யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 240

தினமொரு சுலோகம்

நாள் 240

விஷயான்ப்ரதி போ: புத்ர ஸர்வநேவ ஹி ஸர்வதா

அனாஸ்தித்வம் பரமா ஹ்யேஷ்யா ஸா யுக்திர்மனஸோ ஜயே !

विषयान् प्रति भो: पुत्र सर्वानेव हि सर्वथा 

अनास्था परमा  ह्येषा सा युक्तिर्मनसो जये !
பலி ராஜன் கேட்டான் ,” தந்தையே, இந்த அதிபலசாலியான மந்திரியை எந்த வழியில் சென்று வெல்லாம்

என்று சொல்வீர்கள்!”

விரோசனன் சொன்னார்,” இந்த மந்திரி வெல்ல முடியாதவராக காட்சியளித்தாலும் அவனை வெல்வதற்கான 

வழியை நான் சொல்கிறேன் கேள்.

புத்திசாலித்தனமான கர்மங்களை ஆற்றுவதன் மூலம் அவனை ஒரு நொடியில் வென்று விடலாம்.அப்படி 

செய்யாவிடில், அவன் ஒரு விஷ பாம்பைப் போல் எல்லாவற்றையும் எரித்து கரியாக்கி விடுவான்.

அவனை புத்திபூர்வமாக அணுகுவதற்கு ஒரு குழந்தையைப் போல் அவனுடன் விளையாட்டுக்களில் 

ஈடுபட்டு,அந்த விளையாட்டில் அவனை கீழ்ப்படுத்துகிறான் புத்திசாலி.அப்படி அவன் அமைச்சரைத் தாண்டி 

அரசனை தரிசிக்க இயலும் அந்த தரிசனம் அவனுக்கு பரமபதத்திற்கான பிராப்தியை அளிக்கும்.ராஜாவை 

பார்ததுவிட்டால் ராஜாவின் ஆசி கிடைத்து விட்டால் மந்திரியை தன் சொல்லுக்கு கட்டுப் படுத்தலாம்.மந்திரி 

தன் கட்டுப் பாட்டில் வந்து விட்டால் ராஜாவை இன்னும் அருகில சென்று தரிசிக்கலாம்.ராஜாவைக் காணும் 

வரை மந்திரி உங்கள் கட்டுப்பாட்டில் வர மாட்டான்.ஆனால் மந்திரி தன் கட்டுப்பாட்டிறகுள் வந்தால்த் தான் 

ராஜாவைக் காண முடியும்.ராஜாவை தரிசிக்கிற வரை மந்திரி தொந்திரவுகள் தந்துகொண்டே 

இருப்பான்.துன்பம் தந்து கொண்டேயிருப்பாள்.ஆகவே புத்தியின் முயற்சி இரு முனை கொண்டதாக இருக்க 

வேண்டும்.ஒன்று ராஜாவை தரிசிப்பதற்கான முயற்சி; இன்னொன்று மந்திரியை கட்டுப்பாட்டிற்குள் 

கொண்டுவருவதற்கான முயற்சி.நிரந்தரமான சாதகத்திலிருந்து மட்டுமே இது முடியும்.அப்படி முயன்றால் 

இன்ப- துன்பங்களெல்லாம் இல்லாத நிலையை அடையலாம்.அங்கு நித்ய சாந்தியையும் ஆனநத்தையும் 

அனுபவிக்கும் முனிகள் வாழ்கிறார்கள்.

மகனே, நான் இன்னும் சற்று தெளிவாகவே சொல்லுகிறேன் , கேள்.நான் சொன்ன அந்த ராஜ்ஜியம்- 

பரமானந்தத்தை நல்கக் கூடிய இடம- முக்தி பதம் எனப்படுகிறது. அங்கு துன்பங்களில்லை. அதன் அரசன் 

ஆத்மா தான்.ஆத்மா எல்லா போத நிலைகளுக்கும் மேற்பட்டது. மனம் தான் மந்திரி.இந்த மனம் தான் வெறும் 

களிமண்ணிலிருந்து குணமும் பானையும் உருவாக்குகிறது.இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினேன் இந்த மனம் 

தான்.மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டாலெல்லாவற்றையும் வென்று 

விடலாம்.புத்திசாலித்தனமான கர்மங்களினால் மட்டுமே மனதை வெல்ல முடியும்.”

பலி ராஜன் மீண்டும் கேட்டான்,” தந்தையே , எந்த விதமான புத்தி சாதனை செய்தால் மனதை கட்டுப்் படுத்த 

முடியும்?”
.விரோசனன் கூறினார்,” ‘எந்நேரமும் விஷய வஸ்துக்கள் குறித்துள்ள எதிர்பார்பபுக்களிலிருந்து, 

ஆசைகளிலிருந்து,மோகங்களிலிருந்து, பூர்ணமான விடுதலை பெறுவது ஒன்று தான் மனதை வெல்வதற்கான 

வழி’.இவ்வாறு மிகவும் வலிமை வாய்ந்த மனதை – அந்த மதம் பிடித்த யானையை- வெல்ல முடியும்.இதுவும 

மிகவும் எளிதானது தான்; ஆனால் மிகவும் சிரமமானதும் கூட. நிரந்தர சாதகம் செய்ய இயலாதவர்களுக்கு 

மிகவும் கடினமான காரியம்.ஆனால் சுய முயற்சியால் எந்த விதமான ்அலைக்கழிப்பிற்கு இல்லாதவனுக்கு 

இது மிகவும் எளிது.விதைக்காமல், நீர்பாய்சசாமல், உரமிடாமல் அறுவடை செய்ய முடியாதல்லவா? அது 

போல தான் இதுவும்.நிரந்தர முயறசியில்லாமல் மனதை கட்டுப் படுத்த இயலாது.ஆகவே, தியாகத்தின், 

சன்னியாசத்துக்கான வழியை பின்பற்று, மகனே.புலன் கள் காரணம் உளவாகின்ற இன்பங்களிலிருந்து மீண்டு 

வராமலே இந்த உலகிலுள்ளண்டாகின்ற துன்பங்களிலிருந்து விடுதலை கிடைககாது.எவ்வளவு வலிமை 

படைத்தவனாயிருந்்தாலும் இலக்கை அடைய  என்றாவது பயணத்தை துவங்கத் தான் வேண்டும்.பூரணமான, 

‘தனது’ என்ற எண்ணத்தை விட்டு விடவேண்டும்.ஆசாபாசங்களில்லாத நிலையை அடைய வேண்டும்.அதற்கு 

தடையில்லாத முயற்சி மிகவும் அவசியம்” .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s