யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 235

தினமொரு சுலோகம்

நாள் 235

மரணம் ஒரு மித்யை

கிம் புத்ர கனதாம் ஶோகம் நயஸ்யாந்தைககாரணம்

பாஷ்பதாராதரம் கோரம் ப்ரவ்யூட்கால இவாம்புஜம் !
किम् पुत्र धनतां शोकम् नयस्यान्धैक कारणम्

बाष्पाधारम् घोरम् प्रव्यूट्काल इवाम्बुजम् !

வஸிஷ்டர் தொடர்ந்தார்: இராமா, அதுடன் தொடர்புள்ள ஒரு கதை உண்டு. சொல்கிறேன் கேள்.ஜம்பூ 

தீபத்தில் மஹேந்திரம் என்ற ஒரு பெரிய பர்வதம் இருந்தது.அதன் அஅடிவாரத்தில் இருந்த காட்டில் அனேகம் 

முனிமார்களும் வசித்து வந்தனர்.அவரக்கள் தங்களது தவ வலிமையால் தங்களது ஸ்நானம் மற்றும் மற்ற 

தேவைகளுக்காக, ஆகாய கங்கையைக் கூட கொண்டு வந்திருந்தார்கள்.ஆகாய கங்கையின் கரையில் 

தீர்க்க தபன் என்ற பெயருடைய ஒரு மாமுனிகள் வசித்து வந்தார்.அவரது பெயர் குறிப்பிடுவது போல் , அவர் 

நீண்டகாலம் கடின தவம் செய்து வந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள்- புண்யன் மற்றும் பவனன்.

இந்த புத்திரர்களில் புண்ணியன் போதம் உணர்ந்து  சத்திய சாக்‌ஷாத்காஅம் அடைந்தவனாக 

இருந்தான்.ஆனால் பவனன் அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு இருந்தாலும்,சத்திய சாக்‌ஷாத்காரம் இன்னும் 

அடையாதவனாகவிருந்தான்.அவன் அரைகுறை ஞானி என்ற நிலையிலிருந்தான்.கண்ணுக்கு புலப்படாததும், 

புரிந்து கொள்ள முடியாததுமானதாக காலத்தினுடைய நியதி காரணம் தீர்க்க தப முனிகள் பிரபஞ்ச 

வாழ்கைகையிலிருந்து விடுபட்டார். அவர் தனது தேகத்தை விடும்பொழுது அவருக்கு எந்த விதமான 

விருப்பங்களும் ஆஸக்திகளுகம்  இருக்கவில்லை.அவர் பூரண முக்தி நிலையை அடைந்திருந்தார்.ஒரு 

பறவை எவ்வாறு எந்த வித சங்கடமும் இல்லாமல் தன் கூட்டை விட்டு பறந்து போகுமோ அது போல் முனிகள் 

தனது உடலை விட்டு மறைந்து போனார்.தன கணவரிடமிருந்து யோக முறைகளை கற்றிருந்த முனி 

பத்தினியும் அவரைத் தொடர்ந்து பரலோகம் எய்தினார்.

தாய்- தந்தையிரின் இரவு பவனனை  மிகவும் வருத்தியது… அவன் வாய் விட்டு கதறி அழுதான்.புண்ணியனோ 

தாய்தந்தையருக்கான மரணத்திற்குப் பின் செய்ய வேண்டிய கர்மங்களை அமைதியாக செய்து 

முடித்தான்.அவனுக்கு மரணத்தினால் உண்டான தாய் தந்தையிரின் பிரிவு எந்த விதமான துக்கத்தையும் 

உண்டு பண்ணவில்லை.தன் சகோதரன் பவனிடம் சென்று இப்படி கூறலானான்:’ தம்பீ, நீ எதற்கு துயரத்தை 

வருந்தி அழைத்து உன்னை கஷ்டப்படுத்திக்கொள்கிறாய? அஞ்ஞானம் தான் , உன் கண்களிலிருந்து 

இடைவிடாமல் ஒழுகிக் கொண்டிருக்கும் உன் கண்ணீருக்கு காரணம். நம் பெற்றோர் முடிவாக போயுள்ளது 

மிகவும் உன்னதமான முக்தி நிலைக்கு என்பதை உணர்வாய்.எல்லோரும் போய் சேரவேண்டியதும் போக 

விரும்புவதும் அந்த இடத்திற்குத் தான்.இந்த உலகில் வாழும் பொழுதே ஆத்ம ஞானம் பெற்றவர்களின் 

நிலைமை அது தான்.அவர்கள் அவர்களுடைய சொரூப நிலைக்குத்தாக திரும்பியதில் நீ வருந்துவதற்கு என்ன 

இருக்கிறது?அஞ்ஞானத்தின் காரணமாக, நீ, அம்மா-அப்பா என்ற பந்தங்களில் அகப்பட்டு 

அழுகிறாய்.அம்மாதிரி அஞ்ஞானத்திலிருந்து முக்தியடைந்தவர்களைக், குறித்து நீ அழுகிறாய்.அது எவ்வளவு 

அறிவீனம்?அவர்கள் எப்பொழுதுமே உன்னுடைய தாய்தந்தையராக இருந்ததில்லை. நீயும் அவர்களது 

மகனாக எப்பொழுதுமே இருந்ததில்லை.அனேகம் ஜன்மங்களில் கணக்கிலடங்கா தாய்தந்தையர்கள் 

உனக்கிருந்திருக்கிறார்கள்.அவர்களுக்கும் எண்ணிக்கையிலடங்காத புத்திரர்கள் இருந்திருப்பார்கள்.நீ உன் 

தாய்தந்தையருக்காக வருந்துகிறாய் என்றால், ஏன் ‘ சகோதரர்களுக்காக’ வருந்தவில்லை?பாவனான 

பவனன் ( மாசற்ற ), நீ உலகமாக காண்பதெல்லாம் வெறும் பாயை தான்.உண்மையில் பெற்றோர்களும் 

இல்லை, உடன்பிறப்புக்களும் இல்லை.நண்பர்களுமில்லை;எதிரிகளுமில்லை.ஆகவே மரணமும், 

வேர்பிரிதலும் மித்யை தான்.நீ  காண்கின்ற ஐசுவரியங்களும் செல்வச்செழிப்பும் எல்லாம் மாயை 

தான்.அவைகளில சில மூன்று நாட்கள்,சில ஐந்து நாட்கள் இருந்து மறைகின்றன.ஆகவே நீ உன் புத்தியை 

பயன்படுத்தி உண்மையை விசாரித்து தெரிந்துகொள்.’ நான்’ ‘ நீ’ என்ற எண்ணங்களை விட்டொழி.’அவர் 

இறந்துவிட்டார்; என்னை விட்டு பிரிந்து போய்விட்டார்’ என்ற கற்பனைகளை உதறித் தள்ளு .ஏனென்றால் 

அவை வெறும் கற்பனைகள் தான்.அவை உண்மையல்ல.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s