47ஆவது திரு நாமம் வரை அன்னை லலிதாம்பிகையின் கேசாதி பாத வருணனை வாக் தேவிகள் நமக்கு
அருளுகிறார்கள். 48 ஆவது சுலோகத்திலிருந்து தேக சௌந்தரியத்தை முழுமையாக அருளுகிறார்கள்
திரு நாமம் 48
மஹாலாவண்யா ஶேவதி:
Mahā-lāvanya-śevadhiḥ
महा-लावन्य-शेवधिः
அன்னை லலிதாம்பிகை ஒரு அழகு பெட்டகம்.அவளுக்கு இணை அவளே. வேறு யாரையும் எதையும் உவமிக்க
இயலாது.
சௌந்தரிய லஹரியில் 12ஆம் சுலோகத்தில் ஆதி சங்கரர் சொல்வார்:
தத்விதீயம் ஸௌந்தர்யம் துஹிநகரிகன்யே துலயிதும்
கவீந்தா: கல்பந்தே கதமபி விரிஞசி ப்ரபுதய:
யதாலோகௌத்ஸுகயாதமரலலனா யாந்தி மனஸா
ததோபஇரதுஷ்ப்ராபயமபி கிரீஶஸாயூஜ்யபதவீம்
தேவீ, இமயவனின் புதல்வியான தங்கள் அழகை வேறு எதனுடனும் உவமிப்பதற்கு இயலாமல் குழப்பம்
அடைகிறார்கள் பிரம்மா விஷ்ணு மற்றும் பெருமைக்குரியவர் கவி சிரேஷ்டர்கள் கூட .தங்கள்
சௌந்தரியத்தை அறிவதற்கு – உணர்வதற்கு அப்ஸரஸ் கள் ஆர்வமுற்று, கடுமை தவமிருந்து பரமசிவனில்
ஐக்கியமாக முயலுகிறார்கள். ஏனென்றால் பரமசிவனை ஒருவனுக்குள்ளேயே தான் தங்கள் சௌந்தரியத்தை
அறியமுடியும்.ஆகவே தங்கள் பதியான பரமசிவனில் ஐக்கியமாகிவிட்டால் தங்களுக்குத் அந்த பாக்கியம்
கிடைக்கும் என்று தேவ ஸ்த்ரீகளான அப்சரஸுகள் எண்ணுகிறார்கள்.அப்படிப்பட்டது உன் அழகு.
திருநாமம் 49
ஸர்வாருணா
Sarvāruṇā
सर्वारुणा
அன்னையே, நீ சம்பந்தப்பட்டு எல்லாமே செந்நிறம் தான் ஏனென்றால் நீயே கருணையின் வடிவமைப்பு சிவப்பு என்றால் கருணை.
சௌந்தரிய லஹரி 93 ஆம் சுலோகத்தில் ஆதி சங்கரர் சொல்கிறார்:
அரால்ப் கேஶேஷுப்ரகிருதிஸரளா மந்தஹஸிதே
கிரீஷாபா சிஸ்த த்ருஷபலதேபா கசடதே
ப்ருஶும் தன்வீ மத்யே ப்ரிதிருரஸிஜா ரோஹ விஷயே
ஜகத்த்ஆதும் ஶம்பாருஜயதி கருணா காசிதருணா
அன்னையே, உன் சுருள் சுருளான கருமை நிறத்துடனும் கூடிய கூந்தலும்,உனக்கே உரித்தான ஸரளமான
புன்னகையும்,தென்மேற்கில் வாகை மலரின் மிருதுத் தன்மையுடையதும் உன் மனமும், பாறை போல் இறுகிய
மார்பகங்களும்,இடையே இல்லாதது போலுள்ள இடையும்,பரந்து விரிந்த மார்பும், நிதமபமும்,ஶம்புவின்
அருணனின் நிறத்தோடு கூடினால் கருணா ஶக்தியும் இந்த பிரபஞ்சத்தை காப்பாற்றுவதற்காக விஜயாஸ்தாதி
செய்துள்ளது.
ஆக ஆதி சங்கரனும் அன்னையின் அருணா நிறம் கருணையின் குறியீடு என்கிறார்.
லலிதா த்ரிஶதியில் 138 ஆம் சுலோகத்திலும்,யஜுர்வேதத்திலும் சுருதிகளிலும் அருணனின் சிவப்பு நிறம்
கருணையின் அடையாளம் என்று கூறப்பட்டுள்ளதை.
.
திரு நாமம் 50
அனவத்யாங்கி
Anavadyāṅgī
अनवद्याङ्गी
குறையஏ இல்லாத அங்கங்களுள்ளவள் அன்னை. அன்னையின் எபடி குறையிருக்க முடியும்? அவளே
பிரம்மமல்லவா? நிர்குண பிரம்மம் ஆக இருக்கும் பொழுது குறை நிறைகளின் இருக்க முடியாது. சகுண
பிரம்மமாக இருக்கும் பொழுது அவள் குற்றமற்றவளாக இருக்கிறாள்.
திரு நாமம் 51
ஸர்வாபரண பூஷிதா
Sarvābharaṇa-bhūṣitā
सर्वाभरण-भूषिता (51)
அன்னை வித விதமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள். அவள் உடலில் ஒவ்வொரு அங்கமும்
ஆபரணங்களால் மூடப்பட்டிருந்தது.காளிகா புராணம் நாற்பது வகை ஆபரணங்களையும்
விவரிக்கிறது.பரசுராம கல்ப ஸூத்திரம் என்பது ஶ்ரீசக்ரபூஜை பற்றி எழுதப்பட்டுள்ளது ஒரு அதிகார பூர்வமான
கிரந்தம்.அதில் தேவியின் இன்னும் நிறைய ஆபரணங்களைக் குறித்துள்ள விவரணங்கள் உள்ளது.லலிதா
த்ரிஶதியில் 140 திரு நாமம் இதையே குறிக்கிறது.
இந்த திரு நாமத்துடன் தேவியின் ப்ரகாச மற்றும் விமர்ச உருவத்தைக் குறித்துள்ள விவரணப்படம்
முடிவுறுகிறது..
.