யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 225

தினமொரு சுலோகம்

நாள் 225

மனம், புத்தி, ஜீவன் எல்லாம் பொய்

யதா ஶிலமயீ கன்யா சோதிதாபி ந நிருத்யதி

ததேயம் கலனா தேஹே ந கிஞ்சிதவபுத்யதே !

यथा शिलमयी कन्या चोदितापि न न्रुत्यति 

तथेयम् कलना देहे न किन्चिदवबुध्यते ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:’ நான் முன்னால் சொன்ன இந்த உள்ளுணர்வு- மேதா சக்தி- 

உயிர்ததெழவில்லையென்றால்,ஜீவனில ஒரு அறிவும் உளவாகாது. வெறும் மனோ விருத்திகளினால் 

உண்டாகின்ற அறிவு ஞானமாகாது ; அது ஸத் ஆகாது.எண்ணங்களுக்கு மதிப்புண்டாவது உள்ளுணர்வு என்று 

சொல்லப்படுகின்ற மேதா சக்தியின் ஒளியில் தான்.வாசனைப்பொருட்கள் வைத்திருக்கும் பாத்திரத்திற்கு 

கிடைக்கும் நறு மணம் அந்த வாசனைப் பொருட்களுடையதல்லவா! இப்படி கடன் வாங்கிய 

புத்திசாலித்தனத்தினால்த் தான் மனத்திற்கும் அனந்தாவபோதத்தின் ஞானத்திலிருந்து ஒரு கடுகளகாவது 

ஞானமுண்டாகிறது.அனந்தமான- எல்லைகளில்லாத- போதத்தின் ஒளியில் மட்டும் தான் மனம் பூரண 

வளர்சசி யடுத்து மலர்நதும் வாசம் வீசும்.

” கல்லில் செதுக்கின நாட்டியக்காரி நாட்டியமாடுவாளா? அதே போல் மனோ விருத்திகளும் அறிவுள்ளது 

போல் தோற்றமளித்தாலும், அவையால் ஒன்றும் தெரிந்துகொள்ள இயலாது.” அப்படி அறிவதற்கு போதத்தின் 

ஒளி அவசியம்.

சுவரில் வரைந்துள்ள போர்ககளக் காட்சிகளில் உண்மையான வீரத்தை காண முடியுமா?பிணத்தை ‘எழுந்து 

நட’ என்று சொன்னால் நடக்குமா? அழகிய சூரியனின் சித்திரம் ஒளி தருமா? அதே போல் ஜடமான மனதிற்கு 

சுயமாக ஏதும் செய்ய இயலாது. பாலைவனத்து கானல் நீர் தாகத்தை தணிக்கும்? சூரியனின் ஒளி பட்டுத் தான் 

பாலைவனத்து கானல், நீர் போன்று பளபளக்கின்றது. அதே போல் மனமும் புத்தியுள்ளதாக தெரிவது 

அனந்தாவபோதத்தின் ஒளியினால் தான்.அது கர்மங்கள் ஆற்றுவதாய் தோன்றுவதும் போதசக்தியினால்த் 

தான்.அஞ்ஞானிகள் எல்லாம் மனதால் தான் நடக்கின்றது என்று நம்புகிறார்கள்.ஜீவன் என்பது வெறும் பிராண 

சக்தி மட்டும் தான்.எவனொருவனது புத்தி பேதலிக்காமல் மனோ சங்கல்பங்களால் வரையறைக்குட்பஆமலும் 

இருக்கிறதோ, அவன் பரமாத்மாவாகிறான்.

தனியொருவன் கற்பனை செய்கின்ற ‘நான்’ ‘ எனது’ என்பன போன்ற எண்ணங்கள் மனோ விருத்திகள் தான். 

போதம் அவையோருக்கு தன்னை இணைத்துக் கொள்ளும்பொழுது ஜீவனும் ஜீவாத்மாவும் 

உருக்கொள்கின்றது.புத்தி, மனம், ஜீவன் என்பவையெல்லாம் பொருளற்ற வார்த்தைகளே.எல்லாமே 

பரமாத்மாவாகிறான் அனந்தாவபோதம் தான் .ஞானிகள் கூட இம்மாதிரி வார்த்தைகளை 

பயன்படுத்துகிறார்களே’ என்று நீ கேட்கலாம்.அதுவும் அனந்தாவபோதத்தை புரியவைப்பதற்காகத் தான். 

அனந்தாவபோதத்தை உணர்ந்த பின் அவைகளுக்கு பயன் இல்லை. ஏனென்றால் அவை எதுவும் 

உண்மையல்ல.உண்மையில், மனமென்பதில்லை, புத்தியென்பதில்லை, ஜீவன் என்பதுமில்லை.ஜீவ 

ராசிகளும் இல்லை. இருப்பது ஒன்றே. அது பரமாத்மா ஒன்று தான்.அது தான் எங்கும் எப்பொழுதும் 

இருந்துகொண்டிருக்கிறது.

ஆத்மா- பரமாத்மா தான் உலகம்.அது தான் காலம்.அதுவே மாற்றமும்.அது மிகவும் சூக்‌ஷமமானதாக 

இருப்பதால் அதன் இருப்பை அறிவது அவ்வளவு எளிதல்ல என்பது உண்மை.அது எதிலாவது 

பிரதிபலிக்கின்ன்றபொழுதோ, எதிலாவது உதயமாகும் பொழுது மட்டும் தான் காண முடிகிறது. உண்மை 

என்பது வார்த்தைகளால் விளக்க இயலாதது..ஆத்மஞானத்தின் வழியாக மட்டும் தான் காண முடியும்.ஆத்ம 

ஞானம் உதயமாகின்ற பொழுது அஞ்ஞானம் காணாமலே போய்விடுகிறது. சூரியன் உதயமாகிவிட்டால் 

இருட்டு காணாமலே போய் விடுகிறதல்லவா ?இந்திரய விஷயங்களையும் அனுபவிப்பதற்காக, புத்தி 

தாற்காலிகமாகவேனும் ஆத்மாவை மறந்து விடுவது போல்,மனோ விருத்திகள் உளவாகின்றபொழுது உண்மை 

மறைந்து விடுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s