யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 229

தினமொரு சுலோகம் 

நாள் 229

ஆத்மாவும் மனமும்

ஆத்மனோ ஜகதஶ்சாந்தர் த்ருஷ்டத்ரிஶ்யதஶாந்தரே

தர்ஶநாக்யே ஸ்வமாத்மானம் ஸர்வதா பாவயான்பவ!

आत्मनो जगदश्चान्तर् द्रिष्ट्यद्िश्य दशान्तरे 

दर्शनाख्ये स्वमात्मानम् सर्वदा भावयन्भव।

வஸிஷ்டர். தொடர்ந்தார்: புத்தி வளராதவர்களுக்கு ஆன்மீகஞானத்தை ஊட்ட நினைப்பவர்கள் ஒரு சிறிய 

குடையினால் ஆகாயத்தை மறைத்து விடலாம் என்று எண்ணுபவர்களே! ஏனென்றால் விலங்குகளைப் போல் 

வாழ்கின்றவர்களால் உயர்ந்த நிலையிலுள்ள தத்தவங்களை புரிந்து கொள்ள முடியாது என்பதில் எள்ளளவும் 

சந்தேகம் வேண்டியதில்லை.மனது என்கின்ற கயிற்றால் கட்டப்பட்டு அவர்கள் மேய

விடப்பட்டுள்ளார்கள். தங்கள் மனமென்ற மாயையில் கட்டப்பட்டு  அஞ்ஞானம் எனும் புதைகுழியில் புதைந்து 

போவதைக் கண்டு கற்களும் கண்ணீர் விடும்.ஆகவே ஞானிகள் அம்மாதிரி மனக் கட்டுப்பாடு 

இல்லாதவர்களுக்கு ஆத்ம வித்யை கற்றுக் கொடுக்க முயல மாட்டார்கள்.

ஆனால் மனக்கட்டுப்பாடு நேடி, ஆத்மவிசாரத்திற்கான பக்குவமடைந்தவர்களுக்கு துக்க நிவுருத்தி 

கிடைப்பதற்கு மகான்கள கண்டிப்பாக உதவவும்  செய்வார்கள்

இராமா, மனதிற்கு இருப்பு கிடையாது.தேவையில்லாமல் அதன் இருப்பை உண்டு பண்ணி 

துன்பபடாதே.ஏனென்றால் அது ஒரு பிசாசு.அது நம்மை அழித்து விடும்.ஆத்மாவை மறந்து விட்டோமென்றால் 

மனம் உண்டு என்று பொருளாகிறது.அதைக் குறித்து யோசித்துக் கொண்டேயிருந்தான் அது வளர்நது  

பெரிதாகிப் கொண்டேயிருக்கும்.ஆகவே அதைக் குறித்துள்ள சிந்தைகளை விட்டு விடு.

உன்னில் வஸ்து போதம் – வெளிப் பொருட்களைக் குறித்துள்ள அறிவு உதயமாகும் பொழுது நீ 

வாசனைகளுக்கு அடிமையாகிவிடுகிறாய்.அது தான் பந்தம். அதுவே பந்தனம்.இந்த வாசனைகள் என்ற 

பந்தங்கள் இல்லாதாவது தான் முக்தி.அதாவது மனம் இல்லாத நிலை. 

இயற்கையின் குணநலன்களுடன் உண்டாகும் தொடர்பு பந்தங்களையும் உளவாக்குகின்றது.அந்த தொடர்பு 

அறுத்துவிட்டால் முக்தியை நோக்கி முன்னேறலாம்.

நீ எந்த வழியை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

‘ நான் அதுவல்ல ‘, ‘ நான் இதுவல்ல’,( நேதி, நேதி) என்று விசாரமார்ககத்தில் சென்று உன்னையே நீ

அறிந்து, உணர்ந்து, அனந்த ஆகாயம் போன்று சஞ்சலமேதுமில்லாதவனாக இரு.’ ஆத்மா’ ‘ பிரபஞ்சம்’ 

என்ற இரட்டை மனோபாவத்தை உண்டு பண்ணுகிற மாசடைந்த சிந்தைகளை கைவிடு.

‘ ஆத்மா என்ற திருஷ்டாவிற்கும்( காண்பவனுக்கும்) உலகம் என்ற திருசியத்திற்கும் ( காட்சிக்கும்) இடையில் 

நீ ‘காண்பது’ என்ற திருஷ்டியாக இருக்கின்றாய். இந்த உண்மையின் சாகஷாத்காரம். உன்னில் எப்பொழுதும் 

நிறைந்திருக்கட்டும்.’

அனுபவிக்கின்றவனுக்கும் அனுபவத்திற்கும் இடையில் நீ நிற்கின்றாய்.இந்த உண்மை உணர்த்துவது  தான் 

ஆத்ம ஞானம்.அதில் அசையாமல் உறுதியாக நில்.

இந்த ஆத்மாவை தவிர்த்து வேறு ஒரு பொருளைக் குறித்து சிந்திக்க ஆரம்பிக்கின்ற பொழுது நீ மனமாக 

மாறுகிறாய். அதாவது ‘ விஷயி’ ஆகிவிடுகிறாய். அதனால் துன்பத்திற்கான ஆளாகிறாய். ஆத்ம 

வித்யையிலிருந்நது  மாறுபட்டது மனம். அது தான் துன்பத்தின் உறைவிடம்.

‘எல்லாம் ஆத்மாவே’ என்ற உணர்வு உண்டாகிவிட்டால்,மனமில்லை, விஷயமில்லை, விஷயி 

இல்லை.எண்ணங்களில்லை.

‘ நான் இந்த சரீரம்’ என்று எண்ணி விட்டாலோ ‘ மனம்’ உண்டாகிறது.அது துன்பமயமானதாகவும் 

இருக்கிறது.

‘ நான் ஆத்மா; நான் ஜீவனோ, சரீரமே மற்ற எந்த வஸ்துவோ அல்ல; ஏனென்றால் அவை எதுவும் உண்மையில் 

இல்லை.’

இந்த உண்மை புரிந்துவிட்டால்,மனம் காணாமலே போய்விடுகிறது; பரமானந்தம் தான் பிறகு.

‘ இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஆத்மா தான்.’ என்ற உண்மையின் வெளிச்சத்தில் மனமென்ற இருளிற்கு 

இடமில்லை.மனமெனும் நாகம் நம்மை பிடித்துக்கொண்டிருக்கும்பொழுது தான் பயம் உண்டாகிறது.யோக 

சாதனைகளை மூலம் மனோ நாசம் சம்பவித்தது் விட்டால் பயத்திற்கும் எங்கே இடம்?
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s