யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 239

தினமொரு சுலோகம்

நாள் 239

ஏக ஏவாஸ்மி ஸுமஹாம்ஸ்தத்ர ராஜா மஹாத்யுதி:

ஸர்வக்யத் ஸர்வக: ஸர்வ: ஸ ச த்ருஷ்ணீம் வ்யவஸ்தித:

एक ऐवास्मि सुमहांस्तत्र राजा महात्याति:

सर्वक्रित सर्वग: सर्व: स च त्रुष्णीम व्यवस्थित: !

விரோசனன் பலி ராஜனிடம் கூறினான்,” மகனே, மூன்று உலகங்களையும் தன்னுள் கொண்ட ஒரு மண்டலம் 

இருக்கிறது.அதில் மலைகளோ, ந்திகளோ, பொய்கைகளோ, காடுகளோ, பூமியோ, ஆகாயமோ, நீயோ, 

நானோ, ஏன் தேவர்களோ, மஹாவிஷ்ணு முதலிய தெய்வங்களோ கூட கிடையாது.’ அங்கு இருப்பது 

பரமமான அந்த ஒளி மட்டுமே.அது தான் சர்வ வல்லமை படைத்ததும் எங்கும் வியாபித்திருப்பதுமான 

எல்லாவற்றின் உட்பொருளான சத்’.அது தான் எல்லாவற்றின் எல்லாம்.அது சாந்தமாக, 

செய்வதற்கேதுமில்லாத ஒன்றாய் நிலை கொள்கின்றது. மஹாராஜாவான அவரின் ஆணைக்கிணங்க 

ஒரு மந்திரி தான் கர்மங்கள் ஆற்றுகின்றார்.அவர் இல்லாததை உண்டுபண்ணுகிறார்; இருப்பதை உருவ 

மாற்றத்திற்கு ஆளாகின்றார்.மந்திரியோ எதையும் அனுபவிக்கவும், ஆஸ்வதிக்கவும் இயலாதவராக 

இருக்கின்றார்.

அஞ்ஞானியும் அறிவிலியுமான மந்திரி அரசனின் ஆணைகளை கேள்வி கேட்காமல் நிறைவேற்றுகிறார். அரசன் 

தனிமையில் பரம சாந்தமாக காட்சியளிக்கிறான்.

பலி ராஜன் தந்தையிடம் வினவினான்: ‘ தந்தையே, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தீங்கு விளையாத 

மண்டலங்கள் ஏதாவது உள்ளதா? யார் இந்த அரசனும் மந்திரியும்?இந்த கதை மிகவும் விசித்திரமானது 

இருக்கிறதே! நான் இது வரை கேள்விப் பட்டதேயில்லையே!கொஞ்சம் விபரமாக்க் சொல்லவும்’

விரோசனன் சொன்னார்,” தேவர்கள்- அசுரர்கள் எல்லோரும் சேர்ந்து படையெடுத்து வந்து  போராடினாலும் 

இந்த மந்திரியை வெல்ல இயலாது.அவன் தேவேந்திரனுமில்லை; மரண தேவனான  எமதர்மனுமில்லை; சகல 

செல்வங்களுக்கெல்லாம் அதிபதியான குபேரனுமல்ல.உன்னால் அவ்வளவு எளிதாக வெல்லக்கூடிய தேவனை 

அசுரனோ அல்ல.பகவான் விஷ்ணு அசுரர்களை கொன்று குவித்ததாக நீ கேள்விப் பட்டிருப்பாய்.உண்மையில் 

இந்த மந்திரி தான் இதையெல்லாம் செய்தது.விஷ்ணு பகவான்கூட இந்த மந்திரியின் ஜால வித்தையெனும் 

வலையில் விழுந்து பல ஜன்மங்கள் எடுக்க வேண்டி வந்தது என்பது உனக்கு ஞாபகம் இருக்கலாம்.காமனுக்கு 

சக்தி நல்குவதும் இந்த மந்திரி தான்.கோபத்தின் சக்தியின் உறைவிடமும் இந்த மந்திரி தான்.

இந்த மந்திரியின் விருப்பத்திற்கிணங்கத்தான் எல்லா நன்மை- தீமைகளிடையேயான போராட்டங்களும் 

நிகழுகின்றன.இவரை வெல்ல அந்த அரசனால் மட்டுமே முடியும்.காலப்போக்கில் மந்திரியை தோல்வியடைய 

செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருள்  எழுந்தால் அது நொடியிடையில் இயலக்கூடிய காரியமே.இந்த 

மூவுலகங்களிலுமுள்ளவர்களில் வீராதி வீரன் அந்த மந்திரி. மூவுலகங்களுமே அவர் விடுகின்ற மூச்சுக்காற்றே ! 

உன்னால் அவரை வெல்ல முடிந்தால் நீ மாபெரும் வீரனாகி விடுவாய். இந்த மந்திரி விழித்தெழும்பொழுது 

மூன்று உலகங்களும் தோன்றுகின்றன.தாமரை சூரியனைக்க கண்டால்த் தான் மலர்கின்றது.அவர் 

உறங்கும்பொழுது மூவுலகங்களுக்கும் உறங்கி விடுகின்றன.

உன் மனதை ஒருமுனைப்  படுத்தி,எல்லா மாயா மயக்கங்களிலிருந்தும் விடுபட்டு, அஞ்ஞானம் சிறிதும் 

இல்லாத ஒரு நிலையை அடைந்தால் உன்னால் அவரை வெல்ல முடியும். அவரை  வென்று விட்டால் 

மூவுலகங்களிலுள்ள எல்லாம் உனக்கு சொந்தம்.அவரை வெல்ல முடியவில்லை என்றால் உன்னால் எதையும் 

வெல்ல முடியாது.அவரை வெல்லாமல் மற்ற எதை வென்றாலும் அதற்கு ஒரு மதிப்பும் கிடையாது.ஆகையால் 

மகனே, நீ உன் திறைமையையெல்லாம் பயன்படுத்தி எல்லா தடைகளையும் இல்லாதாக்கி அவரை வென்று 

பரம சாந்தியையும் சமாதானத்தையும் அடைந்து ஆனந்தப்படுவாய்’..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s