யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 241

தினமொரு சுலோகம்

நாள் 241

அவஶ்யம் பாவிதவ்யாக்யா ஸ்வேஹயா நியதிஶ்ச யா

உச்யதே தைவஶப்தேன ஸா நாரைரேவ நேத்ரன்:

अवश्यं भावितव्याख्या स्नेहया नियतिश्च या

उच्यते दैवशब्देन सा नरैरेव नेत्रों:!

விரோசனன் தொடர்ந்தார்,” தகுந்த- பொருத்தமான முயற்சியினால் மட்டுமே நம்மால்

‘ நிர்மமதை’ யை அடைய முடியும்பொழுது கடவுளின் கருணை, விதி என்றெல்லாம்

சொல்கிறார்கள்.ஆனால் நாம் உலகில் காண்பதெல்லாம் உடலை மட்டும்

தான்.கடவுளை காண்பதில்லை.’ ஜனஙள் கடவுள் என்று சொல்லும்பொழுது,

அவர்கள் குறிப்பிடுவதெல்லாம், தவிர்க்க முடியாத கர்மங்களைத்தான்,தங்கள்

சக்திக்கோ மீறின, தங்கள் கட்டுப்பாட்டில் அடங்காத, இயற்கையின் நியதிப்படி

நிகழும்சஹஜமான நிகழ்வுகளைத்தான குறிப்பிடுகிறார்கள்’.ஆனால், பூரண சமதா

பாவம்-சமன் நிலை- இன்ப- துன்பங்களுடைyமுடிவிற்கும் கடவுளின் கருணை என்றே

கூறுகிறோம்.

கடவுளின் கருணை, இயற்கை நியதி, சரியான சுய முயற்சி என்பதெல்லாம் ஒரே

ஒரு உண்மையைக்கு தான் குறிப்பிடுகிறது.தவறான கண்ணோட்டம், அல்லது பிரமை

தான் இவைகள் எல்லாம் வெவ்வேறு என்று எண்ண தூண்டுகிறது.

சுயமுயற்சியால்,மனம் செயற்கையாக உளவாக்கும் எண்ணங்கள்

பலனளிக்கும்பொழுது, பலனளிக்கின்றது என்று மன்னன் புரிந்து கொள்ளும்பொழுது

மகிழ்ச்சி என்ற அனுபவம் உண்டாகின்றது.

மனம் தான் கர்மங்களை ஆற்றுவதும்.இயற்கையின்படிமனம் பலதையும்

யோசிப்பதும்,அவைகளை உற்பத்தி செய்வதும், அவைகளை வெளிப்படுத்துவதும்

மனம் தான்.மனத்தால் இயற்கைக்கு விபரீதமாகவும் சிந்திக்கவும் செயலாற்றவும்

முடியும்.ஆகவே மனம் இயற்கையை கட்டுப்படுத்துகிறது என்றும்

சொல்லலாம்ஆகாயத்தில் காற்று பயணிப்பது போல் மனித ஜீவன்கள் இவ்வுலகில்

அலைகின்றது.அதன் செயல்கள் சுயநலம் நிறைந்தவையும்,அகங்காரத்தின்

விளைநிலமாகவும் தோற்றமளிக்கிறதென்றாலும்,இயற்கை நியதிகளுக்குள் ஜீவன்

ஆற்ற வேண்டிய கர்மங்களை அவை ஆற்றவும் செய்கின்றன.இயற்கை நியதிப்படி

ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு பயணித்துக் கொண்டோ, ஒரே இடத்தில் அசையாமல்

நின்றுகொண்டு அவை செய்ய வேண்டிய கர்மங்களை செய்கின்றன.இவையெல்லாமே

தவறான புரிதல் தான்.மலையின் உச்சியிலுள்ள மரத்தின் கிளைகள் காற்றில்

அசைந்தாடும் பொழுது மலை தான் அசைந்தாடுகிறது என்று தோன்றுவது போல்தான்

இதுவும்.அது எப்படி தவறோ அப்படி இந்த எண்ணமும் தவறே.மனம்

இருக்கும்பொழுது கடவுள் இல்லை; இயற்கையிலையே; மனம் அழியும்பொழுது

ஒன்றுமேயில்லை. என்ன வேண்டுமானாலும் நிகழட்டும் . எந்த எண்ணமும்

தோன்றாது.

பலி கேட்டான்:’ மகானான் தந்தையே! இனபங்கிளினபாலுள்ள இசையையும் முடிவை

எப்படி மனதில் உறுதிப் படுத்த முடியும்?’

விரோசனன் கூறினார்:’ மகனே! ஆத்ம வித்யை எனும்போது மெல்லிய கொடியில்த்

தான் இன்பத்தின்பாலுள்ள ஆஸக்தியின் முடிவு எனும் கனி காய்க்கின்றது.அது

உண்டாவதோ? ஆத்மதரிசனம் பெற்ற பிறகு தான்.அதன் பிறகு அனாஸக்தி உறுதிப்

படும்.ஒரே நேரத்தில் புத்திபூர்வமாக விசாரமார்ககத்தின் வழியாக ஆத்மாவை

காணவும்,ஆஸக்திகளை விட்டுவிடவும் இயலணும்.

புத்தி விழித்தெழும்பொழுது ஒருவன் தன் மனதின் கால் பகுதியை வேத

சாஸ்திரங்களை படிப்பதிலும்,இன்னொரு கால் பகுதியை குரு பூஜையிலும் மீதியை

மட்டும் வஸ்து விஷயங்களிலும் ஈடுபடுத்த வேண்டும். புத்தி சிறிதே

விழித்தெழும்பொழுது மனதின் சரி பாதியை குரு பூஜைக்கும் மீதி இரண்டு பங்காக்கி

ஒரு பாதியை சாஸ்திரங்களை படிப்பதிலும் இன்னொரு பாதியை உலக

விஷயங்களிலும் செலவிடாமல.புத்தி முழுவதும் உண்ரர்நதெழுந்தவன் குருபூஜையிலும்

சாஸ்திரங்களை படிப்பதிலும் மட்டும் அக்கறை காட்டுவான் 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s