யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 242

தினமொரு சுலோகம்

நாள் 242

அனாஸக்தியும் ஆரத்ம விசாரமும்

தேஶக்ரமேண தனமல்ப விகர்ஹரணேன

தேனாங்க ஸாதுஜனமர்ஜய மானபூர்வம்

தத்ஸங்கமோத்தவிஷயாத்யவ ஹேளலநேன

ஸம்யக்விசாரவிபவேன தவாத்மலாப:
விரோசனன் தொடர்ந்தார்:” உள்ளத்தில் நன்மை நிறைந்திருக்கும்பொழுது தான் ஒருவன் வேத 

சாஸ்திரங்களை கேட்டறிவதற்கு யோக்கியதை- தகுதியுடையவன்- உள்ளவனாகிறான்.ஆகவே மனதை எது 

தூய்மைப்படுத்துமோ அதைத்தான் ஒருவன் அறிய முயல வேண்டும்.வேத சாஸ்திரங்களை படிப்பதன். 

மூலம்தான் மனதை திடப்படுத்தி,உள்ளார்ந்த மாற்றத்திற்கு வழி வகுக்க முடியும்.அப்படிப்பட்ட மாற்றத்திற்கு 

உள்ளான மனம் எதிலும் சஞ்சலப்படாமல், சத்தியத்தை தேடிப் போக முடியும்.காலப் போக்கில்  

அவன் ஆத்மாவை தரிசிக்கவும் முடியும்.

ஆத்ம சாக்‌ஷாத்காரமும் ஆஸக்தியின்மையும் ஒரே நேரத்தில் முன்னேற வேண்டும்.உண்மையான அனாஸக்தி- 

விருப்பு- வெறுப்பின்மை ஒருவன் அடைவது, தவம் இருப்பதாலோ, தீர்த்த தலங்களுக்கு யாத்திரை 

போவதாலோ, தான-தர்மங்களாலோ அல்ல. அதுண்டாவது ஆத்ம சாக்‌ஷாத்காரத்தின்மூலம்தான்- தான் யார் 

என்று அறிவதன் மூலம் தான் என்பதில் ஐயம் கொள்ளாதே, மகனே! இதற்கு வேண்டியதெல்லாம் சுய முயற்சி 

தான்.ஆகவே சாதகன்- ஆத்மாவை அறிய முயலுகிறவன்- தான் யார் என்ற விசார மார்ககத்தில் 

பயணிப்பதால்த்தான் ஆத்ம சாக்‌ஷாத்காரம் அடைய முடியும். கடவுளையோ, விதியையோ நம்பி 

பயனில்லை.தன் முயற்சியால் இவ்வுலகில் சுக போகங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும்.எதுவும் 

தனதில்லை- நிர்மமதை- என்ற எண்ணம் அவனில் பக்குவப்படும்பொழுது, ஆத்ம வேட்கை அவனில் தானே 

முளை விடும்.அப்படிப்பட்ட தேடுதலிலுள்ள உத்வேகம் அவனது ‘ தனதில்லை’ என்ற என்ற மனப்பாங்கை 

உரமிட்டு உறுதிப். படுத்துகின்றது.ஆத்ம விசார உத்வேகமும் அனாஸக்தி மற்றும் நிர்மமதையும் கடலும் 

மழையும் மேகமும் என்ற போல் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன.இவை மூன்றும் உற்ற 

நண்பர்களை போன்றவை தான்.

ஆகவே  துவக்கத்திலேயே ஈசுவரன் முதலியவற்றை எதையும் சாராமால் பல்லைக் கடித்துக் கொண்டு 

கடும்முயற்சி செய்து அனாஸக்தியை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.ஆனால் அதற்காக லௌகீக 

கர்மங்களில் ஈடுபட வேண்டாம் என்பதில்லை.உலக நியதிகளுக்குள் உட்பட்டு பொருளீட்டுவதில் தவறில்லை. 

ஆனால் பொருளின்மீது பற்று உண்டாகிவிடக்கூடாது.அம்மாதிரி கர்மங்களால் உற்றாரும் சுற்றத்தாரும் 

பாதிக்கப் படவும் கூடாது.ஈட்டும் பொருள் புண்ணியாத்மக்களுடன் சத்சங்கம் சேருவதற்கும் போற்றுவதற்கும் 

உதவ வேண்டும்.அம்மாதிரியான சதங்களுடன் அனாஸக்தியை வளர்பபதற்கு உதவும்.அவ்வாறு ஆத்ம 

விசாரமார்ககத்தில்,வேத சாஸ்திரங்களை கற்றுக் கொள்வதும்  அதன் வழிகள் ஞானம் பெறுதலும் 

சகஜமாகிவிடும்.அந்த முயறிசிகளின் பயனாக, அடி மேல அடியாக அவன் பரமானந்தமான சத்தியத்தில் 

சென்றடைவான்..

பிரபஞ்ச சுகங்கள் தரக்கூடிய எல்லாவித இன்பங்களிலிருந்தும் விடுபடும்பொழுது ஒருவன் ஆத்ம விசாரத்தால் 

நித்திய சத்தியத்தை கண்டறிகிறான்.ஆத்மா பூர்ணமாக மாசற்றதாகும்பொழுது உனக்கு பரம சாந்தி 

கிடைக்கும்.அதன் பிறகு மீண்டும் துன்பம் தரக்கூடிய வாசனைகள் என்ற சேற்றில் விழ வேண்டி 

வராது..தொடர்நது இந்த பிரபஞ்சத்தில் வாழவேண்டி வந்தாலும் நீ எல்லாவிதமான சபலங்களுக்கும 

சஞ்சலங்களுக்கும் அப்பாற்பட்டவனாக இருப்பாய்.நீ முற்றிலும் களங்கமற்றவனாக இருப்பாய். எல்லா 

நன்மைகளின் உருவகமாயிருக்கின்ற உனக்கு என் வணக்கம்.

‘ அந்த அந்த நேரத்தில்- காலத்தில் நிலவிலுள்ள இயற்கை நியதிகளின்படி பொருளீட்டுவதில் தவறில்லை. 

அதை  பயன்படுத்தி மகான்களுடன் சத்சங்கம் ஏற்படுத்திக்கொளவாயாக.அவர்களை 

மதிப்பாயாக.அம்மாதிரி சத் சங்கம் உன்னை லௌகீக சுகானுபவங்களில் பிடிப்பில்லாதவனாக்கும்.அதன் 

பிறகு சரியான சத்யத்தை தேடலில் மூலம் ஆத்மஞானம் உன்னில் உதயமாகும்

‘.
   

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s