யோகவாஸிஷ்டம என்ற மஹாராமாயணம் 243

தினமொரு சுலோகம்

நாள் 243

பவ்யேஸி சேத்ததேதஸ்மாத்ஸர்வமாப்னோஷி நிஶ்சயாத்

நோ சேத்தத்வஹ்வபி ப்ரோக்தம் த்வயி கஸ்மனி ஹுயதே!

பலிராஜன் தானே சொல்லிக்கொண்டான்:” என் அதிருஷ்டம்;தந்தை சொன்னது தகுந்த நேரத்தில் ஞாபகத்திற்கு வந்தது.இப்பொழுது எனக்கு லௌகீக சுகங்களின்பாலுள்ள எல்லா விருப்பமும் அற்றுப் போய்விட்டன.எனக்கு முதற்கண் சம்மான அந்த சாந்தி நிலையை அடைய வேண்டும்.திரும்பத் திரும்ப செல்வம் சேர்பபதிலும், ஆசைகளையு பீஊர்ததி பண்ணுவதிலும் புலனின்பத்திலுமுள்ள ஆஸக்தி அற்றுப் போய்விட்டன.இந்த சுகமான சாந்தமான நிலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.இது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.உள்ளார்நத சாந்தியில் மற்றெல்லா இன்பங்களும் செல்லாக் காசாகிவிட்டன.வாழ்ககை என்பது அனுபவங்களின் தொடர் கதை தான். திரும்பத் திரும்ப அதே நிகழ்வுகள்; அதே அனுபவங்கள்.எந்த விதமான புதுமையுமே இல்லை.

நான் எல்லாவற்றையும் மனதால் உதறித் தள்ளிவிட்டேன்.இனிமேல் ஆத்ம சொரூபத்தில் லயித்து மகிழ்சசியில் மூழ்கப் போகிறேன்.இந்த பிரபஞ்சமே மனதின் கற்பனை தானே! அதை தியாகம் செய்வதால் நமக்கென்ன நஷ்டம்? மனமாற்றத்தைக் குறித்துள்ள இந்த விவாதம் போதும்.வியாதிக்கு வேண்டியது வைத்தியம் தான்.முடிவில்லாத விஙாதங்களினால் எந்த பயனுமில்லை.’ நான் யார்?’ ‘ இவையெல்லாம் என்ன?’ என்ற கேள்விகளை சுக்ராச்சாரியரிடமே கேட்போம்.”

வஸிஷ்டர் தொடர்ந்தார்”இவ்வாறு மனதில் தீருமானித்த பலிராஜன் சுக்ராச்சாரியரிடமே மனதில் தியானிக்க ஆரம்பித்தான்.எப்பொழுதும் அனந்தாவபோதத்தில் பரம சாந்தி கொண்டிருந்த ஆச்சாரியார் தனது சீடனின் பிரார்த்தனையை புரிந்து கொண்டு  அதே நொடியில் பலி ராஜன் முன்னால் பிரத்தியட்சமானார்.குரு வைக்க் கண்டவுடன் பலி ராஜனின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தோன்றியது; தெய்வீகக் களை உண்டாயிற்று.பலிராஜன்  குருவை பணிவுடன் வரவேற்று பாத பூஜை செய்து நமஸ்கரித்தான்.

பிறகு ஆச்சாரியரிடம் கேட்டான்:’ பகவான்,தங்களுடைய தெய்வீக சக்தியின் ஒளிதான் என்னை இந்த கேள்விகளை தங்களிடம் கேட்க என்னைத் தூண்டியது.எனக்கு லௌகீக சுகங்களின் எவ்விதமான விருப்பமும் இல்லை.ஆனால் எனக்கு உண்மையை அறிய ஆவல் உள்ளது.நான் சார்? தாங்கள் யார்? இந்த பிரபஞ்சம் தான் என்ன? இவையே எனக்கு தங்கள் சற்றே விளக்கி கூறுவீர்களாக.’

சுக்ராச்சாரியர் கூறினார்:” நான் இன்னொரு காரியமாக சென்றுகொண்டிருக்கிறேன். ஆகவே சுருக்கமாக உன். சந்தேகங்களுக்கும் விளக்கம் கூறுகிறேன், கேள்.’ போதம் ( பிரம்மம்) மட்டும் தான் உண்மையாக உள்ளது.இங்கு காண்பதையும் காணப்படாமையால் இருப்பவையும் எல்லாம் அந்த போதம் தான்.எங்கும் நிறைந்து நிற்பதுண்டு போதம் தான்.நீயும் நானும் இந்த உலகமும் எல்லாம் போதமல்லாமல் வேறொன்றல்ல.’ 

‘ உனக்கு பணிவும் உள்ளார்ந்த ஆர்வமுற்று இருந்தால் நான் இப்பொழுது சொன்னதிலிருந்தே எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும்.அப்படியில்லையென்றால் எவ்வளவு விவரித்தாலும் அது நெருப்பு அணைந்துவிடாமல் வெறும் சாம்பலை மட்டும் மிஞ்சியிருக்கும் ஹோமகுண்டத்தில் அர்க்யம் அர்ப்பணிப்புள்ள போல் வீண் வேலையாகும்.’ எரிந்து கொண்டிருக்கின்றோம் ஹோமகுண்டத்தில் அர்க்யத்தை ஹோமித்தால்த் தான் அவை அக்னியில் எரிந்து சேர வேண்டியவர்களையும் சேரும். என்பது உனக்குத் தெரிந்ததே! 

போதத்தில் உளவாகின்ற விஷய வாசனைகள், கற்பனைகள் தான் பந்தங்கள்.அவைகளை நிரப்புதல்- ஒதுக்கித்தள்ளுங்கள் தள்ளுவது தான் முக்தி.அவபோதத்திலிருந்து விஷயங்களில் குறித்துள்ள ‘ அறிவை’ எடுத்துவிட்டால் மீதமிருப்பது சத்தியமான போதம் மட்டும் தான்.எல்லா த்த்துவ ங்களின் அடிப்படையும் இது தான்.இந்த உணர்வில் திடமாக நின்றுகொண்டிருந்தால் நீ அனந்தாவபோதத்தைக் காண முடியும்.எனக்கு வேறு சில கர்மங்கள் ஆற்ற வேண்டியுள்ளதால்,நான் விடை பெறுகிறேன்.சரீரம் உண்டாகிவிட்டால் அதற்கான கர்மங்களை ஆற்றாமலிருப்பதாலும் முடியாதல்லவா! 

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s