யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 234

தினமொரு சுலோகம்

நாள் 234

எல்லோரும் எல்லோருக்கும் பந்துக்கள்தான்!

ஸுபந்து: கஸ்யசித்க: ஸ்யாதிஹ நோ கஶ்சிதப்யரி:

ஸதா ஸர்வே ச ஸர்வஸ்ய ஸர்வம் ஸர்வேஶ்வரேச்சையா

सुबन्धु: कस्यचित्क: स्यादिह नो कश्चिदप्यरि:

सदा सर्वे च सर्वस्य सर्वम् सरवेश्वरेचचया!

வஸிஷ்டர்தொடர்ந்தார்: ” இராமா, நீ ஞானி! அஹங்காரம் ஏதும் இல்லாமல் ஆகாயம் போல் மாசற்றவனாக 

இருப்பாய்!’ அஹம்’ என்ற எண்ணமேயில்லையென்றால் ‘ இவர்கள் என் பந்துக்கள்’ என்ற எண்ணமும் 

எழாது.ஆத்ம சொரூபத்தில் அம்மாதிரி எண்ணங்கள் முளைவிடவே  விடாது.சுக-துக்கங்கள், நல்லது-

கெட்டது என்ற எண்ணங்கள் எதுவுமே கிடையாது.இந்த திருசிய பிரபஞ்சம் உளவாக்கின்ற பயமோ 

மயக்மோ உன்னை பாதிக்காமலிருக்கட்டும்.’என்றுமே பிறவாதவனுக்கு”( அஜன) எங்கிருந்து பந்துக்கள் 

வருவார்கள்? பந்துக்களினாலுண்டாகின்ற துன்பங்கள் எங்கிருந்து வரும்? நீ இதற்கு முன் ‘ யாரோ’வாக 

இருந்தாய்; இன்று யாராகவோ இருக்கிறாய்; நாளை வேறு யாராகவோ இருப்பாய்.உன் பந்துகளும் இந்த 

நியதிக்குட்பட்டவர்கள் தான்.இந்த உண்மையை உணர்ந்து விட்டால் உனக்கு மாயாமயக்கங்களிலிருந்து 

விடுதலை கிடைத்து விடும்.இதற்கு முன் நீ இருந்திருக்கிறாய்; இப்பொழுது இருக்கிறாய்;ஆனால் உனக்கு 

முக்தி கிடைத்து விட்டால் நீ இருக்கமாட்டாய்.அதில் வருந்துவதற்கு ஒன்றுமில்லை. அதன் பொருள்  இந்த 

மாயாலோகம் இனி கிடையாது என்பது தான்.ஆகவே இந்த உலகிலுள்ள எதைத் பற்றியும் நீ கவலைப் பட

வேண்டியதில்லை.அப்படி கவலைப் பட்டால் அது முட்டாள்த்தனமே! உசிதமான கர்மங்களில் ஈடுபட்டு 

எப்பொழுதும் மகிழ்சசியுடன் இருப்பது தான் விவேகம்.

ஆனால் இராமா, மிகையான சந்தோஷத்திலோ, துயரத்திலோ நீ உன்னை இழக்கலாகாது..மனதை சமன் 

நிலையில் வைத்துக் கொள்வாய்.  மிகவும் சூக்‌ஷமமானதும், என்றும் மாசற்தும்,எனறுமே அழிவில்லாததுமான 

ஒளி நீ.இந்த திருசிய பிரபஞ்சம் உண்டாவதுதும், இருப்பதும் அழிவதும் அஞ்ஞானிக்குத் தான் 

உண்மையென்று  தோன்றும்..ஞானிக்கு அவையெல்லாம் வெறும் மாயை தான்.பிரபஞ்சத்தின் இயற்கை குணம் 

துன்பமேயாகும்.அஞ்ஞானம் அதை உரமிட்டு வளர்த்து பெரிதுபடுத்துகிறது. மேலும் 

மோசமான நிலைக்குத்தாக தள்ளுகிறது. ஆனால், இராமா, நீ புத்திசாலி.மகிழ்சசியுடன் 

இருப்பாயாக.மாயாக்காட்சி என்றால் மாயை தான். கனவு என்றால் இன்னுமொரு கனவு  

மட்டுமே.இவையெல்லாம் சர்வசக்தனான பிரம்மனின் மகத்துவமே.காணப்படுகின்ற பிரபஞ்சம் அந்த 

மகத்துவத்தின் வெறும் வெளித்தோற்றமே!

“இங்கு யார் யாருக்கு சொந்தம்? யார் யாருக்கு எதிரி? சகல ஜீவராசிகளும் பரமேசுவரனின் 

விருப்பத்திற்கிணங்க எல்லோரும் எல்லோருக்கும் எல்லாமாக எல்லாக்காலத்திலும் எல்லாமெல்லாவாக 

இருக்கின்றன.”

பந்தங்களின் நீரோட்டம் இடைவெளியில்லாமல் ஒழுகிக் கொண்டேயிருக்கின்றன தேர் சக்கரத்திலுள்ள 

ஆரங்கள் போல் மேலேயுள்ளவை கீழுக்கும் கீழேயுள்ளது மேலுக்கும் போய் வந்து 

கொண்டிருக்கின்றன. சொர்ககத்திலிருப்பவர் நரகத்தில் வீழ்கிறார்கள். நரகத்திலிருப்பவர் சொர்ககத்திற்கு 

உயருகிறார்கள்.ஒரினத்தில் பிறந்து, இறந்து, வேறொரு இனத்தில் பிறக்கிறார்கள்.உலகின் ஒரு 

மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு இடம் மாறுகிறார்கள்.வீரன் கோழையாகவும், கோழை வீரனாகவும் 

மாறி மாறி பிறவியெடுக்கிறார்கள்.பந்துக்களாயிருப்பவர்கள் சிறிது நாட்களுக்குப்பின் நம்மை விட்டு விலகிப் 

போய்விடுகிறார்கள்.மாற்றத்திற்கு ஆட்படாத ஒன்றும் இந்த உலகில் கிடையாது.புரிந்துகொள், இராமா.

மித்திரர்கள், சத்துருக்கள்,பந்துக்கள், அறிமுகம் இல்லாதவர்கள்,நான், நீ என்பன போன்ற வார்த்தைகளுக்கு 

உள்ளார்ந்த, நிரந்தரமான அர்த்தம் ஏதும் கிடையாது.அவை வெறும் வார்த்தைகள் மட்டுமே!குறுகிய 

மனமுடையவர்கள் ‘ அவன் என் சினேகிதன்’ ‘ இவன் என் எதிரி’ என்பன போன்ற சிந்தைகளால் 

அலட்டலுக்கு  உள்ளாவும்பொழுது, மனம் விசாலமானவர்கள் அம்மாதிரி சிந்தனைகளுக்கு 

ஆளாவதில்லை.இராமா, எல்லா ஜீவராசிகளும் உன் பந்துக்கள்தான்.இந்த பிரபஞ்சத்தில் ஒன்றுக்கொன்று 

பந்தமில்லாத ஒன்றுமேயில்லை.முதலும் முடிவுமாக பந்தமில்லாத ஒன்றுமே இல்லை.பந்தமின்மை என்பதே 

மித்யை.ஒன்றுக்கொன்று இடைவெளியை பூர்த்தி செய்கின்றன.’ நான் இல்லாத இடமொன்றுமில்லை’ ‘ 

எனதல்லாத என்ற ஒன்றுமே இல்லை’  என்ற  ஞானத்தில் அறிவாளிகள் ஆனந்த மடைகிறார்கள்.  அவ்வாறு 

அவர்கள் எந்த வரையறைகளுக்கு ட்படாத, எந்தவிதமான நிபந்தனைகளுக்கும் வாசனைகளுக்கும் ஆட்படாத 

நிலையில் முக்தர்களாக இருக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s