லலிதா ஸஹஸ்ரநாமம் 39-47

திரு நாமம் 39

காமேஶ ஞாதா ஸௌபாக்ய மார்த்வோரு த்வயான்விதா

Kāmeśa-jñāta-saubhāgya-mārdavoru-dvayānvitā 

कामेश-ज्ञात-सौभाग्य-मार्दवोरु- द्वयान्विता (39)

தேவி லலிதாம்பிகையின் துடைகளின் அழகு அந்த காமேசுவரனுக்கு மட்டும் தான் வெளிச்சம். அது பரம 

ரகசியம்.அவ்வாறு காமேசுவரனுக்கு மட்டும் அறிவான அமைந்த துடைகளுள்ள தேவீ, உன்னை 

வணங்குகிறோம்.

தேவியின் துடைகளின் அழகைக்குறித்து ஆதி சங்கரர் கூறியுள்ளதை பார்ப்போம்.

கரீந்த்ராணாம் ஶுண்டான் கனககதலீகாண்டபடலீம்

உபாப்யாமேதாப்யமுதயமபி ந்ர்ஜித்தி பவதி

ஸுவ்ருத்த்தாயாபயாம் பத்யு:: ப்ரமது கடினப்யாம் கிரிஸுதே 

விதிஞ்ஞே ஜானுப்யாம் விபுதகரிகும்பத்வயமஸி

( ஸௌந்தர்ய லஹரி 82)  

அன்னையே, , கடைமையை எப்பொழுதும் மறக்காததேவீ, தங்கள் துடைகள் , யானைகளின் 

தும்பிக்கைகளையும்,தங்கத்தாலான வாழத்தண்டுகளையும் தோற்கடித்து விட்டு, என்றும் தங்கள் பதியின் முன் 

நமஸ்கரித்ததால் உறுதிப்பட்டுவிட்ட உருண்டு திரண்டு,  தேவேந்திரனின் ஐராவதத்தின் மஸ்தகத்தையும் 

தோற்கடிக்க வல்லவையாக இருக்கின்றன.

இது ‘சக்தி கூட’ திருநாமங்களில் முதலாவது திருநாமம். தேவீ, ஜகன்மாதாவின் சிருஷ்டி சக்தி பரம 

ரகசியமானது; யாரும் அறிந்துகொள்ள முடியாதது என்பதை குறிக்கிறது.அதற்கு ஈடு இணை வேறு கிடையாது.

திரு நாமம் 40

மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா

Māṇikya-mukuṭākāra-jānudvaya-virājitā

माणिक्य-मुकुटाकार-जानुद्वय-विराजिता 

 அன்னை லலிதாம்பிகையின் இரு முழங்கால்கள் இரண்டு பெரிய இரத்தின கற்கள் பதித்த கிரீடங்கள் போல் 

காட்சியளிக்கின்றன. மீண்டும் சிவப்புக் கல் நினைவூட்டுப் படுவதன் மூலம் தேவியின் கருணையையும் நமக்கு 

உணர்த்தப்படும் படுகிறது.

திரு மந்திரம் 41    

இந்த்ரகோப பரிக்‌ஷிப்த ஸ்மாரதூணாபா ஜங்கிகா

Indragopa-parikṣipta-smaratūṇābha-jaṅghikā

 इन्द्रगोप-परिक्षिप्त-स्मरतूणाभ-जङ्घिका 

அன்னையின் கால்கள் மன்மதனின் அம்பறாத் துணி போல் அவனது அம்புகளை தாங்கி நிற்கின்றது.அவ்வளவு 

அழகு வாய்ந்ததாகவும் இருக்கிறது .அப்படி கவர்சசியான கால்களையுடைய தேவியை வணங்குவோம்.

திருநாமம் 42

கூட குல்பா

Gūḍha-gulphā

 गूढ-गुल्फा

அன்னையின் குதியங்கால்கள் உருண்டு திரண்டு ஆனால் அவள் பட்டாடையில் மறைந்திருக்கிறது.

திருநாமம் 43.

கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதான்விதா

Kūrma-pṛṣṭha-jayiṣṇu-prapadānvitā 

कूर्म-पृष्ठ-जयिष्णु-प्रपदान्विता

அன்னையின் பாதங்களின் மேல்பாகம் ஆமையின் புறந்தோடு போல் வளைந்து பளபளப்புடன் அழகாக 

இருக்கிறது.ஆனால் ஆமையின் கடினமான புறந்தோடோடு அன்னையின் பாதங்களை உவமித்ததில் ஆதி 

சங்கரர் கோபம் கொண்டு சொல்கிறார்:

(ஸௌந்தர்யலஹரியில் 83 ஆம் சுலோகத்தில் ஆதி சங்கரன் சொல்வார்):

பராஜேதும் ருத்ரம் த்விகுணஶரகர்பௌ கிரிஸுதே

நிஷஅங்கௌ ஜங்கே தே விஷமவிஶிகே பாடமக்ருதே

யதக்ரே த்ருஶ்யன்தே தஶஶரபலா: பாதயுகலீ-

நகாக்ரசெத்தான: ஸுரமகுடஶாகணைகநிஶிதா: 

” உலக நாயகனான பரமேசுவரனின் இதயத்தை வெல்வதற்காக, அவனை தோற்கடிப்பதற்காக, , பஞ்ச 

பாணங்களையுடைய மன்மதன் ,அவைகளை இரட்டிப்பாக்கி அன்னையே தங்கள் கால்களின் நுனியில் உள்ள 

நகங்கள் என பொய்மைத்தோற்றத்துடன், தேவேந்திரனின் கிரீடத்திலுள்ள வைரங்களை பதித்து, பத்து 

அம்புகளுள்ள அம்பறாத்துணியாக அழகு படுத்தியுள்ளான்”. பத்து அம்புகள் பத்து கால் விரல்களைக் 

குறிக்கிறது.அன்னையின் கால் விரல்களுக்கு கூட பக்தர்களை வசீகரிக்கும் சக்தியுள்ளதாக குறிப்பிடுகிறார் 

ஆதி சங்கரர்

இந் வருணனைகள் சாமுத்ரிகா லக்ஷணத்தையும் ஒத்து போகிறது.

திரு நாமம் 44

நகத்திதி ஸஞ்சன்ன நமஜ்ஐன  தமோ குணா

Nakhadīdhiti-saṃchanna-namajjana-tamoguṇā

 नखदीधिति-संछन्न-नमज्जन-तमोगुणा

‘அன்னையே, உன்னை வணங்குபவர்களின் அவித்யை போக்கி அவர்களுக்கு சத்தியசாக்‌ஷாத்காரம் 

உண்டாவதற்கு அருளுகிறாய்

தேவர்களாயிருந்தாலும் அசுரர்களாயிருந்தாலும் உன் முன்னால் தலை வணங்கும்பொழுது அவர்கள் 

கிரீடங்களிலிருந்து ஒளிரும் பிரகாசமானது ,உன் நகங்களிலிருந்து வீசும் ஒளியின் முன் நிஷ்பிரபமாகிறது..

( ஒளியிழக்கிறது.) அது மட்டுமல்ல, உன் நகங்களிலிருந்து வீசும் ஒளி ஜீவாத்மாக்களிலுள்ள தமோ குணத்தை 

அழிகின்றது.’

தேவி லலிதாம்பிகை தன் கைகளால் ஆசீர்வதிப்பதில்லை. அவள் பாதஸ்பரிசம் ஜீவாத்மாக்களோ 

ஆசீர்வதிக்கிறது.

மற்ற கடவுள்களுக்குள்ளது போல் தேவி பய ஹஸ்தமோ, வரதஹஸ்தமோ காண்பிப்பதில்லை.அன்னை 

லலிதாம்பிகைக்கும் நான்கு கைகளுள்ளன. ஆனால் ஒவ்வொரு கைகளிலும் ஒவ்வொரு  தேவி 

அமர்ந்திருக்கிறார்கள்என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளதை ஞாபகப்படுத்திப் கொள்வது நல்லது.

ராகஸ்வரூபா பஶாத்யா- அசுவாரூடா தேவி ( திருநாமம் 8)

க்ரோதாகாரங்குசோஜ்வலா-சம்பத்கரீ தேவி(திருநாமம் 9)

மனோருபேக்‌ஷு- கோதண்டா- ரூப மந்திரிணி அல்லது சியாமளா தேவி(திருநாமம் 10)

பஞ்சதன்மாத்ர ஸாயளகா-வராஹி தேவி( திரு நாமம் 11)

தேவி ஆசீர்வதிப்பதில்லை அருளுவதும் பாதஸ்பஇசத்தினால் தான்.

திரு நாமம் 45

பத த்வய ப்ரபா ஜால பராக்ருத ஸரோருஹா

Pada-dvaya-prabhā-jāla-parākṛta-saroruhā

 पद-द्वय-प्रभा-जाल-पराकृत-सरोरुहा 

அன்னை லலிதாம்பிகைக்கு நான்கு பாதங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவைகள் முறையே ஶுக்ளா, 

ரக்தா,மிஶ்ரா, மற்றும் நிர்வாணா ஆகும். முதல் இரண்டு பாதங்கள் ஆக்ஞா சக்க்ரத்திலும்,மூன்றாவது இதய 

சக்கரத்திலும், நான்காவது ஸஹஸ்ரார சக்கரத்திலும் நிலை கொள்கின்றன.இந்த நான்கு பாதங்களும் 

முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்,மற்றும் சதாசிவன் என்ற நான்கு தேவர்களையும் ஆளுகிறாள்.இந்த நான்கு 

பாதங்கள் முதல் மூன்று  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் கர்மங்களையும் 

நான்காவது முக்தி தாயகத்தையும் குறிக்கிறது.

ஸௌந்தரிய லஹரி  இரண்டாம் சுலோகம் கூறுகிறது:

தனியாம்ஸம் பாஸுரன் தவ சரண பங்கேரூஹபவம்

விரிஞசி: ஸஞ்சின்வன் விரசயதி  லோகானுவிகலம்

வஹத்யேனம் ஶௌரி: கதம்பமாக ஸஹஸ்ரேண ஶிரஸாம்

ஹராதி: ஸம்ஷுகதைனம் பஜிதி பஸித்தேதுலன விதிம்

அன்னையே, தங்களின் பாத தூளிகளில் ஒரு சிறு துளியும் கொண்டு பிரம்மா இந்த பிரபஞ்சங்களை எந்த 

குறையுமில்லாமல் சிருஷ்டிக்கிறார்.விஷ்ணுவோ அந்த பாத தூளியின் பலத்தாலும் இந்த பிரபஞ்சங்களை 

தனது ஆயிரம் மலைகளிலும் தாங்கி நடத்துகிறார்.ஹரனாகட்டும் அந்த தூசு இன்னும் பொடியாக்கி பஸ்மமாக 

தன் உடல் முழுவதும் பூசிக்கொண்டு மகிழ்கிறான்.

மூன்றாம் சுலோகத்தில் ஆதி சங்கரர் கூறுகிறார்:

அவித்யாநாமந்திமிர மிஹிர த்வீபநகரீ

ஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதீத்தரீ

தரித்ராணாம் சிந்தாமணி குணனிகா ஜன்மஜலதௌ

நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி

தாயே, உனது பாததூளிகள் அஞ்ஞானிகளின் அவித்யை அழித்து, அவர்களது உள்ளங்களிலுள்ள இருளை 

போக்கி, ஞான சூரியன் பிரகாசிக்கும் ஒளி மிகு நகரமாக மாற்றி விடும். அஞ்ஞானம் விலகி முக்தி பெறுவர்கள் 

உன்னை வணங்குபவர்கள்.மூடர்களுக்கு, தூய புத்தியுடைய, பூங்கொத்திலிருந்து அருவி போல் கொட்டுகிற 

தேனருவி போலவும், ஏழைகளுக்கு தேவையான எல்லாவற்றையும் வழங்குகின்ற சிந்தாமணி போலவும்,சம்சார 

சாகரத்த் கிடந்து உழலுபவர்களை  தன் தமஷ்டரங்களால் தாங்கி நிற்கின்ற  விஷ்ணுவின் வராஹ அவதாரம் 

போலவும் உன் பாத தூளிகள் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

 த்வதினய: பாணீப்யாவரதோ தைவதகணம:

த்வமேகா நைவாஸி ப் ரகடித வராப்யதபினயா,

பயாத்த்ராதும் தாதும்  பலமபி ச  வாஞ்சாஸமதிகம

ஶரணேய லோகானாம் தவ ஹி  சரணேவவ நிபுணௌ

எல்லா தேவதைகளும் அபய – வரத ஹஸ்தங்களை காண்பித்து அனுக்ரகிக்கிறார்கள். பிரபஞ்சத்திலுள்ள 

எல்லா ஜீவராசிகளுக்கும் அபயம் நல்குகின்ற தேவீ, தாங்கள் மட்டும் தான அம்மாதிரி சேஷ்டைகள் எதுவும் 

காண்பிக்காமல் தங்கள் சரணங்களை அபயம் அடைகிறவர்களுக்கு,கேட்பதிலும் அதிகம் 

வரங்களைஅளிக்கிறீர்கள். அவ்வளவு கருணை உள்ளம் கொண்டவள அன்னை என்கிறார் ஆதி சங்கரர்..

திரு நாமம் 46

ஸிஞ்ஞன மணி மஞ்சிர மண்டித ஶ்ரீபதாம்புஜா

Siñjāna-maṇi-mañjīra-maṇḍita-srīpadāmbujā

 सिञ्जान-मणि-मञ्जीर-मण्डित-स्रीपदाम्बुजा (46)

பல தப்பட்டு உயர்த்த ரக் இரத்தினங்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ள கொலுசுகளை அணிந்திருக்கிறார், 

அன்னை லலிதாம்பிகை.

திரு நாமங்கள் 43 லிரிந்து 46 வரை தாயின் கால்களையுடைய விவரிக்கின்றன. பாதங்களை இவ்வளவு 

வருணனைகளுக்கெல்லாம்்அப்பாற்பட்டவளான பாய்க்கனூர் இருக்கும்பொழுது , அன்னையின் முழு 

உருவத்தையும் வருணிப்பதற்கு மனிதர்களுக்கு வார்த்தைகளும் கிடைக்குமோ! இவ்வாறு அன்னையின் 

பிரகாச விமரிச மஹா மாயா ஸ்வரூபிணியின் உருவத்தை வாக் தேவதைகள் வருணித்துள்ளார்கள்.
திரு நாமம் 47

மாராலி மந்த கமனா

Marālī-manda-gamanā

 मराली-मन्द-गमना

அன்னையின் நடை அன்ன நடை என்று வாக்தேவதைகள் கூறுகிறார்கள்.இருந்தாலும் அன்னையின் நடை 

எதோடும் உவமிக்க இயலாத்து என்பது தான் உண்மை.

ஸௌந்தரிய லஹரி  91 வது சுலோகத்தில் ஆதி குரு கூறுகிறார்:

பதான்யாஸ க்ரீடாபரிசயமிவாரப்தமனஸ:

ஸ்கலந்தஸ்த கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி

அதஸ்தஷாம் ஶிக்‌ஷாம் ஸுபகமணிமஞ்சீரரணித

செலாதாசக்ஷணம் சரணகமலம் சாருபரிஸ்த

நளின நடை நடக்கும் அன்னையே, தங்கள் வீட்டினுள் அன்னப் பறவைகள் தங்களைப் போல் நடக்க முயற்சி 

செய்து, அடி பிறழும்போது நடை  பயிற்சியை நிறுத்தாமல் தொடருகின்றன. அதனால் தானோ தங்களின் 

இரத்தின கொலுசுகள் அசையும்பொழுது உளவாகும் ஓசைகள் மூலம்  அவைக்கு நளின நடைக்கான 

குறிப்புகளை கொடுக்கின்றயோ?

இந்த நாமத்துடன்  பஞ்சதசி மந்தரத்தின் ‘ சக்தி கூடா’ முடிவுறுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s