யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 237

தினமொரு சுலோகம்

நாள் 237

மனோ விருத்திகளின் அழிவே முக்தி
தஸ்மாதாஸாமனந்தானாம் த்ருஷ்ணானாம் ரகு நந்தன

உபாயஸ்த்யாக ஏவைகோ ந நாம பரிபாலனம்!

तस्मादासामानन्तानाम् त्रुष्णानाम् रघुनन्दन 

उपायस्त्याग ऐवैको न नाम परिपालनम् ।
வஸிஷ்டர்தொடர்ந்தார்: ” தன் சோதரனின் மேற்படி வாதங்களையும் கேட்டு பவநனுக்கு போதம் 

உளவாயிற்று.இரண்டு பேருக்கும் உண்மையான ஞானம் உதித்துவிட்டதால் அந்த ஆனந்தத்தில் பரம 

சாந்தியை அனுபவித்தனர்.அவர்கள் காட்டில் மனம்போனபடி அலைந்து திரிந்தார்கள். அவர்களை எதுவும் 

பாதிக்கவில்லை.எண்ணை தீர்ந்து போன தீபம் அணைந்து போவது போல் அவர்கள் சிறிது காலத்திற்குப் பின் 

தேகத்தை வெடிந்தது முக்தரானார்கள்.

” இராமா, ஆஸக்தி தான் எல்லா துன்பங்களுக்கும் காரணம்.எல்லா ஆசைகளையும் துறந்து ,எதிலும் 

எந்த விதமான நாட்டமும் இல்லாமல் இருக்கும் ஒரே வழியைத் தான் புத்திசாலிகள் தேர்ந்தெடுப்பார்கள்.” 

எரிகிறது நெருப்பில் எண்ணையை ஹோமிக்க ஹோமிக்க அது இன்னும் வேகமுடன் எரிய ஆரம்பிக்கும்.அது 

போல் மனோ விருத்திகள் இன்னும் பல மனோ விருத்திகளுக்கு வழி வகுக்கும்.அவை வளராமல் இருக்க 

வேண்டுமென்றால் மனோ நாசம் உண்டாக வேண்டும்.ஆகவே இராமா, மனோ நிவ்ரித்தி எனும் தேரில் ஏறி 

அளவற்றதும் கிருபை நிரம்பியதுமான உள்ளுணர்வுடன் துன்பங்கள் நிறைந்த இந்த உலகை பார்ப்பாய்.

இந்த நிலை தான் பிரம்ம நிலை.எல்லாவிதமான சித்த விருத்திகளிலிருந்தும் விடுபட்ட, ஆசைகள் 

ஏதுமில்லாத, தூய, சுதந்திரமான ஒரு நிலை இது.முட்டாளாக இருந்தவர்கள் கூட,இந்த நிலையை 

அடைந்தவுடன் மனோ கற்பனைகளிலிருந்து விடுபட்டு அவைகளுக்கெல்லாம் புறம்பானவனாகிறான். 

ஞானத்தை நண்பனாக கொண்டு, ஆத்ம போதத்தை சகதர்மிணியாகக் கொண்டு வாழ்ந்தால் எந்த விதமான 

பிரமைகளுக்கும் ஆளாக மாட்டோம்.ஆசைகளற்ற மனதிற்கு கிடைக்க முடியாத விலைமதிப்பற்ற எந்த 

பொருளும் இந்த மூவுலகங்களிலும் கிடையாது.உடலுடன் பிறந்து விட்டதனால் ஏற்படும் ஏற்றத் -தாழ்வு 

எண்ணங்கள் எதுவும் ஆசையற்றவர்களை பாதிப்பதில்லை.மன நிறைவு பெற வேண்டுமென்றால் அதை 

மாசற்றதாக்க வேண்டும்.ஆசைகள் மன நிறைவை தராது.ஆசைகளும் ஆஸக்திகளும் அற்று போனவர்களுக்கு 

இந்த பிரபஞ்சம் பசுவின் குளம்பு  அளவு தான்;யுகங்கள் என்பதோ நொடியிடை தான்.

ஆசையற்றவனின் மனதிலுண்டாகும் குளிர்மை இமயத்தின் குளிர்மையை விடமேலானது.முழு நிலவின் 

குளிர்மையையோ, சமுத்திரத்தின் அசாந்தியோ, சர்வ ஐசுவரியங்களும் தரும் தேவதைகளோ எதுவும் யாரும் 

ஆசையற்றவனின் மன அமைதிக்கு ஈடாகாது.ஆசை, பேராசை, எதிர்பார்பபுகள் இப்படிப் பட்ட கிளைகளை 

வெட்டி எறிந்து விட்டால், மனமெனும் மரம் தன்னுடைய இயற்கை நிலைக்கு திரும்பும்.மன உறுதியுடன், ‘இனி 

எந்த ஆசைகளுக்கும் என்மனதில் இடமில்லை’  என்று உறுதி பூண்டு விட்டால், உனக்கு எந்த பயமும் 

உண்டாகாது.

மனதில் சிந்தைகளின் அலைகள் ஓடும்பொழுது,ஆசைகளும்,விருப்பங்களும் அலட்டாமலிருந்து 

விட்டால்,அங்கு மனமே இராது.மனமின்மை எனும் நிலை தான் முக்தி.ஆசைகளும் விருப்பங்களும் உள்ள 

நிலை விருத்தி எனப்படுகின்றது.மனதின் அலைபாயுதல் தான் விருத்தி.ஆசைகளில்லையென்றால் விருத்தி 

இல்லை.காரணம் இல்லாதாகும்பொழுது காரியமும் இல்லாதாகிறது..ஆகவே மன அமைதி பெறுவதற்கு அதை 

பங்கப்படுத்துகின்ற காரணங்களை  அழித்து விடு.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s