யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 233

தினமொரு சுலோகம்

நாள் 233

பிரம்மத்திற்கு ஏது முக்தி?

வயம்  து வக்தும் மூர்க்காணாமஜிதாத்மீய சேதனாம்

போககர்தமமக்நானாம் ந  வித்யபிமதம் மதம் !

वयम्  तु वक्तुम् मूरखाणामजितात्मीय चेतनाम्

भोगकरदममग्नानाम् न  विदयोअभिमतम्  मतम् !

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” முக்தனான பிறகு முனிகள் தனக்கு எந்த விதமான விருப்பமுள்ளவை 

இல்லையென்றாலும் , கடந்தகால- நிகழ்கால- வருங்கால  நிகழ்வுகளை ஆர்வத்துடன் 

காண்கிறார்.எப்போதும் பொருத்தமான கர்மங்களில் ஈடுபட்டுப கொண்டு , மகிழ்வுடன் ஒரு நடு நிலையான 

வழியை பின்பற்றி தான்  எந்த  கர்மத்திற்கும் கட்டுபடாதவனாகவனாக வாழ்கிறார்.எந்த விதமான 

வாசனைகளுக்கும் கற்பனைகளுக்கும் ஆட்படாமல் சுதந்திரமானவனாக, வாழ்கிறார்.செல்வசெழிப்பாக 

அமைகிறது  அவரது வாழ்வு.அது தன் பரமபதம். இந்த உலகில் நிகழ்பவை எதுவும் அவரை 

பாதிப்பதில்லை.அவர் அவைகளில் எந்தவிதமான மகிழ்ச்சியோ, துயரமோ கொள்வதில்லை.மிகவும் 

இக்கட்டான நிலைமைகளில் கூட அவர் எந்த பாரபட்சமான எண்ணங்களுக்கும் ஆட்படுவதில்லை.ஆனால் 

கிருபையும், கருணையும் அவரது உடன் பிறந்த குணங்களாக இருக்கின்றன.காணப்படுகின்ற உலகம் அவரை 

பாதிப்பதேயில்லை.

அவரிடம் கேள்விகள் கேட்டால் பொருத்தமான எளிய பதில்கள் கிடைக்கும்.நாம் அவரிடம் எதுவும் 

பேசாவிட்டால் கூட மௌனம் தான் அவரது இயற்கை குணமாகவிருக்கும்.அவருக்கு தேவை எதுவும் 

கிடையாது.எதனிடமும் வெறுப்பும் கிடையாது.உலகம் அவரை துன்ப படுத்துவதேயில்லை.எல்லோருக்கும் 

நன்மை விளைவிக்கின்ற கர்மங்களை மட்டுமே அவர் ஆற்றுகின்றார்.அவரது விளக்கங்கள் நம்பத் 

தகுந்தவையாக இருக்கும்.எது உசிதம், எது உசிதமில்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.மற்றவர்கள் 

எப்படி விஷயங்களை அணுகுகிறார்கள் என்பது அவருக்கு தெளிவாகத் தெரியும்.பரம சத்தியத்தில் உறுதியாக 

நிலை கொண்டு,மிகவும் சாந்தமும்,குளிர்மையுடனும்அவர் உலகை கருணாமயனாய் பார்க்கிறார்..

இவ்வாறிருக்கும் ஜீவன்முக்தர்களின் வாழ்க்கை. ( பகவான் இரமணரின் வாழ்க்கையை நேரில் 

அனுபவித்தவர்களுக்கும் மற்றவர்களிடமிருந்து கேட்ட அறிந்தவர்களுக்கும் புரியும் ‘மேற்கூறிய 

இலக்கணங்களை பகவானுக்கு எப்படி மிகவும் பொருத்தமாக இருந்தன’ என்று.)

” மனக் கட்டுபாடு கைவராதவர்களுடைய- அஞ்ஞானிகளுடைய இந்திரிய சுகானுபவங்கள் எனும் சேற்றில் 

புதைந்து கிடப்பவர்ளின் மனோ விகாரங்களை நம்மால் விவரிக்க இயலாது.”

அவர்களுடைய கவனம் முழுவதும் சிற்றின்பங்களிலும் லௌகீக செல்வங்களை சேகரிப்பதிலும் தான் 

இருக்கும்.

அதே போல் இன்ப- துன்பங்கள் கலந்த அனுபவங்களை அளிக்கின்ற யாக கர்மங்களைக் குறித்தும் நம்மால் 

சொல்ல முடியாது.

இராமா, எல்லையற்ற, சமன் நிலையுடன், உறுதியாக, எல்லா வரையறைகளையும் குறைபாடுகளையும் 

கைவிட்டு, வாழ்வாய். உள்ளில் எந்த விதமான ஆசைகளும் இல்லாமல்,எதிர்பார்பபுக்களும் இல்லாமல்,புற 

உலகில் ஆற்ற வேண்டிய கர்மங்களை செவ்வனே செய்வாய். எல்லாவற்றையும் ஆராய்ந்து, 

எல்லையில்லாதவற்றை, அழிவில்லாதவையை மட்டும் காண்பாய்.அந்த அனந்த சத்தியத்தில் மனதை 

உறுதியாக நிறுத்தி வாழ்வாயாக.

‘ உள்ளில் எதிர்பார்பபுக்கள் எதுவுமில்லாமல்’ என்றால் வெளி உலகிற்கு மற்றவர்களைப் போல் 

தோற்றமளிப்பபது ,ஆனால் தனக்குள்ளே முக்தனாக என்று பொருள்.

‘ நான் இதை செய்கிறேன்’ என்ற எண்ணங்களெதுவும் இல்லாமல் பலவிதமான கர்மங்களையும் 

ஆற்றுவாய்.அவ்வாறு ‘ அஹங்காரம்’ கொஞ்சம்  கூட இல்லாமல் வாழ்வாயாக.

உண்மையில் ‘ பந்தனம்’ என்பது சத்தியமில்லை. ஆகவே ‘ முக்தி’ என்பதும் உண்மையில்லை..அதுவும் ‘ 

இல்லாத’ ஒன்று தான்.இந்த திருசிய பிரபஞ்சமோ ஒரு மாயாவியின் கண்கட்டு வித்தை தான்.அதில் ஸத் 

இல்லை.

எங்கும் நிறைந்திருக்கும் அனந்தாத்மாவில்- பரபிரம்மத்தை யாரால்- எதால் கட்டுப்படுத்த முடியும்? 

எப்பொழுதும் சுதந்திரமாக இருக்கும் பிரம்மத்திற்கும் எதிலிருந்து முக்தி? இம்மாதிரி 

மனக்குழப்பங்களுக்கெல்லாம் காரணம் உண்மையை அறியாமலிருப்பது தான்.அஞ்ஞானம் அதாவது அவித்யை 

தான்.அவித்யை நீங்கி ஞானம் உளவாகும் பொழுது இந்த குழப்பங்கள் தீரும் தெளிவு பிறக்கும்.கயிற்றில் 

கண்ட நாகம் ஒளி வந்தவுடன் காணாமலே போவது போல் மனக் கலக்கங்களும் ஒரு நொடியிடையில் 

மறைந்து போகின்றது.ஒருமுறை அது கயிறு தான் என்று உணர்ந்து விட்டால் பிறகு தாகத்தைத் காண 

முடியாது. பிரம்மசத்தியத்தை உணர்ந்து விட்டால் மாயையிலிருந்து விடுபட்டு விடுகிறோம். அது தான் முக்தி.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s