லலிதா ஸஹஸ்ரநாமம் 32-38

தேவியின் பஞ்சதசி மந்திரங்களை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.ஒவ்வொரு பகுதியையும் ‘கூட’ என்று 

சொல்வார்கள்.தேவியின் திருநாமங்கள் பதின்மூன்றிலிருந்து இருபத்தியொன்பது வரையான திருநாமங்கள் ‘ 

வாக்பவ கூட’ என்றழைக்கப்படுகிறது.முப்பதிலிருந்து முப்பத்தியெட்டு வரையிலான திருநாமங்கள் ‘ மத்ய 

கூட’ என்றும் முப்பத்தியொன்பதிலிருந்து நாறபத்தியேழு வரையிலான நாமங்கள் ‘ஶக்தி கூட’  என்றும் 

அழைக்கப் படுகின்றன.

வாக்பவ கூட என்ற பகுதியில் தேவியின் கேசாதி பாத வருணனையில் அன்னையின் திருமுகத்தைக் 

குறித்துள்ள வருணனையும்,கழுத்திலிருந்து இடுப்பு வரையான அங்கங்களின் வருணனை மத்ய கூடா என்ற 

பகுதியிலும்,இடையிலிருந்து பாதம் வரையிலுள்ள அங்கங்களின் வருணனை ஶக்தி கூட என்ற பகுதியிலும் 

காணப்படுகிறது.

மத்ய கூட என்ற பகுதி ‘ காமராஜ கூட’ என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இங்கு அன்னையின் 

சிருஷ்டி சக்தி விளக்கப் படுகிறது.

திரு நாமம் 32

ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தா பலான்விதா 

Ratna-graiveya-cintāka-lola-muktā-palānvitā

 रत्न-ग्रैवेय-चिन्ताक-लोल-मुक्ता-पलान्विता 

இரத்தினங்களால் உருவானதும் வைர வைடூரியங்கள் பதித்ததுமான ஹாரத்தை கழுத்தில்  அணிந்து 

கொண்டிருக்கின்ற லலிதாம்பிகையை உபாசிப்பவர்களுக்கு அதற்கான பலன் நிச்சயம் கிட்டும். மனதை 

சஞ்சலங்களுக்கு இரையாக்காமல் அலைய விடாமல் அன்னை தேவி லலிதாம்பிகையின் முழு உருவத்தையும் 

மனதில் இருத்தி தியானிப்பவர்களுக்கு முக்தி நிச்சயம்.மனம் பூராவும் அன்னை நிறைந்திருந்தால், நாம் வேறு 

எதையும் குறித்து சிந்திக்க இயலாதல்லவா?. அங்கு வேறு எதற்கும் இடம் கிடையாது. நாம்  அன்னையிடம் 

ஐக்கியமாக்கி விடுகிறோம். அந்த ஐக்கியத்தில் நாம் இல்லாதாகி, நாம் விடுதலை பெற்று மறைந்து 

விடுகிறோம். இது தான் உண்மையான முக்தி. பரமாத்வான பரமேசுவரி, நம் எல்லோருடைய தாய் 

அவளிலிருந்து உண்டானவர்கள் நாம். அவளிலேயே ஐக்கியமாகிவிட்டால் அவளிலிருந்து நாம் 

வேறல்லமலாகிவிடுகிறோம்.அப்படிப் பட்ட முக்தியை தருபவளே அன்னை லலிதாம்பிகை.

திரு நாமம் 33

காமேசுவர ப்ரேமரத்ன மணி ப்ரதிபண ஸ்தனி

Kāmeśvara-premaratna-maṇi-pratipaṇa-stanī

 कामेश्वर-प्रेमरत्न-मणि-प्रतिपण-स्तनी

அன்னையின் மீது மிகுந்த பிரேமையுடைய காமேசுவரனுக்கு, அவன் செலுத்தும் அன்பிற்கு பிரதி பலனாக தனது 

அமுது சுரக்கும் இரு முலைகளையும் தருபவளே அன்னை லலிதாம்பிகை. தாயின் ஸ்தனங்கள் குழந்தைக்கு 

அமுதூட்ட உயிரூட்டுகின்றன. தாய்ப்பால் இல்லையேல் குழந்தையிடம் ஆரோக்கியம்  இராது. 

ஜீவாத்மாக்களின் இருப்பிற்குக் காரணம் பரமாத்வான அன்னையின் கருணை தான் அதே போல் தன்னிடம் 

அன்பு செலுத்தும் காமேசுவரனுக்கு தனது அமுத கலசங்களை அருளுகிறாள் அன்னை.. அதே போல் 

குழந்தைகளாகிய ஜீவாத்மாக்களுக்கும் கருணை காட்டுகிறாள் அவள் கருணைக்கு அளவு கிடையாது. 

அப்படிப்பட்ட கருணையின் உறைவிடமான ஸதனங்களையுடையவளான அன்னையை வணங்குவோம்.

திருநாமம் 34

நாப்யாலவால ரோமாலி லதா பல குசத்வயா

Nābhyālavāla-romāli-latā-phala-kucadvayā

 नाभ्यालवाल-रोमालि-लता-फल-कुचद्वया 

அன்னையின் நாபியில் முளைத்தெழும் உரோமங்களாகின்ற கொடிகளில் காய்த்து தொங்கும் இரு 

முலைகளாகின்ற கனிகளையுடைய தேவியை தியானிப்போம்.

ஸௌந்தர்யலஹரியில் ஆதி சங்கரன் சொல்வார்:” நிரந்தரம் பிரவஹித்துக்கொண்டிருக்கின்ற கங்கையின் 

மூலஸ்தானமான தேவியின் நாபியிலிருந்து முளைத்து வளரும் கொடியில் காய்த்துத் தொங்கும் கனிகளான 

அன்னையின் முலைகள் பரம சிவனை தன்னிடமே ஈர்த்து ரதி லீலைகளின் மைதானமாக மாறி பிரபஞ்ச 

உற்பத்திக்கு வழி வகுக்கிறது.’

ஸ்திரம் கங்காவர்த: ஸ்தனமுகுலஸாமாவலிலதா

கலாவாலம் குண்டம் குஸுமஶரதேஜோஹுதாபுஜ:

ரஸ்தர்லீலாகாரம்  கிமபி தவ நாஇர்கிரிஸுதே

பிலத்வாரம் ஸித்தயே கிரிஶேனஸ்தம் நயனானாம் விஜயதே(சிவானந்தன் லஹரி)

அதாவது தேவியும் பரம சிவனும் ஐக்கியமாவதால் பிரபஞ்சம் உற்பத்தியாகின்றது.

தவாதாரே மூலஸஹ ஸமயயா லாஸ்யபராய 

நவாத்மானாம் மனயே நவரஸமஹாதாண்டவநடம் 

உபாப்யாமேதாப்யமுதய விதிமுத்திஶ்ய தயயா

ஸனாதனாப்யாம் ஜஞ்ஞாஜனக ஜனனீமத் ஜகதிதம் ( சிவானந்தன் லஹரி)‘ தேவீ,தங்களுடைய மூலாதார சக்கரத்தில் ( நாபீ தடத்தில்) லாஸ்ய பிரியையான( லாஸ்யம் என்பது 

பெண்மை ததும்பும் நடனம்)ஸமயா தேவியும் மஹாபைரவனும் நவரஸங்களும் தரும் ஆனந்த நடனம்  ஆடி 

மஹாபிரளயத்திற்கு பின் பிரபஞ்ச உற்பத்திக்காக ஒன்று சேருகிறார்கள்’.இந்த சிவ சக்தி ஐக்கியம்  கண்டு 

நாம் வணங்குவோம்.

ஆதி பராசக்தியாகியாகிய லலிதாம்பிகை தான் ஜகன்மாதா;அவளிலிருந்து பிரபஞ்சமே உற்பத்தியாகின்றது; 

அவளில்லாமல் நாமில்லை.அவளே நாம்; நாமே அவள்.

திருநாமம் 35

லக்‌ஷ்ய ரோம லாதாரதா ஸமுன்னேய மத்யமா

Lakṣya-roma-latādhāratā-samunneya-madhyamā 

लक्ष्य-रोम-लताधारता-समुन्नेय-मध्यमा

அன்னையின் அரை அது இல்லாததும் போலவே இருக்கிறது. அங்கிருந்து உதயமாகும் 

உரோமங்களினால்த்தான் அப்படி யாருக்கும் பிரதேசமும் இருப்பதே தெரியவருகிறது. அதே போல் தான் 

ஆத்மாவும் இருக்குமிடமே தெரியாது.சத்தியான்வேஷண மர்ககத்தின் வழியாகத்தான் ஆத்மாவை 

கண்டறியமுடியும்.

 

திரு நாமம்் 36

ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா

Stanabhāra-dalanmadhya-paṭṭabandha-valitrayā 

स्तनभार-दलन्मध्य-पट्टबन्ध-वलित्रया 

தேவி லலிதாம்பிகை தனது அரையில் தங்க ஒட்டியாணம் அணிந்துள்ளார்.அன்னையின் பருத்த முலைகளும் 

பாரம் தாங்காமல் இடை வளைந்து மூன்று மடிப்புகளையும் உண்டுபண்ணுகிறது.ஆகவே அன்னையே நீ 

‘ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா’ என்றழைக்கப்படுகிறாய்.

இதே கருத்தை ஆதி சங்கரனின் ஸௌந்தர்ய லஹரியிலும் காணலாம்.எண்பதாவது சுலோகத்தை பார்ப்போம்

குசௌ ஸத்ய ஸ்விதயத்தடகடிதகுரபாஸபிதுரௌ

கஷந்தௌ தோர்முலையே கனககலஶபௌ கலயதா

தவ  த்ராதும் பங்கஆதலமிதி வலக்னம் தனுபவா

த்ரிதாம் ந்த்தம் தேவீ  த்ரிவலி லவலீவல்லீரபிரிவ

‘ அன்னையே, அவ்வப்பொழுது வியர்க்கின்றவையும் உன் மார்கச்சைகளை பிளர்ந்து கொண்டு வெளிவர 

பார்ககின்றவையும், கக்கம் வரை ஆக்கரமித்துக் கொண்டிருப்பவையுமான , தங்க 

கலசங்களையொத்திருக்கும்  உன் மார்பகங்களின் பாரம் தாங்காமல் உன் இடை ஒடிந்துவிடாமலிருக்க காம 

தேவன் தங்க ஒட்டியாணம் போல் மூன்று படிப்புகளையும் உருவாக்கியுள்ளானோ?’

தேவியின் கருணையுள்ளம்  தாங்கும் பாரம் சொல்லி மாளாது. ஏனென்றால் உலக மக்கள் யாவரையும் காப்பது 

அன்னையின் பொறுப்பல்லவா? அவளது இடையிலுள்ள  மூன்று மடிப்புகள் சிருஷ்டி( படைத்தல்), காத்தல், 

அழித்தல் என்ற மூன்று ஆளுமைகளைக் குறிக்கிறது.

திரு நாமம் 37

அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடி

Aruṇaruṇa-kausumbha-vastra-bhāsvat-kaṭītaṭī

 अरुणरुण-कौसुम्भ-वस्त्र-भास्वत्-कटीतटी 

அன்னை தனது அரையில் சிவப்பு நிற பட்டாடை உடுத்தியிருக்கிறாள். ஏற்கனவே சொன்னது போல் சிவப்பு 

கருணை, தயையின் அடையாளம்.அன்னையோடு சம்பந்தப்பட்ட எல்லாமே சிவப்பு நிறத்துடனும் 

உள்ளது.அவளே கருணையின் வடிவம்.ஆகவே தான் அவள் ‘ஶ்ரீ மாதா’ என்றறியப்படுகிறாள்.அவளது 

முத்தொழிலும் – படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றுமே- கருணையை அடிப்படையாகக் 

கொண்டது.லலிதாஸஹஸ்ர நாமத்தை இசைத்த வாக் தேவிகளுள் ஒருவர் அருணா.அருணன் என்றால் 

சூரியன் . சூரியனின் நிறம் சிவப்பு.சூரிய ஒளி எல்லா ஜீவன்களுக்கும் ஜீவச் சக்தியை தருகிறது.ஆகவே சிவப்பு 

நிறம் ஜீவசக்தியைக் குறிக்கிறது.

மற்ற வாக் தேவிகள் வாஸினி, காமேஶ்வரி, ரோஹிணி,விமலா, ஜைனி,ஸர்வேஶ்வரி மற்றும் கோலினி அவர்.

.

திரு நாமம் 38

ரத்ன கிங்கினிக ரம்ய ரஸன தாம பூஷிதா

Ratna-kiṅkiṇikā-ramya-raśanā-dāma-bhūṣitā 

रत्न-किङ्किणिका-रम्य-रशना-दाम-भूषिता 

அன்னையின் ஒட்டியாணத்தில் மணிகளும் இரத்தினங்களும் அலங்கரிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s