யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 236

தினமொரு சுலோகம் 

நாள் 236

நடுநிலைமை

மத்யஸ்தத்ருஷ்டய: ஸ்வஸ்தா யதாப்ராப்தார்தத்ரஶின:

தஞ்ஞாஸ்து பரேக்ஷகா ஏவ ஸாக்‌ஷிதர்ம்மே வ்யவஸ்திதா:!

मध्यस्थद्रुष्टय: स्वस्था यथाप्राप्तार्थदर्शिन:

तज््ज्ज्ञास्तु प्रेक्षका ऐव साक्षिधर्म्मे व्यवस्थिता:!

புண்ணியன் தொடர்ந்தார்:” காற்று வீசும்பொழுது தூசி துரும்பு எல்லாம் பறந்து போவது போல் , அம்மா, 

அப்பா, நண்பர்கள்,பந்துக்கள் என்ற பொய்யான சங்கல்பங்கள் ஞான ஒளியில் காணாமலே போய்விடும்.இந்த 

பந்துக்கள் என்பதெல்லாம் உண்மையில்லை.வெறும் வார்த்தைகள் தான்.ஒருவனை நண்பன் என்று 

நினைத்தால் நண்பன்; அவனை வேறு ஒருவன் என்று நினைத்தால் வேற்று மனிதன்.ஆனால் எல்லாமே ஸர்வ 

வியாபியான பிரம்மம்தான் என்று உணர்ந்து விட்டால், மித்திரம் ஏதும், சத்துரு ஏது!

தம்பீ, நீ உன் உள்ளேயே தேடிப்பார்.இந்த சரீரம் வெறும் ஜடமே.சதைப பிண்டம்; இரத்தம், 

நரம்புகள்,எலும்புகள் இவையெல்லாத்தாலும் உருவாக்கப் பட்ட ஒரு கூடு தான் இது. இதில் ‘ நான்’ எங்கே?

 ‘ நீ’ எங்கே? இந்த விசாரணையைத் தொடர்ந்தால் இவை எல்லாமே பொய் என்ற உண்மை 

விளங்கும்.புண்ணியன், பவனன் என்று சொல்வதெல்லாம் கூட மித்யை தான்.அப்படியிருந்தும் உனக்கு ‘ நான்’ 

இருக்கிறது என்று தோன்றினால், யோசித்துப்பார்: உனக்கு முன் பிறவிகளில் இருந்த பந்துக்களைக் குறித்து 

ஏன் துயரம் அடைய மாட்டேன் என்கிறாய்?  அவர்களை நினைத்து ஏன் அழுவதில்லை? ‘நீ’ அன்னப்பட்சியாக 

பிறந்திருந்த பொழுது  உனக்கு அந்த இனத்தில் நிறைய சொந்த பந்தங்கள் இருந்திருப்பார்கள்.’ நீ’ மரமாக 

இருந்த பொழுது பல செடிகளும் மரங்களும், ‘ நீ’ ஒரு சிங்க்கமாகவிருந்தபொழுது அனேகம் சிங்கங்களும் 

உனக்கு பந்துக்களாய் இருந்திருப்பார்கள்.மீனாகவிருந்தபொழுது நிறைய மீன்கள் உனது பந்துக்களாய் 

இருந்திருப்பார்கள்.

‘நீ’ ஒரு அரசகுமாரனாயிருந்திருக்கலாம்; எருமையாகவும் இருந்திருக்கலாம்; ஆலமரமா இருந்திருக்கலாம்; 

பிராமணனாக பிறந்திருக்கலாம்; ஈ ஆக பிறந்திருக்கலாம்; கொசு, தேள்,எறும்பு, தேனீ, இதோ இப்பொழுது 

எனது சகோதரனாய் இருக்கிறாய். அதே போல் எனக்கும் பல பிறவிகள்இருந்திருக்கலாம்.என்னால் இந்த 

உண்மைகளையெல்லாம் உணர முடிகிறது.நான் தவளை, பட்சிகள், மரம்,ஒட்டகம், அரசன்,புலி, 

இப்படி எத்தனையோ பிறவிகள் எடுத்து இதோ உன் சகோதரனாகப்  பிறந்திருக்கிறேன்.பத்து வருடம் 

பருந்தாக இருந்திருக்கிறேன்; ஐந்து மாதம் திமிங்கலம்; .நூறு வருடம் சிங்கம்; இப்பொழுது உன் சகோதரன்.

இப்படி எண்ணிக்கையற்ற பிறவிகள் அஞ்ஞானத்தின்- பிரமையின் பிடியில் அகப்பட்டு,கடந்து போய்விட்டது. 

இவையெல்லாம் இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது.

அந்த பிறவிகளிலெல்லாம் எனக்கு நிறைய உற்றார் உறவினர்கள் இருந்தார்கள்.அவர்களில் யாரை நினைத்து 

நான் அழ வேண்டும்.?எனக்கு இவர்களில் யாரைக்குறித்தும் வருத்தமில்லை. வாழ்வெனும் னும் காட்டு வழியில் 

உதிர்நது கிடக்கும்பொழுது காய்த்துத் சருகுகள் இவர்கள். இந்த உலகில் மகிழ்ச்சியடைவதற்கோ துயரம் 

அடைவதற்கோ என்ன இருக்கிறது? ஆகவே, தம்பீ, நாம் அழுகையை நிறுத்தி விட்டு 

சாந்தியடைவோம்.உன்னுள் ‘நான்’ எனும் எண்ணத்தை உளவாக்கின்ற,உலகம் என்ற ப்பிரமையை 

அழித்திடுவோம்.கீழே விழாமலும், மேலே உயர்ந்து பறக்காமலும்,சமன் நிலையில் இருப்போமாக.உனக்கு 

துன்பமில்லை, பிறவியில்லை.அம்மாயில்லை, அப்பாயிலை.நீ ஆத்மா.வேறொன்றுமல்ல.

“முனிமார்கள் நடுநிலையான வழியை பின்பற்றுகிறார்கள்.அவ்வப்பொழுது காண்பதை அவை நொடியில் 

ஏமறையக் கூடியவை என்றுணர்நது, அமைதியாக இருக்கிறார்கள்.அவர்கள் சாக்‌ஷி போதத்தில் 

உறுதியாக நிலை கொள்கிறார்கள்.”

அவர்கள் இருளில் ஒளிர்கின்ற விளக்கு. விளக்கும், எண்ணையைப் திரியும் இல்லாமல் ஒளிர்கின்றவர்கள் 

அவர்கள்.அந்த ஒளியில் தான் எல்லாம் நிகழ்கின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s