவதற்கு அருளுவாய்”

தடைகள் வெளியேயிருந்தும் வரலாம், நம்முள்ளேயும் முளை விடலாம்.இந்த தடைகள் வாசனை 

ரூபத்திலும் இந்திரிய தூண்டுதலாலும் வரலாம். இரண்டையும் நீக்குவதற்கு தேவி உதவ வேண்டும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s