யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 230

தினமொரு சுலோகம்

நாள் 230

ஆசை தான்  நாசத்திற்கு விளை நிலம்

அத்யைஶைவாத்தி மாம்ஸாஸ்திருதிராதி ஶரீரகாத் 

மனோபிலவிலீனைஷா த்ரிஷ்ணாவநஶ்யநீ ந்ருணாம்!

अद्यशैवात्ति मांसास्थिरुधिरादि शरीरकात्

मनोबिलविलीनैषा त्रुष्णावनशुनी न्रुणाम् !

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” ஆத்மா தானாகவே – எந்தவித காரணவுமில்லாமல்- தன்னை மறந்து, தன் 

சொரூபத்தை மறந்து, பிரபஞ்ச வஸ்துக்களுடனும், அவை நல்குகின்ற அனுபவங்களுடனும் 

ஒன்றிப்போய்,மாசடைகின்றது.அப்பொழுது அங்கு ஆஸக்தி உளவாகின்றது.மேலும் மேலும் 

அனுபவிக்கவேண்டுமென்ற ஒரு உந்துதல் மாயா மயக்கத்தை ஊக்குவித்து,தீவிரமாக்குகின்றது.விசுவ 

பிரளயத்தைக் வேண்டுமென்றால் சிவன் முதலிய தேவர்கள் எதிரக்கொண்டு சமாளித்திருக்கலாம். ஆனால் 

ஆசை எனும் அக்னியை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு யாராலும் அவ்வளவு எளிதாக இயலாது.

இராமா,இவ்வுலகில் நிகழ்ந்துள்ள எல்லா துன்பங்களும் கஷ்டங்களும் ஆசையினாலுண்டானது தான்.

” கண்ணுக்குத் தெரியாமலே இருந்து கொண்டு , ஆசை எனும் மாயப் பிசாசு,சரீரத்திலுள்ள மாமிசம் – 

இரத்தம் முதலிய எல்லாவற்றையும் கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் உண்டு களிக்கின்றது.”

ஒரு சில நொடிகளுக்கு அது அடங்கிவிட்டது போல் தோன்றினாலும், அடுத்த நொடியிலேயே அது மீண்டும் 

உயிர்ப்பெற்று , வளர்நது, பெரிய உருவமாகிவிடுகிறது.ஆசையின் வலையில் சிக்கி மனிதன் வலுவிழந்து, 

ஒளியிழந்து, பரிதாபமான நிலைமையில், கேடுபயக்கும் மனப்பாங்குடன் மாயாமயக்கத்தில் 

வாழ்கிறான்.ஆனால் இந்த ஆசைகள் அழிந்துவிட்டாலோ ஜீவாத்மா மாசற்றதாய் தெய்வீக குணங்கள் 

நிறைந்தவனாகிறது.

அஞ்ஞானியின் இதயத்தை மட்டும் தான் ஆசையின் மாயக்கரங்கள் எட்டிப் பிடிக்கின்றன.

விலங்குகள் உணவின் மீதுள்ள ஆசையால் வேடன் விரித்த வலையில் சிக்குவது போல் , மனிதாத்மா 

ஆசையின் பின்னால் ஓடி ஓடி நரகத்தில் வாழ்கிறான்.முதுமையில் விளையும் பார்வையின்மை கூட, 

ஆசையினால ஒரு நொடியில் உளவாகும் மயக்கத்தின் அளவு கேடு விளைவிக்காது.ஆசை அவனை சிறுமைப் 

படுத்தி மானபங்கப் படுத்துகின்றது.

பகவான் விஷ்ணு கூட மகாபலியிடம் யாசிக்கச் சென்ற பொழுது குள்ளமான வாமன உருவத்தில்த் தான் போக 

வேண்டி வந்தது.

ஆகவே ஆசயை அருகே நெருங்க விடாமல் விலக்கியே வைக்க வேண்டும்.அதை முழுவதுமாக 

கைவிடவேண்டும்.மனிதனின் வீழ்ச்சிக்கு காரணமே ஆசை தான்.

ஆனால், இந்த ஆசையெனும் உத்வேகத்தால்த்தான் சூரியன் உதிப்பதும் ஒளி உமிழ்வதும். அதே 

காரணத்தினால்த் தான் காற்று வீசுவதும் மலைகள் நிலைகொள்வதும், பூமி எல்லா உயிரினங்களுக்கும் 

பாதுகாப்பாக இருப்பதும். ஏன், இந்த மூவுலகங்களும் இருந்து கொண்டிருப்பதுடன் கூட  ஆசையின் 

உத்வேகத்தால்த்தான் தான்.எல்லா உயிரினங்களையும் இணைப்பது பாசக்கயிறெனும் ஆசை தான்.எந்த 

கயிறை வேண்டுமானாலும் அறுத்து விடலாம் ஆனால் பாசக்கயிற்றால் அறுப்பது மட்டும் அவ்வளவு எளிதல்ல.

ஆகவே இராமா, எல்லா விதமான மனோ சங்கல்பங்களையும் கைவிட்டு,சிந்தைகள் கற்பனைகள் 

எல்லாவற்றையும் கைவிட்டு,நீ இன்றே ஆசையிலிருந்து விடுபடு.கற்பனைகளும், சிந்தைகளும், 

எண்ணங்களுமில்லை என்றால் மனமும் கிடையாது… 

முதலில்,’ நான’ ‘ நீ’ ‘ அது’ என்ற எண்ணங்களை மனதிலிருந்து துடைத்தெறிந்து விடு.ஏனென்றால் 

இம்மாதிரி எண்ணங்கள் உளவாக்குகின்ற மனோ விருத்திகள் தான் ஆசைகள், ஆஸக்திகள்.அம்மாதிரி 

மனோவிருத்திகள் உண்டாகமலிருந்தால் நீயும் ஞானியாக விடுவாய்.ஆசையும் அகங்காரமும் இரண்டில்லை. 

அவை ஒன்றே! எல்லா பாப கர்மங்களுக்கும் உறைவிடம் அதுவே தான்.

இராமா,ஞானமெனும்- விவேகமெனும் வாளால் அஹங்காரத்தின் வேரை அறுத்து, பயத்தை அழித்து விடு. நீ 

முக்தனாகி விடுவாய்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s