யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 238

தினமொரு சுலோகம்

நாள் 238

தமேவ புக்தவிரஸம் வ்யாபாரௌகம் புன: புன:

திவஸே திவஸே குர்வன்ப்ரக்ஞ: கஸ்மான்ன லஜ்ஜதே !

तमेव भुक्तविरसम् वयापारौघम पुन: पुन: 

दिवसों दिवसों कुरवनप्राज्ञ: कस्मान्न लज्जते !
வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, நான் முன்பு சொன்ன வழியை பின்பற்ற முடியவில்லையென்றால், பலி 

மகாராஜா செய்தது போல மன மாற்றத்தின் வழியாகவும் இந்த குறிக்கோளை அடையலாம்.நான் பலி 

மகாராஜாவின் கதையைக் கூறுகிறேன் கேள்.அதைக கேட்டால் நிரந்தர சத்யம் என்பது என்ன என்று 

புரியும்.

இந்த பிரபஞ்சத்தின் இன்னொரு பகுதியில் பாதாளம் எனும் உலகமுள்ளது.அங்கு மிகவும் 

அழகுடைய பெண்மணிகளும், ஒன்றுக்கு மேற்பட்டதலைகளுள்ள நாகங்களும் பெரும் உடலமைப்பு கொண்ட 

இராட்சதர்களும் வசித்து வந்தார்கள்.அங்கு எங்கும் அழுக்கு எதிலும் அழுக்கு என மாசடைந்த உலகமாக 

இருந்தது . அங்கு  எப்பொழுதும் மிகுந்த ஆரவாரத்துடன் ஒலி மிகுந்ததாக இருந்தது.அங்குள்ள குகைகளில் 

இரத்தின கற்கள் ஏராளமாக இருந்தன.கபில முனியின் காலடி பதிந்து புண்ணியமடைந்த இடங்களும் அங்கு 

இருந்தன.சுவரக்கவாசிகளான அப்சரஸுகள் உபாசிக்கின்ற ஹாடகேசுவரன் புனிதப்படுத்தின இடமும் அங்கு 

தான் உள்ளது.

விரோசனின் மகனான பலி இப்படிப் பட்ட பாதாள உலகை ஆண்டு வந்தான்.பிரபஞ்சத்திற்கெல்லாம் 

நாதனான ஶ்ரீ ஹரி தான் பாதாளதையும் பலி சக்கரவர்ததியையும் பாதுகாத்து வந்தார்.தேவர்களின் அரசனான 

தேவேந்திரன் கூட பலி ராஜனின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தான்.பலி ராஜனின் பிராபவத்தால்த் 

கடல்கள் கூட வற்றி வரண்டுப் போனது போல் தோன்றின.வெறும் ஒரு பார்வையாலையே மலைகளைக்கூட 

அசைக்க முடிந்தது அவரால்.அவர் நீண்டகாலம் பாதாள உலகை ஆண்டு வந்தார்.காலப்போக்கில் அவரில் 

ஒரு மன மாற்றம் உண்டாயிற்று. அவருக்கு எதிலும் ஒரு பற்று இல்லாமல் போய் விட்டது. ‘ நான் இன்னும் 

எத்தனை காலம் இந்த பாதாள உலகில் வாழணும்? மூவுலகங்களையும் சுற்றி வரணும்? இந்த நாட்டை 

ஆள்வதால் என்ன பயன்?இந்த மூவுலகங்களும் ஒரு நாள் அழியப் போகிறது என்று தெரிந்தும் மகிழ்ச்சியை 

எப்படி நாட முடியும்?

” மீண்டும் மீண்டும் வந்து போகின்ற இன்ப- துன்பங்களும், திரும்ப திரும்ப செய்கின்ற கர்மங்களும் என்ன 

பயனை தருகிறது?ஞானிகள் கூட இதில் நாட்டம் கொள்வதில் ஏன் வெட்கபடுவதில்லை? ”

திரும்பத் திரும்ப வருகின்ற இரவுகளுக்கும் பகல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.நதியின் நீர்ச் சுழி 

போல் வாழ்க்கை சுழன்று கொண்டேயிருக்கிறது.இதற்கெல்லாம் என்ன பொருள்? அந்த அர்த்தத்தை 

எப்படி கண்டு பிடிப்பது? இந்த ஜனன மரண சுழற்சியில் இன்னும் எத்தனை நாள் உழல வேண்டும்?இந்த 

சுழற்சியின் நோக்கம் தான் என்ன?”

இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டேயிருந்தான் பலி ராஜன்.’ஆஹா, இதே கேள்விகளுக்கான 

பதில்களை எனது தந்தை விரோசன் சொல்லியிருந்தாரே! அன்று நான் எழுப்பிய வினா இது தான்:

 ‘ தந்தையே,இந்த திருசிய பிரபஞ்சத்தின் நோக்கம் தான் என்ன? இந்த சக்கர சுழற்சி போல் வரும் 

நிகழ்வுகளின் அர்த்தம் தான் என்ன?என்று முடியும் இந்த சுழற்சி?என்று தான் மனதின் சஞ்சலங்கள் 

முடிவிற்கு வரும்?மற்றெதையும் நாடமல் எதை அடைந்தால் ஒருவன் பூரணத்துவத்தை அடைவான்?இந்த 

உலகம் தரக்கூடிய எந்த சுகானுபவங்களும் இந்த உலகில் நாம் ஆற்றும் எந்த கர்மங்களும் நம்மை அந்த 

பூரணத்துவத்திற்கு இட்டுச் செல்லாது என்று எனக்குத் தெரியும்.ஏனென்றால் அவை மனமயக்கத்தை 

அதிகரிக்கத் தான் செய்யும்.எவ்வாறு நான் அந்த பரமமான சாந்தி நிலையை அடைய முடியும்? எனக்கு 

உபதேசிப்பீர்களாக.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s